இளம் பெண் மாயம்

உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
இளம் பெண் மாயம்
Published on

செய்யாறு:

வெம்பாக்கம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. இவரது 21 வயதுடைய மகள் பிளஸ் 2 முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 29-ந் தேதி இளம் பெண் கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

அவர் கிடைக்காததால் இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com