நெல்லை சந்திப்பில் உறவினருடன் ஜவுளி எடுக்க சென்ற பெண் மாயம்

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39).இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.
குப்பம்மாள் என்ற ராஜி.
குப்பம்மாள் என்ற ராஜி.
Published on

நெல்லை:

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

அன்று மாலை வீடு திரும்பிய ராஜி மகளை மட்டும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் காரில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த சுப்பிர மணியம் பல இடங் களில் தேடிப் பார்த்தும் ராஜியை காண வில்லை.

அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச்-ஆப்' ஆகி இருந்தது. எனவே மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான ராஜியை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com