என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளர்நல்லூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (19), ஆதினேஷ் (22), வேலு (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பயணித்த கார் விபத்துக்குள்ளானத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது 7 வயது மகன் முன்னிலையில் தனது கணவரை கொன்று, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முகேஷ் பர்மருக்கும், அவரது மனைவியான சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சங்கீதா, கணவரை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார், திருமணம் மற்றும் நிதி பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    • கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
    • கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கட்சிபெருமாள் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. கடந்த 14-ந்தேதி இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.

    மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு அதில் இருந்த 48 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், மேலும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர் பட்டப்பகலிலேயே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.

    இதுகுறித்து வசந்தா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. சீராளன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களூக்கு சென்று கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன்(வயது 27), மணிக்காளை(29), சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த அழகு பாண்டி(24), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனசிங்(22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(24) ஆகிய 5 பேர் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் கொள்ளையர்கள் 5 பேரும் மதுரையில் பதுங்கி இருப்பதும் தெரிவந்தது. இதையடுத்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மதுரை சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 37 பவுன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி, 40 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் திருட்டுக்கு உபயோகித்த கார் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • ராமாயி அம்மாள் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார்.
    • அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி 

    சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ராமாயி அம்மாள். இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ராமாயி அம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவி த்தனர்.

    உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து வீட்டை பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ½ கிலோ வெள்ளி தட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தொியவந்தது. இது குறித்து ராமாயிஅ ம்மாள்கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொரு ட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • மனோஜ் குமார் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள அம்மம்பாக்கம் கிராமம், கண்ணையா நகரில் வசித்து வருபவர் மனோஜ் குமார். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் காலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியில் சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதுகுறித்து மனோஜ்குமார் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர்.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 64) அதே ஊரில் இருக்கும் ஆலமரத்தின் விழுதினை பல்துலக்க அறுக்க சென்றுள்ளார்.

    இதனைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஜோதிலிங்கம் (வயது36) என்பவரும் ஆண்டிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (வயது31) என்பவரும் முதியவரிடம் சென்று இந்த ஆலமரத்தின் விழுதினை அறுக்க கூடாது, இதில் சாமி இருக்கு என கூறியுள்ளார்கள்.

    இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் இரும்பு கம்பியால் முதியவரை தாக்கியுள்ளனர்.

    இதனால் தலையில் ரத்தம் கொட்டியது. முதியவரை மீட்ட அப்பகுதி மக்கள் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி முதியவரை தாக்கிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • பலியானவர் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • உடனடியாக ஜமேஷா முபின் வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

    கோவை:

    கோவையின் முக்கிய பகுதியான டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேட்டில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் முன்பு நேற்றுமுன்தினம் அதிகாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 2 துண்டாக வெடித்து சிதறியதுடன் கார் தீப்பற்றி எரிந்தது. தீயில் கருகி ஒரு நபர் பிணமாக கிடந்தார்.

    சம்பவம் நடந்த இடத்தில் 2 கியாஸ் சிலிண்டர்கள் கிடந்ததால் இது விபத்தாக இருக்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த இடம் கோவில் முன்பு என்பதாலும், கார் தீப்பிடித்ததில் கோவிலின் முன்பகுதி சேதம் அடைந்திருந்ததாலும் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது.

    தீபாவளிக்கு முந்தைய நாள் நடந்த சம்பவம் என்பதால் பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் யாராவது சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக கோவை விரைந்து வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். கடந்த 2 நாட்களாகவே அவர் கோவையிலேயே முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    கார் வெடித்து சிதறிய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டபோது அந்த இடத்தில் ஆணிகள், கோலி குண்டுகள், பால்ரஸ் இரும்பு குண்டுகள் கிடந்தன. இதனால் சந்தேகம் மேலும் வலுத்தது.

    இதற்கிடையே காரில் இறந்து கிடந்தவர் யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர். அவரது பெயர் ஜமேஷா முபின் (வயது 25). கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர். தெருவைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் ஜமேஷா முபினின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பலியானவர் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக ஜமேஷா முபின் வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

    கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் திடுக்கிடும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உள்பட 5 பேர் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறார்கள். அந்த மூட்டை மிகவும் கனமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் தூக்க முடியாமல் 5 பேரும் சேர்ந்து தூக்கி காரில் ஏற்றுகிறார்கள். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது.

    அந்த மூட்டையில் அவர்கள் என்ன எடுத்துச் சென்றார்கள்? ஜமேஷா முபின் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியதால் மூட்டையில் இருந்தது அனைத்தும் வெடிபொருளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் ஜமேஷா முபின் உடன் மர்ம பொருளை ஏற்றிச் சென்றவர்களை பிடித்தால் அடுத்தக்கட்ட விபரீதத்தை தடுக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 5 பேரை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்கிறார்கள். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற மர்ம பொருட்கள் என்ன? சதிச்செயலுக்கு பயன்படுத்த அந்த பொருளை எடுத்துச் சென்றார்களா? தாக்குதல் என்றால் எந்தவிதமான தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்? என பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் வீட்டில் இருந்து காரில் கொண்டு சென்ற பொருட்களை எங்கு வைத்துள்ளனர்? என்பது பற்றியும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கைதானவர்கள் ஜமேஷா முபின் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தங்களை அழைத்ததாகவும், அவருக்கு உதவி செய்ய சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் அதனை ஏற்காமல் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.

    கைதான 5 பேர் அளிக்கும் தகவலை கொண்டே ஜமேஷா முபின் இறந்தது எப்படி, என்ன சதி திட்டம் தீட்டப்பட்டது? என்ற விவரங்கள் தெரியவரும். மேலும் இந்த வழக்கை தமிழக போலீசார் தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கவும் வாய்ப்பு உள்ளது.

    • இந்திரா நர்சிங் படிப்பு முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
    • திடீரென சமையல் அறையில் இருந்த மின்விசிறியில் இந்திரா தாவணியால் தூக்குபோட்டு கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசை சேர்ந்தவர் நடராஜ். தற்போது சென்னிமலை பொறைன்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் இந்திரா (வயது 27). இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4 வருடங்களாக இந்திராவுக்கு அவரது தந்தை நடராஜ் வரன் பார்த்து வந்தார். எனினும் இந்திராவுக்கு எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால் விரக்தி அடைந்த இந்திரா தனக்கு திருமணமே வேண்டாம் என வீட்டில் கூறி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இந்திராவின் தந்தை நடராஜ் தனது மனைவியுடன் சில்லாங்காட்டுவலசில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது இந்திராவும் அவருடைய தம்பி கோபாலகிருஷ்ணன் இருவரும் மட்டும் வீட்டில் இருந்தனர். திடீரென சமையல் அறையில் இருந்த மின்விசிறியில் இந்திரா தாவணியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இந்திராவின் பெற்றோர்கள் விரைந்து சென்று இந்திராவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் இந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திராவின் தந்தை நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.

    இதற்கிடையே சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக கண் பார்வை குறைபாட்டாலும் கை,கால் செயல்படாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சந்தனமாரியப்பன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தேன், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறினார்.

    இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உல்லாசமாக இருக்க பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாக கூறினார்.
    • ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.

    கோவை:

    கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் 22 வயது கல்லூரி மாணவர். இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நண்பர் ஒருவர் இணையதளத்தில் தேடினால் அழகான பெண்கள் கிடைப்பார்கள் என கூறினார்.

    இதனையடுத்து நான் இணையதளத்துக்கு சென்று உல்லாசமாக இருக்க அழகான பெண்கள் எங்கு கிடைப்பார்கள் என்று தேடிப்பார்த்தேன்.

    அப்போது அதில் சில அழகான பெண்களின் கவர்ச்சி படத்துடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால் முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக ஜாலியாக இருக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய நபர் அவருடயை பெயர் குமார் என அறிமுகம் செய்து கொண்டார்.

    அவர் என்னிடம் உல்லாசமாக இருக்க பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாக கூறினார். பின்னர் சில பெண்களின் ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என தெரிவித்தேன்.

    இதனையடுத்து அவர் அந்த பெண் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்பும்படி கூறினார். ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை அனுப்பி வைத்தேன். பின்னர் பீளமேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகவரியை கூறினார். அங்கு உள்ள அறையில் தான் இளம்பெண் இருப்பதாக கூறினார்.

    இதனையடுத்து நான் அங்கு சென்றேன். பின்னர் நான் அவரை தொடர்பு கொண்டு பெண் இருக்கும் அறை எண்ணை கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர் அந்த பெண்ணின் பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு, அறைக்கு பணம் கொடுக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

    போலீசுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறி என்னிடம் இருந்து தொடர்ச்சியாக பணத்தை அனுப்ப சொன்னார். இவ்வாறாக அவர் என்னிடம் இருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை பெற்று என்னை ஏமாற்றி விட்டார். அதன் பின்னர் அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நடராஜன் பேக்கரியில் வேலை பார்த்தபோது அபிநயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார்.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்தபோது அங்கு வேலை செய்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார். அவரை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நடராஜன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் நகை-பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அபிநயாவின் குடும்ப பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • அறையில் இருந்த நோவாவிடம் பிரமோத் விட்டல் தான் பட்டறையை திறக்க செல்வதாக கூறி சாவியை வாங்கி சென்றுள்ளார்.
    • பட்டறைக்கு சென்ற நோவா நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கோவை:

    கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 45). இவர் எம்.என்.ஜி. வீதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது பட்டறையில் தொழிலாளியாக நோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிமோத் விட்டல் (20) ஆகியோர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நான் தினசரி பட்டறையை பூட்டி விட்டு சாவியை நோவாவிடம் கொடுப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு நான் பட்டறையை பூட்டி விட்டு சாவியை நோவாவிடம் கொடுத்து விட்டு சென்றேன்.

    மறுநாள் காலையில் அறையில் இருந்த அவரிடம் பிரமோத் விட்டல் தான் பட்டறையை திறக்க செல்வதாக கூறி சாவியை வாங்கி சென்றுள்ளார். பின்னர் அவர் பட்டறையை திறந்து அங்கு இருந்த ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 133 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    பட்டறைக்கு சென்ற நோவா நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பிரமோத் விட்டல் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    எனவே எனது பட்டறையில் 133 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற பிரமோத் விட்டலை கைது செய்து நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு நகைகளுடன் தப்பிச்சென்ற தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிரமோத் விட்டல் பட்டறையில் புகுந்து கொள்ளையடிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளன. அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×