என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்-நகை கொள்ளை
    X

    வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்-நகை கொள்ளை

    • மனோஜ் குமார் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள அம்மம்பாக்கம் கிராமம், கண்ணையா நகரில் வசித்து வருபவர் மனோஜ் குமார். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் காலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியில் சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதுகுறித்து மனோஜ்குமார் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர்.

    Next Story
    ×