என் மலர்
நீங்கள் தேடியது "#கைது"
- சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நா டகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்களும் நடக்கிறது.
இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து பெங்களூரில் நாளை (26-ந் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
மேலும் கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் கர்நாடகாவில் நாளை அரசு பஸ்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆரணி:
வேலூர் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷை கைது செய்தனர்.
அவரை சந்தவாசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்து வேலூர் மற்றும் ஆரணியில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
*** இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற காட்சி. *** சந்தவாசல் போலீஸ் நிலையம் முன்பு திரண்ட இந்து முன்னணியினர்.
- பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- தாரமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
சேலம்:
தாரமங்கலம் அருகே உள்ள பாரக்கல்லூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாரமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கரியாம்பட்டி பகுதியை சேர்ந்த சேட்டு (40), குப்புசாமி (41) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்தனர்.
- மண்ணச்சநல்லூர் அருகே இடத்தகராறில்முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
- பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்த சுந்தரம் (வயது53). இவருக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த வர் அழகுமுத்து. இவரது மனைவி ஜோதி (60), மகன்கள் பாரதிராஜா (25), ராஜேஷ்(28) மற்றும் தர்மர் (30) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
சுந்தரத்தின் வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடம் சம்பந்தமாக அழகு முத்து மகன்களுக்கும் சுந்த ரம் குடும்பத்திற்கும் கடந்த நான்கு மாதமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இது சம்பந்தமாக சிறு கனூர் காவல் நிலையத்தில் சுந்தரம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது சுந்தரத்திடம் இனி எந்த தகராறும் செய்ய மாட்டோம் என அழகுமுத்து மகன்கள் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சுந்தரம் வீட்டில் இருந்தபோது அழகு முத்து மகன்கள் பாரதிராஜா, ராஜேஷ், தர்மர் மற்றும் அழகுமுத்துவின் மனைவி ஜோதி ஆகியோர் சுந்தரம் வீட்டுக்கு வந்து உன் வீட்டி ற்க்கு அருகில் உள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என்று சொன்னால் நீ கேட்க மாட்டியா என தகராறு செய்து தகாத வார்த்தை களால் திட்டி உள்ளனர்.
அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாரதிராஜா தான் கையில் வைத்திருந்த அறிவாளால் சுந்தரத்தின் இடது முன்கை, இடது பக்க விலா,வலது முழங்காலில் வெட்டியு ள்ளார்.
இதில் வலி தாங்காமல் சுந்தரம் அலறி அடித்து சத்தம் போடவே அருகில் இருந்தார்கள் வருவதை பார்த்ததும் பாரதிராஜா அருவாளை காட்டி என்னைக்கி இருந்தாலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் ஜோதி மற்றும் பாரதிராஜா, ராஜேஷ், தர்மர் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். புறம்போக்கு இடப்பிரச்சனையில் முதியவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
- தாயை பற்றி தவறாக பேசியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம்
- கொலை பற்றி மனைவியிடம் உளறியதால் போலீசில் சிக்கினார்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்த கிரி பொன்னூர் கிராமத்தின் அருகே உள்ள ஈளாடாவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது46). கூலித்தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. சிவக்குமாரின் மனைவி மற்றும் இளைய மகள் ஆகியோர் அன்னூரில் வசித்து வருகின்றனர்.
சிவக்குமார் தனது தாயுடன் ஈளாடாவில் வசித்து வந்தார்.கடந்த 18-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிவக்கு மார் மாலை வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சிவக்குமாரின் மகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் தனது தாயுடன் ஈளாடாவிற்கு விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து அவர் சம்ப வம் குறித்து சோலூர்மட்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிவக்குமாரின் மகளுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், உனது தந்தையை எனது கணவர் கொன்று பொன்னூர் பகுதியில் புதைத்து விட்டதாக கூறுகிறார் என்ற தகவலை தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் உடனடியாக சோலூர்மட்டம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். அதன்பேரில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொன்னூர் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பெண் கூறிய சாலையோரம் இருந்த வனப்பகுதியை யொட்டிய நிலத்தை தோண்டி பார்த்த போது, சிவக்குமார் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரின் உடலை வெளியில் எடுத்தனர்.பின்னர் சிவக்குமாரின் மகளை தொடர்பு கொண்டு பேசிய பெண் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவரது கணவரான விஷ்ணு என்பவர் தான் சிவக்குமாரை கொன்று புதைத்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் காரைக்குடிக்கு விரைந்து சென்று, அங்கு மனைவி வீட்டில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்த னர்.பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியி ருப்பதாவது:-
நான் கேரடாமட்டம் பிரியா காலனியில் வசித்து வருகிறேன். நான் எனது நண்பர் தங்கபாண்டி மற்றும் சிவக்குமார் 3 பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தோம்.வார விடுமுறை நாட்கள் மற்றும் சில நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது அருந்த செல்வது வழக்கம். கடந்த 18-ந் தேதி வேலை முடிந்த பின்னர் 3 பேரும் மது அருந்த முடிவு செய்தோம்.
அதன்படி நாங்கள் வேலை முடிந்தவுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு, பொன்னூர் பகுதியையொட்டிய வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். மது அருந்திய சில நிமிடங்களில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, சிவக்குமார் எனது தாயை பற்றி தவறாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நான் அவரிடம் அப்படி பேசாதே என்று சொல்லியும் கேட்காமல் அவர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பர் தங்கபாண்டியுடன் சேர்ந்து அங்கிருந்த கல்லை எடுத்து சிவக்குமாரின் தலையில் தாக்கினேன். இதில் அவர் சிறிது நேரத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் நாங்கள் 2 பேரும் சேர்ந்து அவரது உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் சென்று விட்டோம்.
அங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்ப தால், நான் கோத்தகிரியில் இருந்து காரைக்குடியில் உள்ள எனது மனைவி வீட்டிற்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட நான், இப்போது தான் ஒருவரை கொலை செய்து விட்டு புதைத்து வருகிறேன். அதே போன்று உன்னையும் கொன்று புதைத்து விடுவேன் என கூறினேன். அவர் என்னிடம் துருவி விசாரித்து தகவலை போலீசாருக்கு தெரிவித்த தால் நான் போலீசில் சிக்கி கொண்டேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விஷ்ணு கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பரான தங்கபாண்டியனையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவ டிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இன்று காலை இறந்த சிவக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கூலித்தொழிலாளி அடித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போத்தனூர் போலீசில் காந்தரூபன் நகைகள் மாயமானது குறித்து புகார்
- மகேஸ்வரி வீட்டின் மேற்கூரையில் மறைத்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் சிக்கின
கோவை,
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் காந்தரூபன் (வயது 43). இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே காந்த ரூபன் வீட்டு வேலை செய்வதற்காக, வெள்ளலூரை சேர்ந்த மகேஸ்வரி (வயது 37) என்பவரை பணியமர்த்தினார்.
இந்த நிலையில் காந்தரூபன் வீட்டில் 25 பவுன் தங்க நகைகள் திடீரென மாயமானது. எனவே அவர் இதுகுறித்து மகேஸ்வரியிடம் கேட்டார். அதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காந்தரூபன் வீட்டில் நகைகள் மாயமானது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மகேஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக தெரிகிறது. எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டின் மேற்கூரையில் மறைத்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் சிக்கின.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது காந்தரூபன் வீட்டில் 25 பவுன் நகைகள் திருடியதை மகேஸ்வரி ஒப்புக்கொண்டார். எனவே அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு அருகே வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பர்சை காணவில்லை.
- போலீசார் 2 பெண்களையும் ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த மாலிக்ஜான் மனைவி தில்ஷாத் பேகம். கடந்த மே மாதம் புவனகிரியில் இருந்து வடலூர் நோக்கி தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு அருகே வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் 7 பவுன் தங்க நகையை தில்ஷாத் வைத்திருந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் 2 பெண்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சேத்தியாதோப்பு இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் 2 பெண்களையும் ஜாமீனில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை பெத்தேரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வேளாங்கண்ணி (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி சத்யா (24) என்பது தெரியவந்தது. மேலும், இவ்விருவரும் தில்ஷாத் பேகத்திடமிருந்து 7 பவுன் நகையை திருடியது ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து நகையை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சரத் பொங்கலூரில் உள்ள பள்ளியில் 12ம்- வகுப்பு படித்து வருகிறான்.
- பலத்த காயமடைந்த சரத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெரிய காட்டு பாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 42 ). இவரது மகன் சரத் (17 ). சரத் பொங்கலூரில் உள்ள பள்ளியில் 12ம்- வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் (24), சஞ்சய் காந்த் (23) ஆகிய இரண்டு பேரும் சரத்திடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சரத்தின் தந்தை பாக்யராஜிடமும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஜெயக்குமார் மற்றும் சஞ்சய் காந்த் ஆகிய இருவரும் பாக்யராஜ் மற்றும் சரத் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சரத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெயக்குமார் மற்றும் சஞ்சய் காந்தி இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது.
- இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சேலம்:
சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
2 மாணவிகள்
இந்த நிலையில் இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் மாணவிகளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாணவிகளை தங்கள் கையைப் பிடித்து சாலையை கடத்தி விடுமாறும் வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மாணவிகள் மறுத்ததாக தெரிகிறது.
சரமாரி தாக்குதல்
இதனை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களும் மாணவிகளை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து மாணவிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது
இதில் மாணவிகளை தாக்கியது குப்பனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), கார்த்திகேயன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளை வழிமறித்து வாலிபர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பரமசிவம் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரை தூத்துக்குடியிலும் கைது செய்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜா என்ற முத்துராஜ் (வயது 45).
இவர் தூத்துக்குடி கீழுர் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணி செய்தபோது, கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி அவருக்கு தெரிந்த தூத்துக்குடி அழகேசபுரம் மெயின்ரோடு, பொன்நகரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் (50) மற்றும் தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்த சேதுராம லிங்கம் (53) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து திட்டம் போட்டு, தூத்துக்குடியை சேர்ந்த 22 பேரிடம் தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் சிறுதொழில் செய்வதற்கு கடன் தருவதாக கூறி அவர்களிடம், அவர்களுக்கு உரிமையில்லாத முறைகேடான காசோலைகளில் கையெழுத்துக்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு கையெழுத்து பெற்ற 22 காசோலைகளை தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த ராஜாவுக்கு (33) சொந்தமான நிதி நிறுவனத்தில் உண்மையானது போன்றும், அதனுடன் 22 பேரின் ஆதார் கார்டு நகல்களையும் சேர்த்து அந்த நிதி நிறுவனத்தில் வழங்கி கடனாக ரூ.52 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை 3 பேரும் மோசடியாக பெற்று, கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தும், கடன் தொகையை திருப்பி கேட்ட நிதிநிறு வனத்தின் உரிமையாளரான ராஜாவிடம் 3 பேரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்படுகிறது.
இது குறித்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, முருகன் மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி, முத்துராஜை திண்டுக்கல்லிலும், பரமசிவம் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரை தூத்துக்குடியிலும் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.