search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "selling"

  • என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
  • குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  புதுச்சேரி:

  புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.

  100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

  உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

  புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.

  புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

  முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.

  பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.

  குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.

  சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.

  புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.

  சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.

  புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.

  • பரமத்தி வேலூர் தாலுகா கீழ் சாத்தனூர் அருகே பெருமாபாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த னர். அவர் விற்ப னைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீழ் சாத்தனூர் அருகே பெருமாபாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.

  அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில், கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடா சலம் (வயது 37) என்பவர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

  இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த னர். அவர் விற்ப னைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது

  ஈரோடு, 

  ஈரோடு மாவட்டம் சிறுவல்லூர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூபன்சாலை பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது .

  இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வாசு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
  • நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.

  அபிராமம்

  கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பனைமரங்கள் பரவலாக இருந்தாலும் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் பலவித நன்மை தரும் நுங்கு களை அபிராமம் பகுதி மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

  இந்த நிலையில் ராமநாத புரம், ராமேசுவரம் பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி கமுதி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுங்கு விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோடை வெயிலின் தாக் கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்க நுங்கு களை வாங்கி சாப்பிடுகின்ற னர்

  நுங்க சிறப்பு பற்றி முதியவர் ஒருவர் கூறுகை யில், பனைமரங்களில் பெண்பனை மரங்களில் மட்டும்தான் நுங்குகள் காய்க்கு. ஒரு பனை மரத்துக்கு 10 குலைகள் தள்ளும். நுங்கு உடல்நலத துக்கு நல்லது.

  பெரும்பா லானோர் அதன் வெள்ளைச் சோற்று பகுதியை மட்டுமே பிரித்துச் சாப்பிடுகிறார்கள். மாறாக அதன் மேல் ஒட்டுத் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே மிகமிக நல்லது.

  நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது. நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே இது சிறந்த மருந்து. உடல் வெப்பத்தைத் தணிக்க வல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடியது. ரத்த சோகை நோய்க்கு நூங்கு இயற்கையான மருந்தாகும்.

  நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.

  கோடைகாலங்களில் பலருக்கும் வியர்க்குரு மற்றும் வேணல் கட்டிகள் உருவாகும். நுங்குத் தண்ணீ ரும், மேல் ஓட்டுடன் கூடிய நுங்கையும் உடலில் வியர்க் குரு மற்றும் வேனல் கட்டி கள் இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

  • தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.1,200-க்கு விற்பனை ஆட்டிறைச்சி விலை ரூ.ஆயிரத்தை தொட்டது
  • பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது

  மதுரை

  நாடு முழுவதும் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை நாளை (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. மதுரையிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

  மார்க்கெட்கள் மற்றும் பஜார் கடைகளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாசி வீதிகள், காமராஜர் சாலை, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையப் பகுதி, பைபாஸ் ரோடு, சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

  சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளதால் பொருட்களை வியாபாரிகளும் போட்டி போட்டு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மதுரையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

  மல்லிகை ரூ.1200

  மதுரை பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200 -க்கு விற்கப்பட்டது.முல்லை ரூ.1200-க்கும், பிச்சி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், அரளி, சம்பங்கி 150-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் , தாமரைப்பூ ரூ.10-க்கும் விற்பனையாகி வருகிறது.

  பூ மார்க்கெட்டில் இன்று ஏராளமானோர் திரண்டு ஆர்வமாக வாங்கி வருவதால் பூக்களின் விலை மாலையில் சற்று அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

  ஆட்டிறைச்சி ரூ.1000

  மதுரையில் தீபாவளி பண்டிகையொட்டி அசைவ பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே இறைச்சி கடைகள் போடப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது.

  சாலை ஓரம் மற்றும் இறைச்சி கடைகளில் சுமார் 5 ஆயிரம் ஆடுகள் தீபாவளி பண்டிகைக்காக வெட்டப்படுகின்றன.

  சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்கப்பட்ட ஆட்டிறைச்சி தீபாவளியையொட்டி ரூ. ஆயிரமாக அதிகரித்தது.

  ஆடுகளின் விலை ஏற்றம் காரணமாக இறைச்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

  பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விதவிதமான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதால் குடும்பத்துடன் வந்து பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

  • ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

  ஏற்காடு:

  ஏற்காட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளராக செந்தில் ராஜ் மோகன்பொறுப்பேற்றார் அதன் தொடர்ச்சியாக ஏள்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பபோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு இது வரை 30 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் வழக்கு பதிந்து குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளார்.

  மேலும் வளரும் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, விற்பனை செய்வோர். தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா பேதை பொருள் விற்பனை செய்தவர்கள் என 50 மேற்பட்ட வழக்குகள் பதிந்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று

  ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  மேலும் ஏற்காடு போட்டுக்காடு கிராமத்தில் உள்ள அரசு மது கடையில் இருந்து ஆட்டோவில் மதுபாட்டில்கள் ஏற்றி வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

  சோதனையில் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ராமச்சந்திரன் (வயது 55) என்பார் அரசுக்கு புறம்பாக மது பாட்டில்கள் ஆட்டோவில் ஏற்றி வந்தது தெரியவந்தது இதை தொடர்ந்து மேல் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ரவி மகன் சதீஷ் (40) விற்பதாக தெரியவந்தது.

  இதனைத் தொடர்ந்து பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சதீஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீ–சார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

  • லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
  • பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன், தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் வந்தது.

  இதன்பேரில் போலீசார் ரோந்து சென்று லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ்(46) என்பவரை கைது செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  இதேபோல் பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன்(32), தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன்(21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

  • உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம்.
  • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது.

  பல்லடம் :

  இன்றைய சூழலில் பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை கடந்து எப்பாடுபட்டாவது மகசூல் கொண்டுவர வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

  இருப்பினும் சில விவசாயிகள் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சாகுபடி செய்கின்றனர். இதற்காக தடைக்கற்களை உடைத்தெறிந்து தங்கள் இலக்கை அடைகின்றனர். அவ்வாறு பல்லடத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி விற்பனையை துவக்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களின் ஆதரவும் பெருகி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உழவர் சந்தை மூலம் வழக்கமாக காய்கறி விற்பனை செய்கிறோம். அதிகாலை நேரம் என்பதாலும் இதர காய்கறியுடன் விற்பனை செய்வதாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்காமல் போகிறது. எனவே இயற்கை காய்கறிகளை விரும்பும் மக்களுக்கு அவை முறையாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து பிரத்யேகமான இயற்கை காய்கறி விற்பனை அங்காடி திறக்கவும் திட்டமிட்டு துவக்கியுள்ளோம். பனப்பாளையத்தில், சிவன் காய்கறி அங்காடி என்ற பெயரில் ஞாயிறு மற்றும் புதன்கிழமையன்று மாலை 3மணி முதல் 6மணி வரை இயங்கி வருகிறது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

  இயற்கை காய்கறி விற்பனை செய்ய, விவசாயிகள் அங்காடி தேடி வருவதாக தகவல் கிடைத்ததும், தங்களுக்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தாமாக முன்வந்து அளித்துள்ளார் கண் தான அறக்கட்டளை தலைவர் சுந்தரராஜன்.அவர் கூறுகையில், எவ்வளவோ சிரமத்துக்கு இடையே, இயற்கை விவசாயம் செய்கின்றனர். இதை நாம்தான் ஊக்கப்படுத்த வேண்டும்.இது இயற்கை விவசாயிகளுக்கு செய்த உதவியாக கருதுகிறேன் என்றார்.

  • வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது.
  • அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது.

  திருப்பூர் :

  நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் மக்கள் இயக்கம் 13-ந்தேதி முதல், 15-ந் தேதி வரை நடக்கிறது. அதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது. அஞ்சலகங்களில் தலா 25 ரூபாய்க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது.

  திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகளின் யோசனைப்படி தையல் தொழில் செய்து வரும் மகளிர் குழுவினர் தேசியக்கொடி தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளனர்.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு மாவட்டத்தில் தையல் தொழில் செய்து வரும் 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் கொடுத்து தலா 2,000 தேசியக்கொடிகள் வீதம், 20 ஆயிரம் தேசியக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- தேசிய அளவில், வீடுகள் தோறும் தேசியக்கொடி கட்டும் மக்கள் இயக்கம், விமரிசையாக நடக்க உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டுப்பற்றை பறைசாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் துணிகள் கொள்முதல் செய்து, 10 மகளிர் குழுவினருக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கொடி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கலெக்டர் அலுவலக மகளிர் திட்ட விற்பனை மையம் உட்பட, மக்கள் கூடும் இடங்களில் தேசியக்கொடி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  டி.என்.பாளையம்:

  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குட்கா விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

  ஈரோட்டை அடுத்து உள்ள ஆர்.என்.புதூர் ராகவேந்திரா நகரில் உள்ள முத்துராஜா (29) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 45 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த மளிகை கடை அரசு பள்ளிக்கூடம் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

  டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் நூர் முகமது (35). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து மளிகை கடையை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 10 குட்கா (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.