search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lottery tickets"

    • நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டி ருப்பது தெரியவந்தது.

    அவர் வைத்திருந்த அனைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளும் போலியா னவை என்றும், வெள்ளைத்தாளில் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோனூர் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ஜான் கண்ணாடி (வயது 53) என்பதும் அவரிடமிருந்து போலி லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
    • போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல்லடம் பகுதியில் சமூக வலைதளம் மூலம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழ்நாடு அரசால் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில், கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் லாட்டரி சீட்டுகள் படங்கள் வெளியாகியும், உளவுத்துறை போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், அவர்களின் ஆதரவோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புதுவை அருகே பாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே பாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவையில் 3 நம்பர் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை மீறி புதுவையில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அவ்வபோது லாட்டரி சீட்டு விற்பவர்களை கைது செய்தாலும் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பாகூர் பங்களா தெருவில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது பங்களா வீதியில் ரோந்து பணி சென்ற போது அங்கு நின்று இருந்த சிலர் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓட முயற்சித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்த சரவணன் (45) என்பதும், இவர் வீட்டின் அருகே ரகசியமாக 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழகப் பகுதியான உச்சி மேடு பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (54) என்பவரிடம் லாட்டரி சீட்டுகள் வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் சரவணன் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் அதிரடிப்படை மற்றும் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் மற்றும் கதிரேசனை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை செய்த ரூ.2 லட்சத்து 12ஆயிரத்து 690 ரொக்க பணமும், 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், லாட்டரி சீட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட லேப்டாப், பிரிண்டர், 7 செல்போன் ஆகியவற்றை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் வாணரப்பேட்டையில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அப்போது அங்கு செல்போன் மூலம் வாடிக்கையாளர்க ளுக்கு லாட்டரி விற்பனை செய்த 2 பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது33) மற்றும் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த ரமேஷ் என்ற மனோஜ்(42) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து மோட்டார் சைக்கிள் 2 செல்போன், லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சாரம் வெங்கடேஸ்வரா நகரில் லாட்டரி சீட்டு விற்ற சக்தி நகரை சேர்ந்த ரகு 43) பழைய சாரம் பகுதியை சேர்ந்த சங்கர் 49) ஆகிய 2 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.82 ஆயிரத்து 770 ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    • திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படு வதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இவர்கள் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் விற்று வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதிக்கு சென்று சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மகாவிஷ்ணு நகரை சேர்ந்த ஆனந்த ராஜ்(வயது34), புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன்(54) வளவனூர் அருகே சிறுவந்தாடை சேர்ந்த ராஜி(58) மற்றும் கண்டமங்கலத்தை சேர்ந்த தாமோதரன்(50) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ. 15 ஆயிரத்து 460 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை செட்டித்தெருவில் டெய்லர் கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    • 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை செட்டித்தெருவில் டெய்லர் கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.

    புதுவை செட்டித்தெருவில் உள்ள ஒரு டெய்லர் கடையில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது அந்த டெய்லர் கடையில் 2 பேர் ஒரு பேப்பரில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மூலக்குளம் கோபாலன்கடை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பதும், இவர்கள் டெய்லர் கடையில் ரகசியமாக 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.26 ஆயிரத்து 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது
    • 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கோபி கலிங்கியம் தேர் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில், கோபி போலீசார் அங்கு சென்று வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து வந்த, கோபி கலிங்கியம் தேர் வீதியை சேர்ந்த சிவக்குமார்(42), கரட்டடிபாளையம் மாரிசாமி(52), வேட்டைக்காரன் கோவில் செல்வம்(60) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • வீட்டு வாசலில் வைத்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
    • கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநில லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்

    உடுமலை :

    உடுமலையையடுத்த ஆர்.வேலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஆர்.வேலூர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணசாமி என்பவரது மகன் ஜெயகிருஷ்ணன்(வயது 50) என்பவர் வீட்டு வாசலில் வைத்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் கயிறான் என்ற கதிரான்(வயது 62) என்பவரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநில லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    இதில் அவர்கள் சாவடி ப்பாளையம் புதூர், அம்மன் நகர் பகுதி யை சேர்ந்த வடிவேல் என்கிற துரை (49). ஆலங்காட்டுவலசு நேரு வீதியை சேர்ந்த செந்தில்குமார் (40) எனவும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து 53 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தகர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.
    • சாக்குமூட்டையில் வைத்திருந்த சுமார் 1.48 லட்சம் மதிப்பிலான 3615 லாட்டரி டிக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் நின்று லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் லாட்டரி டிக்கெட்டுகளை கேரளாவில் இருந்து கடத்தி வந்து பாவூர்சத்திரம் பகுதிகளில் விற்பனை செய்த தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நந்தகுமார் (வயது 49) என்பதும் அவர் சாக்குமூட்டையில் வைத்திருந்த சுமார் 1.48 லட்சம் மதிப்பிலான 3615 லாட்டரி டிக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

    லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் ரொக்கம் ரூ. 30,000-தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    மேலும் லாட்டரி டிக்கெட்டுகளை கேரளாவில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்கு மூளையாக செயல்பட்டு வந்த தென்காசி மேலகரத்தை சேர்ந்த மற்றொரு நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன், தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் ரோந்து சென்று லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ்(46) என்பவரை கைது செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன்(32), தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன்(21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள பெட்டி கடை அருகே இருசக்கர வாகனத்தில் போலி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து ரஞ்சித் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை குமார் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள புஞ்சைதுறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரிடம் வாணிப்புத்தூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த குமார் (45) என்பவர் பரிசு விழும் என ஆசை வார்த்தை கூறி ரூ.100 வாங்கி கொண்டு வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 2 கொடுத்துள்ளார்.

    விசாரித்ததில் இரண்டு லாட்டரி சீட்டுக்களும் போலி என தெரியவந்தது, இதனையடுத்து தன்னை ஏமாற்றிய குமார் மீது பங்களாப்புதூர் போலீசாரிடம் கார்த்திக் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள பெட்டி கடை அருகே இருசக்கர வாகனத்தில் போலி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.

    குமாரிடம் இருந்து ரூ.2,800 மதிப்புள்ள 56 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், செல்போன், லாட்டரி விற்ற பணம் ரூ.300 மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பிடிபட்ட குமாரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து ரஞ்சித் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை குமார் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குமார் கைது செய்யப்பட்டார்.

    தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை நாகரசம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள வேலம்பட்டி பச்சையம்மன் கோவில் முன்பு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரோந்தில் ஈடுபட்ட நாகரசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் போலீசார் வேலம்பட்டியில் இருந்து சந்தூர் நோக்கி செல்லும்போது வேலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பச்சையம்மன் கோவில் முன்பு இருந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர்.

    பின்னர் அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அவர்களை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. அவர்களை நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்களில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் கோட்டைகோவில் தெருவை சேர்ந்த சாகுல் (வயது 34) மற்றும் காவேரிப்பட்டிணம் அடுத்த சவுட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ராஜாகுயில் என்ற பெயர் கொண்ட 8 லாட்டரி சீட்டுகள் மற்றும் 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×