லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.
லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர்கள் சாவடி ப்பாளையம் புதூர், அம்மன் நகர் பகுதி யை சேர்ந்த வடிவேல் என்கிற துரை (49). ஆலங்காட்டுவலசு நேரு வீதியை சேர்ந்த செந்தில்குமார் (40) எனவும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து 53 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தகர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com