என் மலர்
நீங்கள் தேடியது "cannabis"
- வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.
- 15 கிராம் கஞ்சாவை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் வேலூர் இப்ராஹிம். இந்நிலையில், கஞ்சா வழக்கில் வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 15 கிராம் கஞ்சா, கார் உள்ளிட்டவைகளை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தமிழ்நாட்டிலும் அண்மை காலங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
- போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் குற்றச்செயல்களை அதிரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும் அண்மை காலங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் குற்றச்செயல்களை அதிரித்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யபட்டது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதெல்லாம் இத்தினத்தில் வலியுறுத்தப்படும்.
- கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.
- இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 41). இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.
இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் டவுன் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் உதவி கமிஷன் வெங்கடேசன் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு வசித்து வந்த லோகேஸ்வரன் (வயது 32) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (27) ஆகியோரை கைது செய்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் வாலிபர்கள் சிக்கினர்.
- கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருமங்கலம்
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தலை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெத்தானியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 22), சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த சூர்யா (21) ஆகிய 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்களிடம் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதனை அவர்கள் விற்பதற்காக ெகாண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த3 பேர் சிக்கினர்.
மதுரை
மதுரையில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று மதுரை கட்டபொம்மன் நகர், குதிரை பாலம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளுடன் வந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர். மேலும் அவர்களிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடைகளை பிரித்து பார்த்தனர்.
அதில் 2 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.10 ஆயிரத்து 450 ரொக்கம் இருப்பது கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மீனாம்பாள்புரம், காமராஜர் தெரு சேதுபதி (29), கார்த்திக் (25), மகாலிங்கம் மகன் பரத் (24), சேதுபதி மனைவி ரம்யா (22), பவளவல்லி (45) செல்லூர் பிரபு மனைவி சசிகலா (38) என்பது தெரிய வந்தது.
இதில் பவளவல்லி, சேதுபதி, ரம்யா ஆகிய 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பவளவள்ளியின் மகனான சேதுபதியின் மனைவி ரம்யா ஆவார். மேற்கண்ட 3 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கூட்டு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
- ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
- இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
சேலம்:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டுக்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
அந்த பேக்கில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செஞ்சி அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து 5 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
விழுப்புரம்:
செஞ்சி மற்றும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கம், தீபா ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன் ராஜ், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர், அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர்களை விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அரவிந்தன் (வயது20), நூர்முகமது (19), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித் (15), ஆலம்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (18) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
- சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார்.
பல்லடம்:
திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் சங்கர் (வயது 34). இவர் தற்போது பொங்கலூரை அடுத்த தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சோதனையிட்டதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறையில் கஞ்சா பயன்படுத்தியதை காட்டி கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தனர்.
- கத்தியால் சரமாரி குத்தியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(வயது 23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள 2 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதனிடையே சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அஜித்குமார் கூறி சென்றுள்ளார். எனவே சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரின் நண்பர்கள் யார் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அஜித்குமாரை பார்க்க வந்துள்ளனர் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அஜித்குமாருடன் சிறையில் தங்கியிருந்த கோவை துடியலூரை சேர்ந்த வல்லரசு (26), திருப்பூரை சேர்ந்த கணேசன் (26), ஷாஜகான் (28) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் சேர்ந்துதான் அஜித்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜித்குமார் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. போக்சோ வழக்கில் கைதான அஜித்குமாரை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். அப்போது அங்கு வல்லரசு, கணேசன், ஷாஜகான் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நண்பர்களாகினர். இந்தநிலையில் சிறை அறையில் வல்லரசு உள்பட 3 பேரும் கஞ்சா பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து அஜித்குமார் சிறைக்காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறைக்காவலர்கள் 3பேரையும் எச்சரித்துள்ளனர். இதனால் அஜித்குமார் மீது 3பேருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடந்த 1-ந்தேதி புத்தாண்டு அன்று மது அருந்த வருமாறு அஜித்குமாரை 3 பேரும் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அன்று செல்ல மறுத்துவிட்டார். மற்றொரு நாள் வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 3-ந்தேதி திருப்பூர் கல்லம்பாளையம் பகுதிக்கு 3பேரும் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த அஜித்குமார் , வீட்டில் உள்ளவர்களிடம் நண்பர்கள் அழைப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது 3 பேரும், அஜித்குமாரிடம் சிறையில் கஞ்சா பயன்படுத்தியதை எப்படி காவலர்களிடம் காட்டி கொடுக்கலாம் என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கத்தியால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தற்போது தனிப்படை போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
- தாம்பரத்தில் உள்ள கேசவன் என்பவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்று வந்ததாக தெரிவித்தனர்
- 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டகுப்பம் ஜமீத் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கஞ்சா விற்ற புதுவை ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்ற பாண்டியன் (வயது 22) என்பவரை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர் பாக்கெட்டுகளில் வைத்திருந்த 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் சோலை நகரைச் சேர்ந்த அருண் (22) மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அருணையும் அஜித்குமாரையும் கோட்டக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தாம்பரத்தில் கேசவன் என்பவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து அவர் மூலம் புதுவை பஸ் நிலையத்திற்கு ஒருவர் கஞ்சாவை கிலோ கணக்கில் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்களை புதுவையிலும் கோட்டக் குப்பம் பகுதியிலும் விற்று வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் 21 கிலோ கஞ்சாவை வாலிபர்கள் கடத்தினர்.
- நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரநாயர் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீ சார் ரோந்து சென்றனர். கூடல்நகர், ெரயில் தண்டவாளம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்த இருவரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் 21 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் அருள் தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு நாய்போடு கணேசன் மகன் ஹரிஹரன் (22), சோழவந்தான் அருகில் உள்ள ஊத்துக்குளி ரமேஷ் மகன் விஜயேந்திரன்(23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை புது ஜெயில் ரோடு வெள்ளை அம்மன் கோவில் அருகே 30 கிராம் கஞ்சாவுடன் முரட்டன்பத்ரி ரஞ்சித்குமார் (25) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.






