என் மலர்
நீங்கள் தேடியது "வேலூர் இப்ராகிம் பேட்டி"
- வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.
- 15 கிராம் கஞ்சாவை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் வேலூர் இப்ராஹிம். இந்நிலையில், கஞ்சா வழக்கில் வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 15 கிராம் கஞ்சா, கார் உள்ளிட்டவைகளை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கொடைக்கானல் வந்த வேலூர் இப்ராகிம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
- அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு நன்மை அளிப்பதாக தெரிவித்தார்.
கொடைக்கானல்:
பா.ஜனதா தேசிய சிறுபான்மைபிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கொடைக்கானலில் நிருபர்களிடம் கூறியதாவது,
தென்மாநிலங்களில் 2024-2026-ல் நடக்கும் எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலில் பா.ஜனதா ஆளுங்கட்சியாக வரும். இதற்கு முன்னோட்டமாக கிராமங்களை நோக்கி தாமரை பிரச்சாரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ரவுடிசம் தலைதூக்கி உள்ளது. சென்னையில் கூலிப்படையினரால் சட்டம்-ஒழுங்கு பாதித்து கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.
இதனை தட்டிகேட்கவேண்டிய தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு லாக்கப் மரணங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 6 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் மவுனம் காத்து வருவது ஏன்?. மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்குள் ஏற்கனவே ஏற்பட்ட பிளவால் பா.ஜனதா ஆதரவில் ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தாள்வது எங்கள் நோக்கமல்ல. இந்த நிலையில் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதை எம்.எல்.ஏக்கள் சிலர் விரும்பவில்லை. இங்கும் ஏக்நாத்ஷிண்ேட குழு போல் உருவாக வாய்ப்புள்ளது. தி.மு.கவின் சிலிப்பர் செல்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்புள்ளது. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் எங்களிடம் இல்லை. நயினார்நாகேந்திரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
மத்தியஅரசு அக்னிபத் திட்டத்தை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கொண்டுவந்துள்ளது. இதில் மதம் பற்றி பேசுவதற்கு இடமே இல்லை. பா.ஜனதாவில் அடுத்த இலக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றும். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினையில் பா.ஜனதா தலையிடாது என்றார்.






