பிளஸ்-2 மாணவரின் புத்தகப்பையில் கஞ்சா: திருப்பூர் அரசு பள்ளியில் கல்வி அதிகாரிகள் அதிரடி விசாரணை

பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார்.இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பூர்:

திருப்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி, பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவரின் புத்தகப்பையில் இருந்து ¼ கிலோ கஞ்சா மற்றும் சிகரெட்டுகள், பணத்தை வகுப்பு ஆசிரியர் பறிமுதல் செய்தார். இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எனக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்து கஞ்சா பொட்டலங்களை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினேன். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார். இது தொடர்பாக இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி மாணவரிடம் கஞ்சா எப்படி வந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை கண்டறிய வேண்டும். மாணவ சமுதாயத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனிடம் நடத்திய விசாரணையில் தனது அண்ணனுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதாகவும், அவர் எனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com