என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trade"

    • எந்த காலக்கெடுவையும் விட தேசிய நலனுக்கே முன்னுரிமை எனவும் கோயல் கூறியிருந்தார்.
    • இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஜூலை 9 ஆம் தேதிக்குள் டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.

    அமெரிக்காவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தியா அதை ஏற்றுக்கொள்ளும் என்றும் எந்த காலக்கெடுவையும் விட தேசிய நலனுக்கே முன்னுரிமை எனவும் கோயல் கூறியிருந்தார்.

    இந்நிலையில், "பியூஷ் கோயல் எவ்வளவு வேண்டுமானாலும் தனது நெஞ்சை அடித்துக் கொள்ளலாம். ஆனால் மோடி டிரம்பின் வரி காலக்கெடுவுக்கு பணிவுடன் அடிபணிவார் என்று நான் கூறுகிறேன்" என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஜூலை 9 ஆம் தேதிக்குள் டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். 

    • டிரம்ப் இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.
    • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க இந்தியா முடிவு

    அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.

    இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

    இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மீது பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடியாக, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு சுமார் ரூ. 6,200 கோடி வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தார்.
    • பின்னர் இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.

    இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

    இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை| அமெரிக்க செனட் நிறைவேற்றியது.

    கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. 2024-25 நிதியாண்டில் இந்தியா - ரஷ்யா இடையே 68.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கனடா அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.
    • இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா.

    வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.

    இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நகலெடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

    ஐரோப்பிய ஒன்றியமும் இதே காரியத்தைச் செய்துள்ளது. தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது.

    இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.

    அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாளுக்குள் கனடாவுக்குத் தெரிவிப்போம் என பதிவிட்டுள்ளார்.

    • டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
    • 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும்.

    இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூர்ந்து, அடுத்த பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் இருக்கலாம் என்று கூறினார்.

    "எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நேற்று சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களைச் செய்கிறோம்.

    விரைவில் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் வரப்போகிறது. அது மிகப் பெரியது. நாங்கள் இந்திய சந்தைகளைத் திறக்கிறோம்" என்று டிரம்ப் கூறினார்.

    சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அதிகாரிகளும், வர்த்தக அமைச்சகத்தின் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை தற்போதைய 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.  

    • அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது.
    • இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வெகுவாக குறைந்தது.

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும். இல்லையென்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அமல்படுத்தினார். பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டதன் விளைவாக 90 நாட்களுக்கு அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளார். அதேளையில் சீனா பதில் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனா அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்திருந்தது. தற்போது கடந்த மாதம் இது 28.8 பில்லியன் அமெரிக்க டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 10.8 பில்லியன் டாலர் வீழ்ச்சியடைந்துள்ளது.

    அதேவேளையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 12 சதவீதமாக இருந்தது. தற்போது 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவிற்கான ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரித்துள்ளது. ஜெர்மனிக்கான ஏற்றுமதி 12 சதவீத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது மொத்த ஏற்றுமதி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி 3.4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தக உபரி 103.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசினார். அப்போது வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    • அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
    • அதிபர் டிரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

    இந்தியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

    அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) எட்டாவது கூட்டத்தில் லுட்னிக், அதிபர் டிரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

    இருப்பினும் ரஷியாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை வாங்குவது, டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற சில விஷயங்கள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்ததாக தெரிவித்தார். 

    அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

    • பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைப்பேசி உரையாடல் நடந்தது.
    • வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைப்பேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், எனது நண்பர் பிரதமர் கெயர் ஸ்டார்மர் உடன் பேசுவதில் மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, இந்தியாவும் இங்கிலாந்தும் பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளன.

    இது நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும், மேலும் நமது இரு பொருளாதாரங்களிலும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும்.

    பிரதமர் ஸ்டார்மரை விரைவில் இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவிக்காலத்தில் இருந்து இரு நாடுகளும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவையும் அடங்கும்.

    • செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் டவுன் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் உதவி கமிஷன் வெங்கடேசன் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அங்கு வசித்து வந்த லோகேஸ்வரன் (வயது 32) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (27) ஆகியோரை கைது செய்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
    • ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பையர் மூலமாக பனியன் ஆர்டர் வழங்கப்பட்டு, திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தினர் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். இதற்கான தொகையாக ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பணத்தை முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் முறையிட்டார். ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு நெதர்லாந்தில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொடுத்தது. மீதம் உள்ள ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஏற்றுமதியாளர்கள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்தால், ஆவணங்களின் அடிப்படையில் இதுபோல் பணத்தை பெறுவது எளிது. எனவே முறைப்படி உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நேற்று 1 டாலரின் மதிப்பு ₹85.18 ஆக இருந்தது
    • அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12 ஆக சரிந்தது. தொடர்ந்து நேற்று [செய்வ்வாய்கிழமை] 1 டாலரின் மதிப்பு ₹85.18ஆக இருந்த நிலையில், இன்று [புதன்கிழமை] மேலும் சரிந்து ₹85.41ஆக உள்ளது. தொடர்ச்சியாக 6வது முறையாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்து வருகிறது. அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அதிகரிப்பு மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.

    மேலும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்தது மற்றும் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரி பற்றிய அச்சமும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் நிலையான ரூபாய் மதிப்பு சரிவு தொடரலாம் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    • வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

    திருப்பூர் 

    இந்தியா - பிரிட்டன் இடையே, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை 29ல் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்று, முக்கிய அம்சங்கள் குறித்து பேசினர்.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:- இந்திய ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு வேகமெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.முக்கியமான, 15 அம்சம் குறித்து இரு நாட்டு தொழில் நுட்பக்குழுவினர் 85 அமர்வுகளில் பேசிஉள்ளனர்.வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய ஆயத்த ஆடைகள், பிரிட்டன் சந்தையில் வரியின்றி இறக்குமதியாகும்.இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய ஏற்றுமதியாளர்கள், போட்டி நாடுகளை எளிதாக எதிர்கொண்டு, பிரிட்டனுக்கான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க செய்ய முடியும். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, பிரிட்டனிலிருந்து ஆர்டர் வருகை கண்டிப்பாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×