என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iran Protests"

    • இது வன்முறையாக மாறி 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் எந்த நேரத்திலும் டிரம்ப் உத்ராவிடலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.

    ஈரானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஈரானில் பொருளாதார நெருக்கடியால் கடந்த மாதம் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்தது. இது வன்முறையாக மாறி 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே ஈரான் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தார். ஆனால் அமெரிக்க தலையீட்டை ஈரான் அரசு எதிர்த்தது.

    இதற்கிடையே அமெரிக்க கடற்படை பிரிவு ஈரான் நோக்கி அனுப்பப்பட்டதாக டிரம்ப் கூறியது பதற்றத்தை அதிகரித்தது. ஈரான் தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயார் என தெரிவித்தது. இருப்பினும் ஒரு நாடுகளும் சூழலை மேலும் தீவிரமடைய செய்யாமல் அமைதி காத்து வருகிறது.

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்தார். ஆனாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் எந்த நேரத்திலும் டிரம்ப் உத்ராவிடலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.

    இந்நிலையில் ஈரானில் நிலவும் மிக மோசமான பாதுகாப்பு சூழல் மற்றும் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தி உள்ளது.

    ஈரானில் இணையதளம் மற்றும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க அரசு உதவி செய்யும் வரை காத்திருக்காமல் சொந்தமாக வெளியேற வழிகளைத் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    • போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • இந்தியா- ஈரானின் உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது

    பொருளாதார நெருக்கடியால் டிசம்பர் 28 முதல் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வந்தது.

    இந்தத் தீர்மானத்தின் மூலம் ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தும்.

    மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், 25 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தை தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி,"இந்திய அரசின் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மஜீத் ஹக்கீம் இல்லாஹி, இந்தியா- ஈரானின் உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.
    • ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒளிபரப்பானது.

    ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வத் தேசியத் தொலைக்காட்சி சேனல் ஹேக் செய்யப்பட்டது.

    1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஷா வம்சத்தின் தற்போதைய இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.

    இளவரசர் ரெசா பஹ்லவி, "நீங்கள் ஈரானின் தேசிய ராணுவம், இந்த இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் அல்ல. போராட்டக்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள், அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்று ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ தேசிய தொலைக்காட்சியில் ஹேக்கர்களால் ஒளிபரப்பப்பட்டது.

    ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு கொண்ட தேசியத் தொலைக்காட்சியே ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.
    • 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு.

    ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.

    இதில் காவல்துறைக்கும் போராடகர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமெரிக்க டிரம்ப், "போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும்" என்று ஏற்றிவிட்டார்.

    தங்கள் நாட்டு விவகாரத்தில் டிரம்ப் தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு எச்சரித்தது. 

    போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரான் அதிகாரிகள், கொலைகளை நிறுத்துவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    டிரம்ப் உடைய இந்த திடீர் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த போராடும் ஈரானியர்கள், அவரது வார்த்தைகளை நம்பி வீதிக்கு வந்ததாலேயே இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

    "டிரம்ப் எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு, இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டார்" என்று தெஹ்ரான் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  

    • வன்முறையால் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது.
    • ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.

    பொருளாதார நெருக்கடியால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதில் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 600 க்கும் ஏற்பட்டோர் கொல்லப்பட்டுள்னர். 

    இந்த நிலையில் "ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளன.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அவை வன்முறையாக மாறக்கூடும்.

    இதனால் ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சாராத வகையில் ஈரானை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தை வைத்திருங்கள்.

    உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான கட்டிடத்தை கண்டறிந்து அங்கு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஈரான் போராட்டத்தை ஆதரித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும் என கூறியிருந்தார்.  

    • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
    • சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார். 

    • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
    • அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

     இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.

    ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.

    அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.

    ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    • ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
    • ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் முழுவதும் போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. சாலைகளில் ஆயிரகணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறார்கள்.

    போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது.

    இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தலைநகர் தெக்ரானில் போராட்டங்களில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. முதலுதவி செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்ற மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ரஷ்டில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கலவரக்காரர்களுக்கு உதவியவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும். வக்கீல்கள் கவனமாகவும் தாமதமின்றியும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, தேசத் துரோகம் மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கி, நாட்டின் மீது வெளிநாட்டு ஆதிக்கத்தை நாடுபவர்களுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

    நடவடிக்கைகள் எந்தவித மென்மை, கருணை அல்லது சலுகையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும், ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை அவர் நிச்சயமாகச் செய்வார் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்கள் டிரம்ப்பிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

    • போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • இதுவரை 82000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதித்துறை தலைவர் தகவல்

    மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரானில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்டு இறந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் பலர் பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற 22000 நபர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 22000 பேர் உள்பட இதுவரை 82000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதித்துறை தலைவர் ஏஜெய் கூறியதாக மேற்கோள் காட்டி அரசு ஊடகத்தில் இன்று செய்தி வெளியாகி உள்ளது.

    ஆனால் எந்த காலக்கட்டத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது? எப்போது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு? என்ற விரிவான தகவல் வெளியாகவில்லை.

    ஈரான் தலைவர் அலி காமேனி பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாக அரசு ஊடகம் கடந்த மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×