search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garment"

    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை கொத்ததெரு தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும்மான ராஜ்குமார் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ரெங்கநாதன் கொடியே ற்றினார்.இதில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுகுழு உறுப்பினர் கனிவ ண்ணன், நகர தலைவர் ராமானுஜம், துணைத் தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வடவீர பாண்டியன், மகளிர் அனியினர் சுதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளீரனினர் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    • ரெகுநாதபுரம் ஊராட்சியில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 30 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் முகாமை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் இந்திய அரசின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காரைக்கால் நிறுவ னம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கான திறன் வளர்ப்பு திட்டம் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சியில் 32 பெண்கள் கலந்து கொண்டனர். 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். ஓ.என்.ஜி.சி மூலம் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய தையல் மிஷின்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டங்கள் சீரமைப்பு பணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்குதல், 2 கிராமங்களுக்கு உயர் மின் கம்பம் அமைத்து கொடுத்தல், ஒரு கிராமத்திற்கு 7 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்கால் நிறுவனத்தின் மேலாளர்கள் ரவிக்குமார், விஜயகண்ணன், தங்கமணி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் புல்லாணி (திருப்புல்லாணி), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (ரெகுநாதபுரம்), முத்தமிழ் செல்வி பூர்ணவேல் (வாலாந்தரவை), மண்டபம் வட்டார மருத்துவர் சுரேந்தர் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாள்
    • பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்

    அரியலூர் 

    சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அரியலூர் நகரிலுள்ள தலைவர்கள் சிலைகளுக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த மண்டல துணைச் செயலர் மாறன், மாநில பொறுப்பாளர்கள் தனக்கோடி, கருப்புசாமி, முன்னாள் மாவட்டச் செயலர் செல்வநம்பி, அரியலூர் தொகுதிச் செயலர் மருதவாணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதாகர் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கர், பெரியார், காந்தி, காமராஜர் ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    • இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு.
    • ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர்,ஜூலை.31-

    இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு. பருத்தி உள்ளிட்ட மூலப்பொருள் அதிகம் கிடைக்காது என்பதால் சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

    காரணம் பொருளாதா ரத்தில் பின்தங்கிய நாடு என்ற அடிப்படையில் உலக நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவா னதுதான். இந்தியாவுடன் 2011ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச ஜவுளி இந்தியாவுக்குள் வராதபடி கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி., அமலான பின் அந்த வரி விலக்கப்பட்டதால், எவ்வித தடையுமில்லாமல் வங்கதேச வர்த்தகர்கள், தமிழகத்தின் தென் மாவட்ட எல்லை வரை கடை விரிக்க துவங்கியுள்ளனர். இறக்குமதி வரியும் இல்லாததால் 30 முதல் 40 சதவீதம் குறைவான செலவுடன் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கிறது.

    இவ்வாறு கடந்த ஒரே ஆண்டில் வங்கதேச இறக்குமதி, 113 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது உள்நாட்டு சந்தைகளை பதம்பார்த்துவிட்டது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகளுடன் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போராடி வெற்றி கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக சீனாவின் வர்த்தகர்களும், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.

    குறிப்பிட்ட பொருள் இறக்குமதியால் உள்நாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்படுகிறது. உள்நாட்டு விவசாயிகள் பாதுகாப்புக்காக பஞ்சு இறக்குமதிக்கு வரி விதிப்பதும் அத்தகைய வரிதான். வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கும் 12 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. 2016 முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கும் ஜி.எஸ்.டி.,க்கும் சம்பந்தமில்லை. உள்நாட்டு சந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு மீண்டும் கவுன்டர் வெய்லிங் வரி விதிப்பை தற்காலிகமாக அமலாக்க முடியும்.

    இது குறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி, நுால்விலை குறைந்த பின் சீராகி விட்டது. இருப்பினும், கடந்த ஓராண்டாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். நுால் விலை உயர்ந்து இருந்த போது, உள்நாட்டு தயாரிப்பு பாதிக்கப்பட்டது. அப்போது, வங்கதேச இறக்குமதியை பலரும் ஊக்குவித்தனர். அதன் விளைவு, தற்போது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு, உள்நாட்டு சந்தைகளிலேயே மதிப்பில்லாமல் போய்விடும். மலிவான விலையில் வங்கதேச ஆடையை வழங்குகின்றனர். வரிச்சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் வங்கதேச ஆடைகள் ஆக்கிரமித்துள்ளன. சீனாவில் இருந்து வங்கதேசம் வந்து அங்கிருந்து திருப்பூருக்கு ஆடைகள் வருகின்றன. இது சீனாவின் தலையீடாகவும் மாறியுள்ளது. உற்பத்தி செலவில் 30 சதவீதம் வரை குறைவு என்பதால் வங்கதேச ஆடை குறைவான விலைக்கு கிடைக்கிறது. உள்ளூரில் தயாரித்த ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே வங்கதேச இறக்குமதியை கட்டுப்படுத்தி, தொழிலை பாதுகாக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, சீனாவின் வர்த்தகர்களும் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.

    • கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும்.

    திருப்பூர்:

    கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மும்பையில் நாளுக்கு நாள் மழை தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    திருப்பூரில் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி சில மாதங்களாக சற்று வேகமெடுத்துள்ளது. ஏப்ரல் முதல் இம்மாதம் வரை கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஆடை வர்த்தகத்தில் 30 சதவீதம் மும்பை சந்தையை சார்ந்துள்ளது. மழையால் தற்போது மும்பையில் ஆடை வர்த்தகம் சரிந்துள்ளது.

    இதனால் திருப்பூரிலிருந்து ஆடை கொள்முதல் செய்வதை மும்பை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர். மழை தீவிரமடையும் போது வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு சரக்கு அனுப்புவதும் தடைபடும். வெயில் நீடிப்பதால் ஆந்திரா, டில்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கோடைக்கால ஆடை ரகங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

    பருவமழை தீவிரமடைந்து செப்டம்பர் வரை திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பாதிக்க செய்யும். அதன் பின் தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்னதானம் வழங்கப்பட்டது
    • திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி கதிரம்பட்டி கிராமத்தில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான டாக்டர் என் திருப்பதி தலைமை வகித்து படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிப் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கருணாகரன், சிவன், நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, சிவக்குமார், பழனி, சசி, சுதாகர், உட்பட பலர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாதேவி சரவணன், தேன்மொழி வெங்கடேசன், வசந்தி வெங்கடேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர் எம்.ஆர். மனோகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கதிரம்பட்டி பரமேஸ்வரன் சுப்பிரமணி,, சக்திவேல், ராஜி, செய்து இருந்தனர்.

    • திருப்பத்தூரில் முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள்.

    திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் தர்மபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே பிபின் ராவத் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முப்படை வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.

    துணைத் தலைவர் கே.அருள் செயலாளர் ஆர்.மோகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முப்படையை சேர்ந்த வீரர்கள் முனியப்பன், கனகராஜ் லோகநாதன் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • கந்திலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திமுக கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி கந்திலி கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர் தசரதன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ குணசேகரன் அவைத்தலைவர் ஏ. ராஜா முன்னிலை வகித்தனர்.

    அண்ணா திருவுருவப்படத்திற்கு நல்லதம்பி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் ஆர் குலோத்துங்கன் ஒன்றிய துணைச் செயலாளர் கே. சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பி பிரபு ஒன்றிய கவுன்சிலர் சி. எஸ்.ஆர்.வினோத், ஊராட்சி செயலாளர் கே குமரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன், எஸ் கார்த்திக், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய துணைச் செயலாளர் வி.டி. அழகிரி நன்றி கூறினார்.

    ×