என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முப்படை தளபதி பிபின் ராவத் படத்திற்கு மாலை அணிவிப்பு
    X

    திருப்பத்தூரில் முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்த காட்சி.

    முப்படை தளபதி பிபின் ராவத் படத்திற்கு மாலை அணிவிப்பு

    • திருப்பத்தூரில் முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள்.

    திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் தர்மபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே பிபின் ராவத் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முப்படை வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.

    துணைத் தலைவர் கே.அருள் செயலாளர் ஆர்.மோகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முப்படையை சேர்ந்த வீரர்கள் முனியப்பன், கனகராஜ் லோகநாதன் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    Next Story
    ×