தலைவர்கள் சிலைகளுக்கு வி.சி.க.-வினர் மாலை அணிவிப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாள்பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்
தலைவர்கள் சிலைகளுக்கு வி.சி.க.-வினர் மாலை அணிவிப்பு
Published on

அரியலூர் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, அரியலூர் நகரிலுள்ள தலைவர்கள் சிலைகளுக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த மண்டல துணைச் செயலர் மாறன், மாநில பொறுப்பாளர்கள் தனக்கோடி, கருப்புசாமி, முன்னாள் மாவட்டச் செயலர் செல்வநம்பி, அரியலூர் தொகுதிச் செயலர் மருதவாணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதாகர் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று செட்டி ஏரிக்கரையிலுள்ள அம்பேத்கர், பெரியார், காந்தி, காமராஜர் ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com