அண்ணா படத்திற்கு மாலை அணிவிப்பு

கந்திலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்ததுஏராளமானோர் கலந்து கொண்டனர்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடிய காட்சி.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடிய காட்சி.
Published on

திருப்பத்தூர்:

திமுக கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி கந்திலி கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர் தசரதன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ குணசேகரன் அவைத்தலைவர் ஏ. ராஜா முன்னிலை வகித்தனர்.

அண்ணா திருவுருவப்படத்திற்கு நல்லதம்பி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் ஆர் குலோத்துங்கன் ஒன்றிய துணைச் செயலாளர் கே. சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பி பிரபு ஒன்றிய கவுன்சிலர் சி. எஸ்.ஆர்.வினோத், ஊராட்சி செயலாளர் கே குமரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன், எஸ் கார்த்திக், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய துணைச் செயலாளர் வி.டி. அழகிரி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com