என் மலர்
நீங்கள் தேடியது "ஈரான் போராட்டம்"
- இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.
- ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒளிபரப்பானது.
ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வத் தேசியத் தொலைக்காட்சி சேனல் ஹேக் செய்யப்பட்டது.
1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஷா வம்சத்தின் தற்போதைய இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.
இளவரசர் ரெசா பஹ்லவி, "நீங்கள் ஈரானின் தேசிய ராணுவம், இந்த இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் அல்ல. போராட்டக்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள், அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்று ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ தேசிய தொலைக்காட்சியில் ஹேக்கர்களால் ஒளிபரப்பப்பட்டது.
ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு கொண்ட தேசியத் தொலைக்காட்சியே ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.
- 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு.
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.
இதில் காவல்துறைக்கும் போராடகர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்க டிரம்ப், "போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும்" என்று ஏற்றிவிட்டார்.
தங்கள் நாட்டு விவகாரத்தில் டிரம்ப் தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு எச்சரித்தது.
போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் அதிகாரிகள், கொலைகளை நிறுத்துவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் உடைய இந்த திடீர் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த போராடும் ஈரானியர்கள், அவரது வார்த்தைகளை நம்பி வீதிக்கு வந்ததாலேயே இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
"டிரம்ப் எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு, இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டார்" என்று தெஹ்ரான் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
- அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்.
- தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடுங்கள் என டிரம்ப் கூறிய நிலையில் அறிவுறுத்தல்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர் கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலிகமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் போராட்டம்-வன்முறையில் 646 பேர் பலியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடுங்கள் உதவி வந்து கொண்டே இருக்கிறது என டிரம்ப் கூறிய நிலையில் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
- வன்முறையால் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது.
- ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.
பொருளாதார நெருக்கடியால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதில் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 600 க்கும் ஏற்பட்டோர் கொல்லப்பட்டுள்னர்.
இந்த நிலையில் "ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அவை வன்முறையாக மாறக்கூடும்.
இதனால் ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சாராத வகையில் ஈரானை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தை வைத்திருங்கள்.
உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான கட்டிடத்தை கண்டறிந்து அங்கு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரான் போராட்டத்தை ஆதரித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும் என கூறியிருந்தார்.
- போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
- சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார்.
- போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
- அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.
ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.
அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.
ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
- போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இதுவரை 82000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதித்துறை தலைவர் தகவல்
மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரானில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்டு இறந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் பலர் பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற 22000 நபர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 22000 பேர் உள்பட இதுவரை 82000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதித்துறை தலைவர் ஏஜெய் கூறியதாக மேற்கோள் காட்டி அரசு ஊடகத்தில் இன்று செய்தி வெளியாகி உள்ளது.
ஆனால் எந்த காலக்கட்டத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது? எப்போது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு? என்ற விரிவான தகவல் வெளியாகவில்லை.
ஈரான் தலைவர் அலி காமேனி பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாக அரசு ஊடகம் கடந்த மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






