என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iran Violence"

    • இரு நாடுகள் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • போராட்டங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செய்யும் துரோகம்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் சுமார் 6,900 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்துள்ளது.

    குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்குக் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக பேசியிருந்தார். மேலும் ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை பிரிவு சென்றுகொண்டிருப்பதாக கூறினார். ஆனால் அதன் பின் ஈரான் - அமெரிக்கா அரசுகள் இடையே சமரசம் ஏற்பட்டது.

    ஒருபுறம் போராட்டக்காரர்களைக் கொடூரமாக ஒடுக்கி வரும் ஈரான், மறுபுறம் அமெரிக்காவுடன் ஓமனில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இரு நாடுகள் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஈரானின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் ஈரானின் தெற்கு துறைமுக நகரமான புஷெஹ்ரை சேர்ந்த பூரியா ஹமிதி என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தனது தற்கொலைக்கு முன்னதாக பூரியா ஹமிதி, 10 நிமிடம் வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார்.

    அதில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானின் மதவாத அரசுடன் எந்தவித இராஜதந்திர ஒப்பந்தத்தையும் செய்யக் கூடாது. இந்த அரசுடன் ஒப்பந்தம் செய்வது, போராட்டங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செய்யும் துரோகம்.

    ஈரானில் நடக்கும் போராட்டங்களில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது உக்ரைன்-ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்களை விடப் பெரிய இனப்படுகொலை.

    இந்த ஆயுதம் ஏந்திய அரசை எங்களால் தனியாக எதிர்கொள்ள முடியாது. அமெரிக்கா ஈரானைத் தாக்குவது மட்டுமே எங்களது கடைசி நம்பிக்கை. ஈரான் நீடூழி வாழ்க" என்று பேசியுள்ளார்.  

    • போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • இந்தியா- ஈரானின் உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது

    பொருளாதார நெருக்கடியால் டிசம்பர் 28 முதல் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வந்தது.

    இந்தத் தீர்மானத்தின் மூலம் ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தும்.

    மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், 25 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தை தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி,"இந்திய அரசின் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மஜீத் ஹக்கீம் இல்லாஹி, இந்தியா- ஈரானின் உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும்.
    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது.

    போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்தார். மேலும் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படையான ஆர்மடா செல்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலையும் எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போர் என்று கருதுவோம். இந்த முறை எந்தவொரு தாக்கு தலையும் வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத, துல்லியமான, இயக்கவியல் ரீதியான என்று அதை அவர்கள் எப்படி அழைத்தாலும் சரி எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம்.

    அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும். எங்களை தாக்கினால் அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடியை கொடுப்போம்.

    மேலும் இதை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான மிகக் கடுமையான முறையில் நாங்கள் பதிலடி கொடுப்போம். அமெரிக்காவின் ராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்காக அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்.

    ஆனால் எங்கள் ராணுவம் மோசமான சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது. இதனால்தான் ஈரானில் அனைத்தும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப் பட்டு உள்ளன என்றார்.

    அதேபோல் ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். 

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது என்றார்.  

    • இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.
    • ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒளிபரப்பானது.

    ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வத் தேசியத் தொலைக்காட்சி சேனல் ஹேக் செய்யப்பட்டது.

    1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஷா வம்சத்தின் தற்போதைய இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.

    இளவரசர் ரெசா பஹ்லவி, "நீங்கள் ஈரானின் தேசிய ராணுவம், இந்த இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் அல்ல. போராட்டக்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள், அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்று ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ தேசிய தொலைக்காட்சியில் ஹேக்கர்களால் ஒளிபரப்பப்பட்டது.

    ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு கொண்ட தேசியத் தொலைக்காட்சியே ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.
    • 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு.

    ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.

    இதில் காவல்துறைக்கும் போராடகர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமெரிக்க டிரம்ப், "போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும்" என்று ஏற்றிவிட்டார்.

    தங்கள் நாட்டு விவகாரத்தில் டிரம்ப் தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு எச்சரித்தது. 

    போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரான் அதிகாரிகள், கொலைகளை நிறுத்துவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    டிரம்ப் உடைய இந்த திடீர் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த போராடும் ஈரானியர்கள், அவரது வார்த்தைகளை நம்பி வீதிக்கு வந்ததாலேயே இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

    "டிரம்ப் எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு, இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டார்" என்று தெஹ்ரான் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  

    • வன்முறையால் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது.
    • ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.

    பொருளாதார நெருக்கடியால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதில் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 600 க்கும் ஏற்பட்டோர் கொல்லப்பட்டுள்னர். 

    இந்த நிலையில் "ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளன.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அவை வன்முறையாக மாறக்கூடும்.

    இதனால் ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சாராத வகையில் ஈரானை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தை வைத்திருங்கள்.

    உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான கட்டிடத்தை கண்டறிந்து அங்கு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஈரான் போராட்டத்தை ஆதரித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும் என கூறியிருந்தார்.  

    • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
    • சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார். 

    • ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்தனர்.
    • கடந்த 28-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

    தெஹ்ரான்:

    ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்தனர். கடந்த 28-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முதலில் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கிய போராட்டம் , நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. குறிப்பாக கிராமப்புற மாகாணங்களில் போராட்டங்கள் நடந்தது.

    இந்த நிலையில் ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. தலைநகர் தெஹ்ரானில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அஸ்னா நகரில் மக்கள் சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர்.

    அங்கு போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஈரானின் சஹார்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது.

    ஈரானில் போராட்டம்-வன்முறையில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதே உயிரிழப்புக்கு காரணம் என்று ஆர்வலர் குழுக்கள் குற்றம் சாட்டி உள்ளன. இதற்கிடையே போராட்டக்காரர்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • ஈரானில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தல்.
    • தனிப்பட்ட பிரச்சினைக்காக ஐ.நா. மனித உரிமை கூட்டத்தை கூட்ட ஈரான் கடும் எதிர்ப்பு.

    ஜெனீவா:

    ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக பேசியதாக கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 185 பேர் பலியாகி விட்டதாகவும், இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்தனர். 


    இந்நிலையில் ஈரான் போராட்ட வன்முறை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் விவாதம் நடத்த 12 நாடுகளின் சார்பில் ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து நாடுகளின் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நாடுகளின் தூதர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஐ.நா.மனித உரிமைகள் கவுசிலிடம் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் ஈரான் இஸ்லாமிய குடியரசில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரையில்மனித உரிமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு நிலைமையை சரி செய்ய, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் அமர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஐநா. மனித உரிமைகள் கவுன்சிலின் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர். நவம்பர் 24ந் தேதி இந்த கூட்டம் நடத்த வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

    ×