என் மலர்tooltip icon

    ஈரான்

    • இது வன்முறையாக மாறி 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் எந்த நேரத்திலும் டிரம்ப் உத்ராவிடலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.

    ஈரானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஈரானில் பொருளாதார நெருக்கடியால் கடந்த மாதம் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்தது. இது வன்முறையாக மாறி 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே ஈரான் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தார். ஆனால் அமெரிக்க தலையீட்டை ஈரான் அரசு எதிர்த்தது.

    இதற்கிடையே அமெரிக்க கடற்படை பிரிவு ஈரான் நோக்கி அனுப்பப்பட்டதாக டிரம்ப் கூறியது பதற்றத்தை அதிகரித்தது. ஈரான் தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயார் என தெரிவித்தது. இருப்பினும் ஒரு நாடுகளும் சூழலை மேலும் தீவிரமடைய செய்யாமல் அமைதி காத்து வருகிறது.

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்தார். ஆனாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் எந்த நேரத்திலும் டிரம்ப் உத்ராவிடலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.

    இந்நிலையில் ஈரானில் நிலவும் மிக மோசமான பாதுகாப்பு சூழல் மற்றும் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தி உள்ளது.

    ஈரானில் இணையதளம் மற்றும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க அரசு உதவி செய்யும் வரை காத்திருக்காமல் சொந்தமாக வெளியேற வழிகளைத் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    • சட்டரீதியான தெளிவற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளது.
    • ஈரானிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

    ஈரானில் பெண்கள் இனி மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம் என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பல ஆண்டுகால சட்டரீதியான தெளிவற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளது.

    முன்னதாக, பெண்கள் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை ஓட்டுவதை சட்டம் வெளிப்படையாகத் தடை செய்யவில்லை, ஆனால் நடைமுறையில் அதிகாரிகள் உரிமங்களை வழங்க மறுத்து வந்தனர்.

    ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது ரெசா அரேஃப், போக்குவரத்து சட்டத்தை தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று (பிப். 3) ஒரு தீர்மானத்தில் கையெழுத்திட்டார். இந்த தீர்மானம் ஜனவரி மாத இறுதியில் ஈரானிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது என்று அந்நாட்டின் இல்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த தீர்மானம், போக்குவரத்து காவல் துறையினரை "பெண் விண்ணப்பதாரர்களுக்கு நடைமுறை பயிற்சி அளிக்கவும், காவல்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு தேர்வை ஏற்பாடு செய்யவும், பெண்களுக்கு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உரிமங்களை வழங்கவும்" கட்டாயப்படுத்துகிறது என்று இல்னா கூறியுள்ளது.

    • ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது.
    • போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்போம் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    தெஹ்ரான்:

    ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய படையை அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், ஈரானில் உள்ள பிரபல துறைமுகமான பந்தர் அபாசில் ஈரான் நாட்டிற்கு சொந்தமான போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. திடீரென அந்தத் துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    • இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர்.
    • ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் இன்று 8 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.

    இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    வெடிப்பில் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த கடைகள் மற்றும் பல வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

    ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அதை ஈரான் அரசு ஊடகம் மறுத்துள்ளது.

    எரிவாயு கசிவால் இந்த விபத்து நடந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது? இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது விபத்தா? என்பது குறித்து ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் கடற்படை ஈரானை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளர் பெயரில் பல சொத்துக்கள் அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது.
    • ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டது.

    ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56), வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களைக் ரகசியமாக குவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

    லண்டனின் மிகவும் விலையுயர்ந்த பகுதியான Bishops Avenue வில்  சொகுசு பங்களாக்கள் முதல் ஜெர்மனியின் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை மோஜ்தபாவின் ரகசிய சொத்துக்கள் பல இடங்களில் பரவியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிக்கைபடி, அமெரிக்காவின் தடைகள் அமலில் இருந்தபோதிலும், ஷெல் நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் மூலம் இந்தச் சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளர் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது.

    2014-ஆம் ஆண்டில் மட்டும் ஒரே ஒரு கட்டிடத்திற்காக சுமார் ரூ. 300 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் ஸ்பெயினின் மல்லோர்கா பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளும் இவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

    ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் வங்கிகள் வழியாக வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

    ஈரான் பொருளாதார நெருக்கடியால் அத்தியவிசய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வரும் சூழலில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈ          

    • மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    டெஹ்ரான்:

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.

    இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும்.
    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது.

    போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்தார். மேலும் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படையான ஆர்மடா செல்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலையும் எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போர் என்று கருதுவோம். இந்த முறை எந்தவொரு தாக்கு தலையும் வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத, துல்லியமான, இயக்கவியல் ரீதியான என்று அதை அவர்கள் எப்படி அழைத்தாலும் சரி எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம்.

    அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும். எங்களை தாக்கினால் அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடியை கொடுப்போம்.

    மேலும் இதை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான மிகக் கடுமையான முறையில் நாங்கள் பதிலடி கொடுப்போம். அமெரிக்காவின் ராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்காக அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்.

    ஆனால் எங்கள் ராணுவம் மோசமான சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது. இதனால்தான் ஈரானில் அனைத்தும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப் பட்டு உள்ளன என்றார்.

    அதேபோல் ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். 

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது என்றார்.  

    • இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.
    • ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒளிபரப்பானது.

    ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வத் தேசியத் தொலைக்காட்சி சேனல் ஹேக் செய்யப்பட்டது.

    1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஷா வம்சத்தின் தற்போதைய இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.

    இளவரசர் ரெசா பஹ்லவி, "நீங்கள் ஈரானின் தேசிய ராணுவம், இந்த இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் அல்ல. போராட்டக்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள், அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்று ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ தேசிய தொலைக்காட்சியில் ஹேக்கர்களால் ஒளிபரப்பப்பட்டது.

    ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு கொண்ட தேசியத் தொலைக்காட்சியே ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • நாடு தழுவிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
    • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு குற்றவாளி" என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.

    நாடு தழுவிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கைது செய்து ஈரான் அரசு மரண தண்டனை விதித்து வருகிறது. இதற்கு பல நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து அளித்த பேட்டியில்,"ஈரானில் புதிய தலைமையைத் தேட வேண்டிய நேரம் இது. 800-க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனையை அவர்கள் ரத்து செய்தனர். அவர்கள் ரத்து செய்ததை நான் மிகவும் மதிக்கிறேன்.

    இதன் காரணமாக ஈரான் விவகாரத்தில் அமெரிக்க தலையீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலோ அல்லது தூக்கிலிடப்பட்டாலோ அமெரிக்கா தலையிட வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

    இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு குற்றவாளி" என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் கலகக்காரர்கள் தான் ஈரானில் பல ஆயிரம் இறப்புகளுக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்தநிலையில் ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எந்தவொரு அநீதியான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதிலடி கடுமையானதாகவும் வருந்தத்தக்க வகையிலும் இருக்கும். உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம்.

    ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் காரணம். நீண்டகால விரோதமும் மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளும் ஈரானிய மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களுக்கு ஒரு முக்கிய காரணம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    டெஹ்ரான்:

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.

    இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் பாதுகாப்பு படைவீரர்கள் 500 பேர் அடங்குவர்.

    இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.
    • 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு.

    ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.

    இதில் காவல்துறைக்கும் போராடகர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமெரிக்க டிரம்ப், "போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும்" என்று ஏற்றிவிட்டார்.

    தங்கள் நாட்டு விவகாரத்தில் டிரம்ப் தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு எச்சரித்தது. 

    போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரான் அதிகாரிகள், கொலைகளை நிறுத்துவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    டிரம்ப் உடைய இந்த திடீர் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த போராடும் ஈரானியர்கள், அவரது வார்த்தைகளை நம்பி வீதிக்கு வந்ததாலேயே இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

    "டிரம்ப் எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு, இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டார்" என்று தெஹ்ரான் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  

    • 3,30,000 முதல் 3,60,000 பேர் காயமடைந்துள்ளனர்
    • மருத்துவ ஊழியர்களே நோயாளிகளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இரத்தத்தை கொடுத்துள்ளனர்.

    ஈரானில் இதுவரை போராட்டத்தில் சிக்கி 16,500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,30,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் புது அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

    தி சண்டே டைம்ஸ் இதழ் (பிரிட்டிஷ் பத்திரிக்கை) பெற்றுள்ள, அங்குள்ள மருத்துவர்களின் புதிய அறிக்கையின்படி, ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் குறைந்தது 16,500 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,30,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஈரானில் உள்ள எட்டு முக்கிய கண் மருத்துவமனைகள் மற்றும் 16 அவசர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த தகவல்களின்படி, குறைந்தது 16,500 முதல் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3,30,000 முதல் 3,60,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர்.

    குறைந்தது 700 முதல் 1,000 பேர் வரை கண்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையான நூர் கிளினிக்கில் 7,000 கண் காயங்கள் பதிவாகியுள்ளன. இரத்தப் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர். பல மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஊழியர்களே நோயாளிகளைக் காப்பாற்ற தங்கள் சொந்த இரத்தத்தை கொடுத்துள்ளனர்.

    ஈரான் அரசு விதித்துள்ள இணைய முடக்கத்தை தாண்டி, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையத்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் செய்தித்தாளிற்குப் பேட்டியளித்துள்ளனர். ஆனால் இதுவரை 2,885 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 3,090 மரணங்கள், மேலும், 22,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதே அதிகாரப்பூர்வ தகவலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

    ×