என் மலர்
நீங்கள் தேடியது "ஈரான் தலைவர்"
- நாடு தழுவிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு குற்றவாளி" என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.
நாடு தழுவிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கைது செய்து ஈரான் அரசு மரண தண்டனை விதித்து வருகிறது. இதற்கு பல நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து அளித்த பேட்டியில்,"ஈரானில் புதிய தலைமையைத் தேட வேண்டிய நேரம் இது. 800-க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனையை அவர்கள் ரத்து செய்தனர். அவர்கள் ரத்து செய்ததை நான் மிகவும் மதிக்கிறேன்.
இதன் காரணமாக ஈரான் விவகாரத்தில் அமெரிக்க தலையீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலோ அல்லது தூக்கிலிடப்பட்டாலோ அமெரிக்கா தலையிட வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு குற்றவாளி" என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் கலகக்காரர்கள் தான் ஈரானில் பல ஆயிரம் இறப்புகளுக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
எந்தவொரு அநீதியான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதிலடி கடுமையானதாகவும் வருந்தத்தக்க வகையிலும் இருக்கும். உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம்.
ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் காரணம். நீண்டகால விரோதமும் மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளும் ஈரானிய மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களுக்கு ஒரு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
- அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.
போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.
சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.
"ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உயர் [தேசிய-மத] தலைவராக (Supreme Leader) ருஹோல்லா கோமேனி பதவி வகித்தார்.1989 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின் தேசிய தலைவரான அயத்துல்லா அலி காமேனி [85 வயது] இன்று வரை அந்த பதவியில் இருக்கிறார்.

ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியும் ஆகும். இந்நிலையில் தற்போது இஸ்ரேலுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அடுத்த ஈரான் தேசிய தலைவராகத் தனது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி அயத்துல்லா காமேனியின் அவசர அழைப்பின்படி ஈரான் நிபுணர்கள் சபை [Assembly of Experts] -இல் அங்கம் வகிக்கும் 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ருஹோல்லா கோமேனியை அடுத்த தலைவராக ஏற்கும் முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறையில் இல்லாமல் அடுத்த தலைவர் தேர்வு நடப்பது வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சி மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் போராட்டம் வெடிக்கும் என்று அஞ்சுவதால் இந்த தலைவர் தேர்வு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அலி காமேனி பதவி விலகி மொஜிதாபாவிடம் அதிகாரம் கைமாறும் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக மொஜிதாபா காமேனிக்கு இந்த தலைமை பொறுப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது ஈரான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் மொஜிதாபா ஏற்கனவே செயல்பட்டு வருகிறார்.
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போராட்டங்களை ஒடுக்கியவர் மொஜ்தபா. எனவே அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.






