என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ஹமாஸ் போர்"

    • இந்த கைது வாரண்ட் குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
    • ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

    அங்காரா:

    பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 பே்ா கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    இந்நிலையில், காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு துருக்கி கோர்ட் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ராணுவ மந்திரி காட்ஸ், ராணுவ தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    விசாரணை இறுதியில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கைது வாரண்ட் குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

    ஏற்கனவே காசா மீதான இனப்படுகொலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    • பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது
    • போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும்

    கடந்த 2023-ம் ஆண்டு அக். 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதில் அளித்துள்ளது.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    67 ஆயிரம் உயிர்களைக்

    காவுகொண்ட பின்

    இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்

    முடிவுக்கு வருவதாய்த்

    தோன்றுகிறது

    பாலஸ்தீனத்திற்கே

    கூடுதல் இழப்புகள் என்பதால்

    இஸ்ரேலின்

    விட்டுக்கொடுத்தல்களை

    உலகம் வேண்டுகிறது

    காசாவின் பிணைக் கைதிகளும்

    இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்

    காதலர்கள் பூக்களைப்

    பரிமாறிக்கொள்வதைப் போல

    மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்

    முதலில் பாலஸ்தீனத்திற்கு

    உணவுப் பாதையைத்

    திறந்துவிடுங்கள்

    எலும்புக் கூடுகளுக்குள்

    உயிர் ஊறட்டும்

    கூடாரங்கள் மெல்ல மெல்லக்

    குடில்களாகட்டும்

    போர் விமானங்கள்

    பறந்த வானில்

    புறாக்கள் பறக்கட்டும்

    சமாதானத்தை முன்னெடுத்த

    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    ஏற்றுக்கொண்ட

    இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு

    இருவருக்கும்

    இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்

    உலக நாடுகள் பல

    ஒப்புக்கொண்ட வண்ணம்

    பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்

    "வெள்ளைப் பூக்கள்

    உலகம் எங்கும் மலர்கவே

    விடியும் பூமி

    அமைதிக்காக விடிகவே"

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
    • இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.

    காசா சிட்டி:

    பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

    இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

    இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு

    வரவேற்பு தெரிவித்துள்ளது.

    • கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்த போர் 2 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கிடையே கடந்த வாரம் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    இந்த நிலையில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்தது.

    அதன்படி நேற்று அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்தது.

    இதில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்து உள்ளன.

    • ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும்

    கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.

    காசா போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் அங்கிருந்தபடி ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தோஹாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை கத்தார் கடுமையாகக் கண்டிக்கிறது.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது. கத்தாரின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்படாது.

    இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். இது கத்தாரின் குடிமக்கள்  பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    பிராந்தியத்தின் பாதுகாப்பை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இஸ்ரேலின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.  இந்த தாக்குதலுக்கு ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

    இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை ஆபத்தான முறையில் மீறுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்துள்ளார்.

    அவ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் ஆபத்தானது. இந்தக் குற்றச் செயல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். கத்தாரின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.  

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 ஆண்டைக் கடந்தும் நடந்து வருகிறது.
    • காசாவில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    தோஹா:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023, அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,195 பேர் கொல்லப்பட்டனர். பலரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழு கடத்திச் சென்றது.

    இதனை தொடர்ந்து காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    சுமார் 2 ஆண்டாக நடந்து வரும் இந்தப் போரில் காசாவில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிணைக்கைதிகள் பலர் ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கையிலும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பிணைக்கைதிகளில் சிலர் காசா முனையில் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களும் இஸ்ரேல் படையினரால் மீட்கப்பட்டன. ஆனால், இன்னும் 48 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் காசா முனையில் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.

    இதற்கிடையே, இந்தப் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு கத்தார் ஆதரவு அளித்து வருகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கத்தாரில் இருந்தவாறு காசா போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கத்தார் மீது இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. தோஹாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

    பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அந்த அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
    • டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின.

    இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளது.

    இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின. இருப்பினும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது விழுந்து வெடித்தது.

    இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்தார். இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • இந்த போர் ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    காசா முனை:

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த போர் ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்தப் போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றன. இந்த நிவாரண பொருட்களை அமெரிக்க தொண்டு நிறுவனம் காசாவில் விநியோகித்து வருகிறது.

    இதற்கிடையே, காசாவின் ரபாவில் நிவாரண பொருட்களை வாங்க ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவிந்தனர். அப்போது, திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் காயமடைந்த பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. மேலும் 70-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினோம். ஹமாஸ் போராளிகள் வேண்டுமென்றே உதவி விநியோகத்தை சீர்குலைத்ததாகவும் குற்றம் சாட்டியது.

    • கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது.
    • பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

    காசா:

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

    காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது என காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 1,17,600 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா.சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.

    • பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி, "ஹமாஸ் போன்ற தாக்குதல் நடந்தால், இஸ்ரேல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை உதாரணமாக கூறி அதே மாதிரி பதிலடி கொடுக்கப்படும் பாஜக தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளை விடுவித்து வருகிறது.
    • அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்து வருகிறது.

    கெய்ரோ:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் சுமார் 2,000 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 50,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    மீதமுள்ள பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், எங்களிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என அறிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா இஸ்ரேலுக்கு போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்பிடம் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
    • இதனால் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    காசா:

    காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×