என் மலர்
நீங்கள் தேடியது "Pahalgam attack"
- 93-வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது.
- இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று விழாவின் ஒரு பகுதியாக இரவு விருந்தின்போது பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட இடங்களின் பெயரால் பல உணவுகளுக்கு பெயரிடப்பட்டது.
மெனுவில் உள்ள உணவுகள்: ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, ரஃபிகி ராரா மட்டன், போலாரி பனீர் மேத்தி மலாய், சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தல் மக்கானி, ஜகோபாபாத் மேவா புலாவ், பகவல்பூர் நான்.
இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
மெனுவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏப்ரல் 22 இல் 26 உயிர்களை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இரவு பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்.
- கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.
இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.
பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
- பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
- ஐ.நா. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசி வருகிறார்.
இதில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேசினார்.
அவர் பேசியதாவது, சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டு உள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது.
பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டில் இருந்து தான் வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மிகச் சமீபத்திய உதாரணம் கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது ஆகும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியது. மேலும் பயங்கரவாத தாக்குதல் அமைப்பாளர்களையும் குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தியது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நமது உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், அச்சுறுத்தல்களையும் நாம் உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பது ஒரு முன்னுரிமை ஆகும்.
ஏனென்றால் அது வெறி, வன்முறை, சகிப்புத்தன்மை மற்றும் பயத்தை ஒருங்கிணைக்கிறது. பயங்கரவாதத்தை நாடுகள் வெளிப் படையாக அரசுக் கொள்கையாக அறிவிக்கும்போது, பயங்கரவாதிகள் பகிரங்கமாக மகிமைப்படுத்தப்படும்போது, அத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீதும் இடைவிடாத அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அமைதியை மீட்டெடுக்க உதவும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நமது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நமது எல்லைகளை வலுவாகப் பாதுகாத்தல், அதற்கு அப்பால் வெளிநாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது அங்கு வசிக்கும் நமது சமூகத்திற்கு உதவியாக இருக்கும்.
ஐ.நா. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீர்திருத்தப்பட்ட கவுன்சில் உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்தப்பட வேண்டும். இந்தியா அதிக பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்ததில், பயங்கரவாதிகளுக்கு குல்காமில் வசித்து வரும் 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா தடவாள உதவிகள் செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் கட்டாரியாவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஒப்பந்த வேலையில் பணிபுரிந்து வந்த நிலையில், உள்ளூர் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வந்த கட்டாரியா, சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இயக்கங்களுக்கு உதவத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
- இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
- கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று தெரிவித்தார்.
கஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணப்படாமல், இந்தியாவுடனான இயல்பான உறவு பகல் கனவாகவே இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லண்டனில் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் , வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, "இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் காஷ்மீர் மக்களின் தியாகங்கள் வீணாகக் கூடாது. அவர்களின் இரத்தம் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரை அமைதி சாத்தியமில்லை. இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், அந்தப் பணத்தை பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக செலவழித்திருந்தால், நாடு அதிகம் வளர்ந்திருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்புடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டுமா அல்லது சண்டையிலேயே தொடர வேண்டுமா என்பது நம் கைகளில்தான் உள்ளது.
காஷ்மீர் மற்றும் காசா ஆகிய இரண்டு பிரச்சினைகளிலும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
- ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும்.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவை பழிவாங்குவோம் என்று லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்க துணைத் தலைவர் சை புல்லா கசூரி மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும். இது ஒரு கடினமான நேரம். ஆனால் எங்களின் தீர்மானம் வலுவாக உள்ளது என்று இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் சகோதரர்களின் ரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்குவோம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியதையடுத்து தாக்குதலை இந்தியா நிறுத்தியது.
இந்த நிலையில் லஷ்கர் தளபதி பகிரங்கமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன.
- 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 உயிர்களை பலிகொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன.
1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக பாகிஸ்தானுடன் மோதியது இதுவே முதல் முறை.
பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் புதிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்படுவது பதிவாகி உள்ளது.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உறுப்பு நாடுகள் கடுமையாக கண்டிக்கின்றன.
- பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டைத் தரநிலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஷாங்காய் அமைப்பு உச்சி மாநாட்டில், காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உறுப்பு நாடுகள் கடுமையாக கண்டிக்கின்றன. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம்.
இதுபோன்ற தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள், மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத குழுக்களை கூலிப்படை நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் உறுப்பு நாடுகள் கடுமையாகக் கண்டிக்கின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டைத் தரநிலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கம் உள்பட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்தை அழைக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி மாநாட்டில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்த ஷாங்காய் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தின் அறிக்கையில் பஹல்காம் தாக்குதல் பற்றி குறிப்பிடாததால் அதில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கையெழுத்திட மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
- இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
இதனிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இந்த விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின்
வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஷாக் தார், "காஷ்மீர் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.
- இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். நான் மிகவும் அற்புதமான மனிதரான மோடியிடம் பேசினேன்.
- போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
வாஷிங்டன்:
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கி அழித்தது. இதை யடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று தெரிவித்தது.
ஆனால் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் 30-க்கும் மேற்பட்ட முறை கூறி விட்டார். மேலும் போரில் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்து உள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். நான் மிகவும் அற்புதமான மனிதரான மோடியிடம் பேசினேன். அவரிடம் உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்சனை?' என்று கேட்டேன். தொடர்ந்து பாகிஸ்தானிடம் உங்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன பிரச்சனை? என்று கேட்டேன். இரு நாடுகள் இடையே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் பிரச்சனை இருந்து வருகிறது.
இரு நாடுகளிடமும் நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? தொடர்ந்து சண்டையிட்டால், நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை என்று கூறினேன். அல்லது தலைசுற்றும் அளவுக்கு உங்கள் மீது அதிக வரி விதிக்கப்போகிறோம் என்று கூறினேன். நீங்கள் இருவரும் ஒரு அணு ஆயுதப் போருக்குக் காரணமாக இருக்கப் போகிறீர்கள் என்று கூறி, நாளை என்னை மீண்டும் அழைக்கவும் என்று கூறினேன். ஆனால் அடுத்த 5 மணிநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்தது.
ஒருவேளை இரு நாடுகள் இடையே மீண்டும் சண்டை தொடங்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தால் நான் அதையும் நிறுத்துவேன். போர் நடக்க நாம் அனுமதிக்க முடியாது.
போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 150 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களாக இருக்கலாம். ஆனால் உண்மையான எண்ணிக்கையை அவர்கள் வெளியிடவில்லை.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
- பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
- இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் செப்டம்பர் 23 வரை நீட்டித்தது.
இஸ்லாமாபாத்:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
- ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை பாகிஸ்தான் அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.
பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 14) வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் இறந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.
ஹவில்தார் முகமது நவீத், நாயக் வக்கார் காலித், லான்ஸ் நாயக் திலாவர் கான் மற்றும் பிறருக்கு தங்கா-இ-பசலத் விருதுகள் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டன.
அதேபோல் நாயக் அப்துல் ரெஹ்மான், லான்ஸ் நாயக் இக்ரமுல்லா, சிப்பாய் அடில் அக்பர் மற்றும் பிறருக்கு தங்கா-இ-ஜுராத் விருதுகள் வழங்கப்பட்டன.






