என் மலர்
நீங்கள் தேடியது "லஷ்கர் இ தொய்பா"
- ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும்.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவை பழிவாங்குவோம் என்று லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்க துணைத் தலைவர் சை புல்லா கசூரி மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும். இது ஒரு கடினமான நேரம். ஆனால் எங்களின் தீர்மானம் வலுவாக உள்ளது என்று இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் சகோதரர்களின் ரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்குவோம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியதையடுத்து தாக்குதலை இந்தியா நிறுத்தியது.
இந்த நிலையில் லஷ்கர் தளபதி பகிரங்கமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.
காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் இந்திய போர் விமானம் ஊடுருவி, முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்பட 3 முக்கிய கட்டமைப்புகள் மீது குண்டுகளை வீசியது. இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன.
இந்தநிலையில் சேதம் அடைந்த லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தை மீண்டும் கட்டும் பணியை பயங்கரவாதிகள் தொடங்கி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சேதம் அடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
பின்னர் அங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை முடித்து புனரமைக்கப்பட்ட வளாகத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி திறக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இந்த கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.
- தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஆகும்.
- அமெரிக்கா சமீபத்தில் TRF ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ஆனால் பின்னர் அதை வாபஸ் பெற்றது.
இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் TRF அமைப்புக்கு தொடர்பில்லை.. இந்தியாவிடம் ஆதாரம் கேட்டும் பாகிஸ்தான் ஈடுபட்டதாக இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் மறுத்துள்ளார்.
TRF சம்பந்தப்பட்டிருந்தால் ஆதாரங்களைக் காட்டுமாறு அவர் இந்தியாவுக்கு சவால் விடுத்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய டார், TRF ஒரு சட்டவிரோத அமைப்பாகக் கருதப்படவில்லை என்றும், தாக்குதலில் TRF ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். அமெரிக்கா சமீபத்தில் TRF ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
- அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிக்கை வெளியிட்டார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
இந்நிலையில் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும் (FTO), (லஷ்கர் தொய்பாவால்) நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதியாகவும் (SDGT) அறிவிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் அமீர் ஹம்சா(வயது 66). அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இந்த நிலையில் லாகூரில் வசித்து வந்த அமீர் ஹம்சா வீட்டில் இருந்தபோது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரது உடம்பில் காயங்கள் இருந்தன. அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
படுகாயம் அடைந்த அவரை மீட்டு லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பாதுகாப்பின் கீழ் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைபுல்லா காலித் 3 நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப் பட்டுள்ளது.
அமீர் ஹம்சா, இந்தியாவில் நடந்த தாக்குதல் பின்னணியில் இருந்துள்ளார். இவரும் சைபுல்லாவும் 2005-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டனர்.
அமீர் ஹம்சா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் மற்றும் அப்துல் ரகுமான் மக்கி ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.
- மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.
- காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா உள்பட பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவை இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கத்தால் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள தினா பகுதியில் அபு கத்தால் இருந்தபோது அவரை மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.
சுட்டுக் கொல்லப்பட்ட அபு கத்தால், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர்களில் ஒருவராகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளர் ஆவார். மேலும் அவரை லஷ்கரின் தலைமை செயல்பாட்டுத் தளபதியாக நியமித்தார். ஹஃபீஸ் சயீத்தின் உத்தரவுகளை பெற்று அபு கத்தால் காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் பல தாக்குதலுக்கு அபு கத்தால் தலைமை தாங்கியுள்ளார். காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோவிலில் இருந்து திரும்பிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.
2023-ம் ஆண்டு ரஜோரியின் தங்ரி கிராமத்தில் பொது மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் அபு கத்தால் பெயர் இடம்பெற்றுள்ளது.
அதில் அபு கத்தால் உள்பட 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஆள் சேர்ப்பு செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்றும் காஷ்மீரில் பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அபு கத்தால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான்.
- அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.
கராச்சி:
இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் அந்த அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது பெயர் அட்னான் அகமது என்கிற அபு ஹன்சாலா சம்பவத்தன்று இவனை வீட்டின் அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அட்னான் அகமது உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை.
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான். அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுவின் நெருங்கிய கூட்டாளியாகவும், வலது கரமாகவும் இருந்து வந்தான். ஹபீஸ் சயீது காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஆவான்.
கடந்த 2015-ம் ஆண்டு உத்தம்பூரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
13-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் ஹபீஸ் சயீதுவை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான் அவனது முக்கிய கூட்டாளி அட்னான் அகமது சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கும், அட்னான் அகமதுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் உதவி செய்து வந்தது.
தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் பணம் உள்ளிட்ட உதவிகளை அவர்கள் செய்து வந்தாக கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு பாம்பேர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அட்னான் அகமது முக்கிய பங்காற்றினான்.
இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.
பாகிஸ்தானை பொறுத்தவரை சமீப காலமாக பல பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான மவுலானா மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான தாவூத் மாலிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அப்துல் கரீம் துண்டாவை போலீசார் கைதுசெய்தனர்.
- இந்த வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டார்.
மும்பை:
1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, 2013 ஆகஸ்டில் நேபாள எல்லையான பன்பாஸாவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இன்று காலை 11.15 மணியளவில் துண்டா, இர்ஃபான், ஹமீதுதின் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் தடா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், 1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டுள்ளார். துண்டாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தடா நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனாலும், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான், ஹமீதுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு மிரட்டல் வந்துள்ளது
- மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என்று கூறிக்கொண்டார்.
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
நேற்று [டிசம்பர் 12] மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலானது வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி [சி இஓ] என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

2008-ம் ஆண்டு நவமபர் 26 ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவார அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
- ஐம்முகாஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்.
- பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை தேடி வந்தனர்.
சோபூர்:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அந்த பயங்கரவாதிகள் தேடி வந்தது முதல்கட்ட விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
- கடந்த மே 10-ந்தேதி ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2 ஆர்.ஆர். படை பிரிவினர் இணைந்து கூட்டு வேட்டை நடத்தினார்கள். இதில் நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
கைதான நபர் சங்கம் புத்காம் பகுதியை சேர்ந்த ஆர்ஷித் அகமது என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து 5 கை துப்பாக்கிகள், 5 தோட்டா உறைகள், 50 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஷால்தெங் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதில்லை. அவர்களை பயங்கரவாத குழுவினர் ஒன்று அல்லது 2 முறை மட்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்திக்கொள்வார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், போலீசார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுபோன்ற ஹைபிரிட் வகை பயங்கரவாதிகளே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த மே மாதம் 1-ந் தேதி குல்காம் போலீசாருடன் இணைந்து காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி யாமின் யூசப்பட் கைது செய்யப்பட்டார்.
அவர் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதேபோன்று கடந்த மே 10-ந்தேதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுவினர் அவர்களை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






