என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னஞ்சல்"

    • இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
    • FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் வெளியிடப்பட்ட ஆவணங்களில் எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

    அந்த வகையில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இந்திய பெண்(அல்லது சிறுமி) இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த திட்டத்தின் கீழ் இந்திய பெண் ஒருவருக்கு நிதியுதவியும், மனநல ஆலோசனையும் அளிக்க அவரை அமெரிக்க அதிகாரிகள் தேடியுள்ளனர்.

    2020 ஜனவரி 13-ஆம் தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், இந்தியாவில் இருக்கும் இந்தப் பெண்ணைக் கண்டறியும் அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிகள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவரது முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கிடைத்தால், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த மின்னஞ்சலில், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்கள் கறுப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களை FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி மூலம் அந்தப் பெண்ணிற்கு உதவி வழங்க அவரைத் தேடி வந்ததாகத் தெரியவந்துள்ளது.

    2019 ஆகஸ்ட் மாதம் எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

    இந்தத் தகவல் எப்ஸ்டீனின் பாலியல் சுரண்டல் நெட்வொர்க் இந்தியா வரை பரவியிருந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.  

    • எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன.
    • நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து குடிவரவு துறை (Immigration) பெண் அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் இந்தியர்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    குடியேற்றத் தகவல்களைக் கேட்டு இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் திறக்கப்படுவதில்லை என்றும், அவை Spam (போலி) ஆக கருதப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தும் குடியேற்றப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்கும் மின்னஞ்சல்கள்.

    ஆனால் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை. நான் அதைத் திறந்து பார்ப்பதில்லை. அவை Spam போன்றது" என்று கூறினார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது.

    "அமைச்சர் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களைத் தனிமைப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    • அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும்
    • மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில், அவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதற்கான பணிகளை முடிக்கவேண்டும் என்றும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு பிறகு கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மின்னஞ்சல் தேவைப்படுவதால் அரசு பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான பல்வேறு கடிதங்கள், அறிவுறுத்தல்கள் எல்லாம் மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட இருக்கின்றன. இந்த சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக கலைவாணி என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811325 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsnregsthanjavur@gmail.com ஆகும்.

    • மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு மிரட்டல் வந்துள்ளது
    • மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என்று கூறிக்கொண்டார்.

    மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    நேற்று [டிசம்பர் 12] மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலானது வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

     

     

    முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி [சி இஓ] என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

     

    2008-ம் ஆண்டு நவமபர் 26 ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவார அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

    ×