என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "appointment"
- மறைமாவட்ட 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் நியமனம் செய்துள்ளனர்.
- 26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மறை மாவட்டத்தின் 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் வருகிற 26-ந்தேதி அன்று சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பேற்கிறார்.
இவ்விழாவில் திருத் தந்தையின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜிரல்லி முன்னிலை வகிக்கிறார். மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புதிய ஆயரை திருநிலைப்படுத்துகிறார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரும் சிவகங்கை மறைமாவட்டத்தின் பரிபாலகரமான மேதகு ஆயர் ஸ்டீபன், சிவகங்கை மேனாள் ஆயர் சூசைமாணிக்கம், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் பிற மறைமாவட்டங்களின் ஆயர்களும் இத்திருலை பாட்டு நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், சென்னை சி.எஸ்.ஐ. மேனாள் பேராயர் தேவசகாயம் அமைச்சர் பெரியகருப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், திருச்சி எம் எல் ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர்.
26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த மாபெரும் திருநிலைப்பாட்டு நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பு செய்ய சிவகங்கை கத்தோலிக்க மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.
- வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.
- நகராட்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் 21 வார்டு உள்ளது. வால்பாறையில் சில மாதங்களுக்கு முன்பு ஆணையாளர் பாலு என்பவர் பணி செய்து வந்தார்.
அவர் பதவி உயர்வு பெற்று கோவை பகுதிக்கு சென்றதால் வால்பாறை நகராட்சிக்கு, உடுமலை நகராட்சி ஆணையாளர் பெற்பெட்டி டெரன்ஸ் லியோ என்பவர் வால்பாறை நகராட்சி அலுவலகத்தையும் சேர்த்து பார்த்து வருகிறார்.
இவர் உடுமலையில் இருந்து வாரம் 2 முறை மட்டுமே இங்கு வந்து செல்வதால் நகராட்சி பணிகள் தோய்வடைகின்றன. எனவே வால்பாறை நகராட்சிக்கு என்று தனி ஆணையாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்ததற்காக விருதுகள் வழங்கி பாராட்டு
- எம்.கண்ணனுக்கு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து
அருவங்காடு,
நீலகிரி மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக குன்னூரை சேர்ந்த எம்.கண்ணன் ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக குன்னூர் எம்.கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை மேற்கண்ட அமைப்பின் தேசிய தலைவர் மணிமொழியான் செய்து உள்ளார்.
நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குன்னூர் எம்.கண்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இந்திய மக்கள் மன்றம் மற்றும் தேசிய பாரத் சேவாக் சமாஜ் உள்ளது. இந்த அமைப்புகளின் தென்னிந்திய தமிழக அலுவலகம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆக முன்னாள் எம்எல்ஏ இளமை தமிழ்ச்செல்ன் நியமிக்கப்பட்டு உள்ளார்
- தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பெரம்பலூர்,
அஇஅதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா. தமிழ்ச்செல்வனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி நியமனம் செய்து உள்ளார்.இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் 3 முறை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை எம்.எல்ஏவாக இருந்து உள்ளார். பள்ளி கல்லூரி காலத்தில் இருந்தே அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மாவட்ட மாணவரணி செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மாவட்ட செயலாளருக்கு போட்டி இருந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மாவட்ட செயலாளராக தேர்வு பெற்றிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மாவட்ட செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வனுக்கு நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை பள்ளிகளில் கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்
- ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்
பெரம்பலூர்,
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 263 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அடுத்த மாதத்திற்கு (அக்டோபர்) தேவையான உணவு பொருட்கள் கடந்த 22-ந்தேதி அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சுகாதாரமான சுவையான உணவு வழங்கப்படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணிக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 95 பொறுப்பு அலுவலர்கள், மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பு அலுவலருக்கும் 2 முதல் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பொறுப்பு அலுவலர்கள், உணவு பொருட்கள் அடுத்த மாதத்தில் பள்ளி வேலை நாட்களுக்கு போதுமான அளவு உள்ளதா? என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் செலவினங்களுக்காக மைய பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.
- தஞ்சை மாநகராட்சி ஆணையர் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநக ராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சிக்கும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.
- தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
- ஆதர்ஷ் பச்சேரா சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் மாநகரமானது நெல்லை மேற்கு, நெல்லை கிழக்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.
காலி பணியிடம்
அதன்படி நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சரவணகுமார் இருந்து வருகிறார். கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சீனிவாசன் பணி யாற்றனார். அதே போல் தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவியிடம் காலியாக இருந்தது. அந்த பொறுப்பை தலைமை இடத்தை துணை போலீஸ் கமிஷனர் அனிதா கவனித்து வந்தார்.
துணை கமிஷனர் நியமனம்
இதற்கிடையே காலியாக இருந்த போலீஸ் துணை கமிஷனர் பதவிக்கு உடனடியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி தற்போது நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பச்சேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை மாண வர்கள் நலன் கருதி தற்காலி கமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி சிவகங்கை மாவட்டம் மல்லல் ஆதிதிரா விடர் நல தொடக்கப்பள்ளி யில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-1, உஞ்சனை ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-2 மற்றும் அதிகரம் உயர்நிலைப்பள்ளி யில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்-2 (ஆங்கிலம்-1,அறிவியல்-1) என மொத்தம் 5 பணியிடங் கள் நிரப்பப்பட உள்ளது.
மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையி லும் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்க ளுக்கான ஊதியம் இடை நிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியி டத்திற்கான கல்வித்தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடை முறையில் உள்ள விதிமுறை களை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார் வளர்களாக இருப்பவர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி யிடத்திற்கு பட்டியலி னத்தவருக்கும், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்க ளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பணிக்கு தெரிவு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2024 வரை மட்டுமே ஆகும். விண்ணப் பிக்க விரும்புவோர் சிவ கங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப் பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் வருகிற 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
- பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
- 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதிரி பள்ளி உட்பட 71 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பிலும், 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகின்றனர்.
கடந்த 2021-2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 97.20 சதவீதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பெற்றது. கடந்தாண்டு கல்வியாண்டில் 95.30 சதவீதம் பெற்று மாநில அளவில் 12-ம் இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தேர்வு விகிதம் குறைந்த தற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது சில மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராமல் கடைசி நேரத்தில் தேர்விற்கு வந்ததாலும், இது போன்று தலைமையாசிரியர்கள், காலிபணியிடம் உள்ள பள்ளிகளில் தேர்வு விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனை யடுத்து உடனடியாக தலைமையாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இதில் தற்போது நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 44 அரசு மேல்நிலைப்பள்ளி களுக்கும் தலைமையாசி ரியர் பணிடங்கள் நிரப்பப் பட்டன. மேலும் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்ளை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு உத்தர விட்டது. அதன்படி மாவட்டத்தில் 90 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்
- பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையின்சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 88 திருக்கோவில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படாத கோவில்களுக்கு உறுப்பினர்களை நியமித்து விரைவில் நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால்தான் திருக்கோவில்களில் இருக்கக்கூடிய துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து குடமுழுக்கு நடைபெறாத திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கும் மற்றும் பராமரிக்கப்படாத திருக்கோவில்களை மேம்படுத்தும் பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும். நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில்களை நல்ல முறையில் பராமரித்து கோவில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கே வரக்கூடிய பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்யக்கூடிய வகையில் அங்கே சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உரிய முறையில் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு அந்த கோவில்களிடம் ஒப்படைத்து அந்த கோவில்களுக்கு கூடுதலாக நிதிகளை பெற்று சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் இந்த நியமன ஆணைகளை பெற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோவில் நல்ல முறையில் பராமரித்து செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெய தேவி, அண்ணக்கொடி,திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், காங்கேயம் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.