என் மலர்

  நீங்கள் தேடியது "Deputy Commissioner"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 3-வது கண் எனப்படும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படுகிறது.
  • இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

  நெல்லை:

  நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 3-வது கண் எனப்படும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படுகிறது.

  ஏற்கனவே சந்திப்பு, டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப் பட்டும், குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டும் வருகிறது.

  இந்நிலையில் கொக்கிரகுளத்தில் இருந்து சமாதானபுரம் வரை மாநகர காவல்துறை சார்பில் 54 காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  இதற்கான கட்டுப்பாட்டு அலுவலகம் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த சி.சி.டி.வி. காமிராக்களின் இயக்கத்தை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

  அப்போது ஏட்டுகள் அருண் ஷோபா, கண்ணன் ஆகியோரை அழைத்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை இயக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.

  பின்னர் அவ்வழியாக ஹெல்மட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிறு பரிசுளும், இனிப்புகளும் வழங்கினார்.

  பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

  இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

  குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி. காமிராக்கள் அமைப்பது கட்டாயம் ஆகிவிட்டது.

  மாநகர பகுதி முழுவதும் 10 ஆயிரம் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும். இதன்மூலம் மாநகரில் குற்ற சம்பவங்கள், போக்கு வரத்து விதிமீறல்கள் பெருமளவு குறைக்கப்படும்.

  போதை பொருட்கள் குறித்து பொதுமக்கள் 100 என்ற அவசர எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

  நாளை மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மாநகர கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் துணை கமிஷனர் சீனிவாசன், சரவண குமார் மேற்பார்வையில் 6 உதவி கமிஷனர்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  அஞ்சலி செலுத்த வருவோர் அமைதியான முறையில் காலை 9.15 மணி முதல் மாலை 5.15 வரை மரியாதை செலுத்தி செல்லலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
  • நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.

  நெல்லை:

  பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

  இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனை மாநகர கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

  தொடர்ந்து அந்தப் பகுதியில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா வழங்கினார். அதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு திருக்குறள் எழுதுமாறு அறிவுறுத்தினார். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இதற்காக நெல்லை மாநகர காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

  நெல்லை மாநகர பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் தலைகவசம் அணியாமலும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வருகிறார்கள். இது தொடர்பாக 1,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மாநகர பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் சென்றால் அவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்திற்கு அவர்களின் பெற்றோர்களை அழைத்து வரப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும்.

  அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக சீனிவாசன் பதவியேற்றுக்கொண்டார்.
  • போலீஸ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

  நெல்லை:

  நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக இன்று சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றார்.

  அதன்பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், வல்லம், கும்பகோணம், தென்காசி, திருச்சி, கோட்டை, பொன்மலை ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார்.

  கடந்த 2019-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

  2021-ம் ஆண்டு நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராகவும், பின்னர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.

  இவர் பணி காலத்தில் அண்ணா பதக்கம் மற்றும் அத்திவரதர் பதக்கம் பெற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.

  ×