search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narcotics"

    • குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
    • இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1814 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின்போது இந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.

    • போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும்.
    • போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 11-ந் தேதி நடைபெற்ற 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன் என்று ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் உறுதி எடுத்துக்கொண்டாலே போதும், அதுவே முதல் வெற்றி.

    போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் போன்ற இடங்களில் போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும்" என்று ஆணையிட்டார்.

    முதலமைச்சரின் இந்த ஆணையை செயல்படுத்தி இருந்தாலே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருள்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும். அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்வதை வெறும் சடங்காக செய்வதால் எந்த பயனும் இல்லை.

    எனவே, இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    போதைப்பொருட்கள் நடமாட்டத்தை வேருடன் ஒழிப்போம் என்று கூறி, அதற்காக 'போதைப்பொ ருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற புதிய இயக்கத்தை திமுக அரசு தொடங்கி இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டம் குறைவதற்கு மாறாக அதிகரித்திருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது ஆண்டாக இன்றும் சென்னையில் மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி செய்து வைத்ததுடன் தமது கடமையை முடித்துக் கொண்டார். போதைப்பொருட்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காமல் கடமைக்காக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    • ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா?

    சென்னை:

    சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள், கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களை கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், இப்ராகிம் மற்றும் சென்னையை சேர்ந்த மன்சூர் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 7 கிலோ மதிப்பிலான மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அதன் பின்னணிகளை பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் தி.மு.க. பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.

    இவர் அந்த கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளார். இந்த கும்பல் ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பஸ் மற்றும் கார்களில் ராமநாதபுரத்துக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளனர்.

    டெல்லியிலிருந்து போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் இருந்து மெத்தா பொட்டமைன் போதைப் பொருள்தான் சிக்கியது என்றும் இதையடுத்து சென்னையில் தற்போது பிடிபட்டுள்ள 3 பேருக்கும், ஜாபர்சாதிக்குக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
    • வடமாநில வாலிபர்களிடம் போலீசார் சோதனை

    கோவை:

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர கேரள மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்களும் கோவை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் இன்று மதியம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று, பீகாரில் இருந்த வந்த ரெயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அந்த ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டி மற்றும் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 வடமாநில வாலிபர்களையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் போதை பொருட்களை கடத்தி வந்தனரா? அல்லது வேறு யாராவது கடத்தி இதில் வைத்தனரா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் பறிமுதல்.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் இளந்தரையன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) மேகா, தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதனால் போலீசார் நள்ளிரவில் அந்த வீட்டை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தினர். அங்கு சுமார் 8 கிலோ ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் வீட்டில் இருந்த மட்டக்கடையை சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற நிர்மல் (வயது 29 ), அவரது மனைவி சிவானி (28) ஆகியோர் போதைப்பொருளை பதுக்கியது தெரியவந்தது. தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் பின்னரே அவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைத்தது? யாரிடம் விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.24 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகைக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மங்கலம் ரோடு, மில்லர் பஸ் நிறுத்தம், போயம்பாளையம், தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 5 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து 5 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வியாபாரியான கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.
    • சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.

    குஜராத்தில் ரூ.130 மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரின் அருகே மிதி ரோகார் கிராமத்தில் வைத்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.

    கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர். அதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது அதிகபட்ச கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது

     

    இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு மத்தியில் நிழலுலகில் செயல்பட்டுவரும் வரும் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா இந்தியாவிலும் சந்தையை திறக்கத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • வெளி நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.
    • போதைப் பொருட்களின் வணிக மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வெளி நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், கோவையில் மருந்து குப்பிக்குள் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசிகள் என போதைப் பொருட்களின் வணிக மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5.39 கோடி லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு 814 கோடியாகும்.
    • 1260.33 கோடி மதிப்பிலான தங்கள், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது

    இந்தியா முழுவதும் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.8,889 கோடியை எட்டியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவற்றில் 45% போதைப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மதிப்பு ரூ.3958 கோடியாகும் .

    அதிகபட்சமாகக் குஜராத்தில் ரூ.1187.80 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் ராஜஸ்தானில் ரூ.1133.82 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பஞ்சாப்பில் ரூ.734.54 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.8,889 கோடியில் ரூ.849.15 கோடி பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. 5.39 கோடி லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.814 கோடியாகும்.

    ரூ.1260.33 கோடி மதிப்பிலான தங்கள், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. ரூ.2006.56 கோடி பதிப்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்க இருந்த இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    75 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். 

    • மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    • நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

    குஜராத் கடல் பகுதியில் இன்று 173 கிலோ போதைப் பொருட்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.

    போதைப் பொருள் கடத்தப் பயன்படுத்திய இந்திய மீன்பிடி படகில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல், நேற்று சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இதன் மதிப்பு 600 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்
    • 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்

    ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை கண்டுபிடித்து, சுமார் ₹300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

    ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒசியான் மற்றும் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

    அதில், சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் இதுவரை ₹ 4,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×