பங்க் கடையில் போதைபொருள் விற்ற கடைக்காரர் கைது

50 போதை பாக்கெட்டுகள் பறிமுதல் போலீசார் எச்சரிக்கை
பங்க் கடையில் போதைபொருள் விற்ற கடைக்காரர் கைது
Published on

நெமிலி:

ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55). இவர் அதே பகுதியில் பங்க்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் விற்பதாக அவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்று பங்க் கடையில் சோதனை செய்தனர்.

அப்போது கடையில் இருந்த குட்கா போன்ற 50 போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பரசுராமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மேலப்புலம், மாமண்டூர், பெரும்புலி பாக்கம், பொய்கைநல்லூர் பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று அங்குள்ள பங்க்கடைகளில் சோதனை செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடைக்காரர்களுக்கு இதுபோன்ற போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com