என் மலர்
நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"
- போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணித்து வந்தனர்.
- பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் சங்கிலி போல் நாடு முழுவதும் போதை மருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் , மீரா சாலையில் இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் இளம்பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் வங்கதேசத்தை சேர்ந்த பாத்திமா முராக் ஷேக் (வயது 23) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 105 கிராம் எடையுள்ள மெபெட்ரோன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் போதை பொருளை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வாங்கி வந்ததாக தெரிவித்தார். போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணித்து வந்தனர். நேற்று போலீசார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்தனர்.
அங்கு மருந்து தயாரித்துக் கொண்டு இருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிற்சாலையில் இருந்து ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர். 27 செல்போன்கள் 3 கார்கள், 4 மின்னணு எடை எந்திரம் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்த ப்படும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தொழிற்சாலையில் இருந்து பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் சங்கிலி போல் நாடு முழுவதும் போதை மருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தற்போது மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு ஒரு சவாலானது மற்றும் அரிதானது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த தொழிற்சாலையை கண்டுபிடித்து முக்கிய நபர்களை கைது செய்து இருக்கிறோம். பிடிபட்டவர்கள் மூலம் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
- குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
கோவை:
கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
போலீசார் அடிக்கடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா, போதை மருந்து விற்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து போதை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் அதுபோன்று வருபவர்களையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் சிக்கியவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது37) என்பது தெரியவந்தது. இவர் அங்கு நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார்.
அப்போது போதைப்பொருள் விற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்த சதீஷ்குமார், அதன்பிறகு கஞ்சா மற்றும் போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை வாங்கியும் விற்பனை செய்து வந்துள்ளார்.
கோவையில் இவருக்கு உறவினர்கள் இருந்துள்ளனர். இதனால் அடிக்கடி இங்கு அவர்களை பார்க்க வருவது போல வந்து, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது.
பின்னர் கோவைப்புதூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் விற்பனையாவதால், அதனையும் வாங்கி சதீஷ்குமார் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போதைப்பொருள் விற்ற பணத்தை கொண்டு சதீஷ்குமார் பிரெஸ்லெட், மோதிரங்கள் என தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சோதனை நடத்தி அங்கிருந்த 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நிதிநிறுவன அதிபர் என கூறிக்கொண்டு, போதைப்பொருள் விற்று, அதில் சம்பாதித்த பணத்தில் நகைகளை அணிந்து கொண்டு காரில் வலம் வந்த சதீஷ்குமார், போலீசாரின் சோதனையில் சிக்கி கொண்டார்.
- சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்
- அவரிடம் குளுக்கோஸ் பாட்டில், போதைஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகியவைஇருந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் பகுதிகளில் சமீப காலமாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேகுப்தா உத்தரவின் பெயரில் திண்டிவனம் எஸ்ஐ ஆனந்தராசன் மற்றும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திண்டிவனம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் குளுக்கோஸ் பாட்டில், போதைஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகியவைஇருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் என்.கே நகரை சேர்ந்த நித்திஷ் கண்ணன்(வயது28) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- பண்ருட்டியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறுவத்தூர் பகுதியில்அரசு அனுமதியின்றி போதை பொருட்கள் பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கிடைத்தது.
இதன் பேரில்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் வைத்துஇருந்த 20 பாக்கெட்டு போதை பொருட்களை பறிமுதல்செய்தனர். பின்னர் விற்பனை செய்தசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தபரந்தாமன் (37),ராமலிங்கம் (55)ஆகிய இருவரை புதுப்பேட்டைபோலீசார் கைது செய்தனர்.
- காரைக்கால் திருப்பட்டினத்தில் பெட்டிக்கடையில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு.பட்டினம் கெம்பிளாஸ் ட்தொழிற்சாலை பகுதியில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, திரு ப்பட்டினம் போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 140 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் காவல் துறையினர் போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தூங்குபவர்களை எழுப்பலாம்-தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது." கஞ்சா விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், அதற்காக ஆபரேஷன் கஞ்சா 2.0 ஒன்றை ஆரம்பித்த தமிழ்நாடு காவல்துறை, கஞ்சா கடத்தல் விற்பனையை எவ்வளவு தடுத்தது என்றும், எத்தனை பேர் பிடிபட்டனர் என்றும், எவ்வளவு பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டது என்பதையும் விளக்க வேண்டும்.
மேலும், ஆபரேஷன் கஞ்சா 2.0 வெற்றி எனில், ஏன் தற்போது ஆபரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையினை காவல்துறை தொடங்கியுள்ளது என்றும், காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, நான்கு பேர் அடங்கிய கஞ்சா போதை கும்பல், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே உள்ள கடைகளில் நுழைந்து, கடை உரிமையாளர்களை கத்தி மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவர்களைத் தாக்கி, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.
அதே போல், இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் கவுதம் என்பவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருவதாகவும், ஒருசில நாட்களுக்கு முன்பு மருத்துவர் கவுதம் மருத்துவமனைக்குச் சென்ற கஞ்சா கர்ணா உள்ளிட்ட மூன்று நபர்கள், மருத்துவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தர மறுத்த மருத்துவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்விரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கஞ்சா போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது? இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்? கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய தடுப்பவர்கள் யார்? கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை.
கடந்த 19 மாதகால தி.மு.க. ஆட்சியில், காவல் நிலையங்களில் நடைபெற்ற, அத்துமீறல்களையும், அதனால் வழக்குகளின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அகால மரணமடைந்ததையும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவையும், போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது.
நடைபெறும் படுபாதக செயல்களைத் தடுக்க இயலாத, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தவறுகளை மறைக்கும் வகையில் பூசி மொழுகும் வேலையை செய்து வருகிறார்கள்.
கடந்த 20.12.2022 அன்று, சென்னை, திரு.வி.க. நகரைச் சேர்ந்த 26 வயதுடைய தினேஷ்குமார் என்பவர் அடையாறு துரைப்பாக்கம் பகுதியில் பேருந்தில் செல்லும்போது ஒரு பயணியிடம் இருந்து செல்போனை திருடியதாக பொதுமக்களால் பிடிக்கப்பட்டு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
துரைப்பாக்கம் காவல் துறையினர் தன் கணவர்மீது தாக்குதல் நடத்தியதால்தான் மரணமடைந்தார் என்று அவரது மனைவி திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தினேஷ்குமாரின் மர்ம மரணம் குறித்து இந்த அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், துரைப்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒருசில காவலர்களை இடமாற்றம் செய்திருப்பதாகவும் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது.
ஒருசில காவலர்களின் அதிகார வரம்பு மீறல்களினால் இதுபோன்ற நிலை தொடருமானால், புகார் கொடுக்கக்கூட பொதுமக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுவார்கள்.
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா உட்பட பல போதைப்பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து விலை உயர்ந்த போதைப்பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன
இனியாவது காவல் துறையினரை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை டவுன் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்தனர். இதில் அவர்கள் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக காமராஜபுரத்தை சேர்ந்த ஆசாத் (வயது 23), திருச்சி ஆழ்வார்தோப்பை சேர்ந்த முகமது ஹனிபா(40) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு மொபட், 2 செல்போன்களை கைப்பற்றினர்.
- மளிகை கடையில் ரகசிய விற்பனை
- ரொக்க பணமும் பறிமுதல்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் புகையிலை பொட்டலங்கள் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அமைத்து அப்பகுதியில் சோதனை ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பகுதியை சேர்ந்த பவளத்தாள்புரம் கிராமத்தில் உள்ள ராமசாமி மகன் குருநாதன் (வயது45) என்பவர் ஆவணம் கைகாட்டி ஒரு மளிகை கடையில் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஹான்ஸ், கூல்லிப், விமல் மற்றும் ரொக்கம் ரூ.1600 ஆகியவைகளை கைப்பற்றினர். மேலும் குருநாதனை கைது செய்து வடகாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- சட்ட விரோதமாக இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- காபி கடை என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை:
சென்னையில் போதை தரும் பொருட்களை கொண்டு ஹூக்கா பார் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
சட்ட விரோதமாக நடத்தப்படும் இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வெளியில் தெரியாமல் ரகசியமாக நடத்தப்படும் ஹூக்கா பார்களுக்கு மத்தியில் 'காபி கடை' என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை ஆழ்வார் பேட்டை பகுதியில் 'காபி ரெஸ்டாரண்ட்' என்கிற பெயரில் காபி கடை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இந்த காபி கடையில் ஹூக்கா பார் நடத்தப்பட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காபி ரெஸ்டாரண்டை முகேஷ் என்பவர் நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக காபி ரெஸ்டாரண்டில் ஹூக்கா பார் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹூக்கா பாரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஹூக்கா போதைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், குழாய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று ஹூக்கா பார் நடத்துவோரை கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாகதகவல் வந்தது.
- , ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், கோட்டுச்சேரி போலீசார், குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் அல்லிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
திருப்பூர் :
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப ட்டனர்.அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குட்கா புகையிலை பொருட்களை எடுத்து சென்று விற்பனையில் எடுபட்டது தெரிய வந்தது.தொடர்ந்து வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் ராம்நகர் குடோனில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதாக கூறியதை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 176 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ராகவன், நாகர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
- தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.
ஊத்துக்கோட்டை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் அறை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் வரவேற்பாளர் அறை புதிதாக கட்டப்பட்டது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
போலீசார் பொது மக்களிடம் நண்பர்களாக பழக வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வழக்கு விசாரணையின் போதும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தங்களது பகுதிகளில் சந்தேகிக்கும் படியான நபர்கள் யாராவது திரிந்தால் உடனே அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் பேசினார். நிகழ்ச்சி யில் இன்ஸ் பெக்டர் சத்ய பாமா, சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






