போதை பொருட்கள் பறிமுதல்

மளிகை கடையில் ரகசிய விற்பனை ரொக்க பணமும் பறிமுதல்
போதை பொருட்கள் பறிமுதல்
Published on

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் புகையிலை பொட்டலங்கள் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அமைத்து அப்பகுதியில் சோதனை ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பகுதியை சேர்ந்த பவளத்தாள்புரம் கிராமத்தில் உள்ள ராமசாமி மகன் குருநாதன் (வயது45) என்பவர் ஆவணம் கைகாட்டி ஒரு மளிகை கடையில் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஹான்ஸ், கூல்லிப், விமல் மற்றும் ரொக்கம் ரூ.1600 ஆகியவைகளை கைப்பற்றினர். மேலும் குருநாதனை கைது செய்து வடகாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com