என் மலர்
நீங்கள் தேடியது "youth arrested"
- பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டதால் அவர் மீது தீ வைத்துவிட்டு சிறுவன் ஓடிவிட்டான்.
- சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளே புகுந்தான்.
அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டார்.
சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த சிறுவன் பேப்பரை எடுத்து தீவைத்து சிறுமி மீது போட்டான். இதில் ஆடை தீப்பற்றி எரிந்து சிறுமியின் உடல் கருகியது. வலி தாங்கமுடியாமல் சிறுமி கதறியதால் அவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி சிறுமியை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.
- பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.
பண்ருட்டி:
கடலூர் பண்ருட்டி பலாப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.
அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இளங்கோவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இளங்கோவன் அதற்கு மறுத்துவிட்டார்.
எனவே இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து வாலிபர் இளங்கோவனை கைது செய்தனர்.
- 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் பழகி கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்ட–மநாயக்கன்பட்டிையச் சேர்ந்த பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 27). இவர் தனது உறவினர் மகளான 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் பழகி வந்துள்ளார்.
பின்னர் வீட்டுக்கு தெரியாமல் அவரை கடத்திச் சென்று திருமணம் செய்தார். திருப்பூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்த அந்த சிறுமிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த விபரம் தற்போதுதான் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
எனவே இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சுரேஷ் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- லோகநாதன் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது
- கடந்த 27-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை இலுப்பூர் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் லோகநாதன் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 27-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ரமா பிரியாவிடம், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து டாக்டர் புகார் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ரமா பிரியா கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு வாலிபர் மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார்.
- அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் டாஸ்மாக் கடைக்கு சென்று பணத்தை கொடுத்து மது கேட்டார்.
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார். அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் டாஸ்மாக் கடைக்கு சென்று பணத்தை கொடுத்து மது கேட்டார்.
அப்போது டாஸ்மாக் ஊழியர் பணத்தை வாங்கி பரிசோதித்த போது அது ரூ.500 கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இது குறித்து அவர் டாஸ்மாக் காசாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று ரூ. 500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற அரவிந்தை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தான் பணியாற்றும் நிறுவனத்தில் கொடுத்தது தான். மற்றபடி இதனை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அரவிந்த் இந்த டாஸ்மாக் பாரில் 2 முறை கள்ள நோட்டை கொடுத்து மது குடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.
எனவே போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கடந்த 24-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
- பள்ளிக்கு சென்ற காளிமுத்து மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை திருச்சிக்கு கடத்தி சென்றார்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு கோழிப்பண்ணையில் வசித்து வந்த எலக்ட்ரிசீயன் காளிமுத்து (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 10-ந் தேதி மாணவிக்கு பிறந்த நாள். இதனையடுத்து காளிமுத்து மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது திருமணம் செய்வதாக உறுதியளித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த 24-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பள்ளிக்கு சென்ற காளிமுத்து மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை திருச்சிக்கு கடத்தி சென்றார்.
பள்ளிக்கு சென்ற தங்களது மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
மாணவியை காளிமுத்து திருச்சியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்குள்ள அறையில் அடைத்து வைத்து 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மாணவியை காளிமுத்து ஆனைமலை பஸ் நிலையத்தில் தனியாக விட்டு சென்றார்.
வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காளிமுத்தை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- சுங்குவார்சத்திரம் அருகே 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.
- இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கண்டிவாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் அதே கிராமத்தில் இருக்கும் லஷ்மி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் இருந்த நவகிராக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்கை சிலைகள், விநாயகர் சிலை உள்பட 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் எடையார்பாக்கம் ஊராட்சி மேட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதிஷ் பிரேம் குமார் என்கிற துளசி (வயது40) என்பவர் சாமி சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் மதுபோதையில் சாமி சிலைகளை சேதபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
- கல்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
- புகாரின் பேரில் வாலிபரை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விக்ரம் (வயது 24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பி மாணவி நெருங்கி பழகினார். அப்போது ஆசை வார்த்தை கூறி விக்ரம் மாணவியிடம் பலமுறை உல்லாசமாக இருந்தார். இதில் தற்போது மாணவி 2 மாதம் கர்ப்பமானார். இது பற்றி அவர் பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் மாமல்லபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்ரமை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை பீளமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் மோசஸ் ஜெபராஜ் (வயது 56). இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் ேமாட்டார் சைக்கிளை நிறுத்துவது வழக்கம்.
மேலும் அங்கு இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார். இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முத்துக்குமார் (22) மற்றும் சதாம் உசேன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கொடுமுடி அருகே துணிகரம் பேக்கரியில் செல்போன் திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் காச்சக்கார மேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாண்சக்கரவர்த்தி (25). அதேபகுதியில் உள்ள நால் ரோட்டில் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது பேக்கரி கடைக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து டீ கேட்டார்.
கல்யாண் சக்கரவர்த்தி அந்த நபருக்கு டீ போட்டுக்கொடுத்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு மற்றொரு நபருக்கு டீ போட சென்றுவிட்டு மீண்டும் தனது கல்லா பெட்டி அருகே வந்தார்.
அப்போது அங்கு வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.38 ஆயிரம் இருக்கும்.
டீ கேட்டு வந்த நபர் மீது சந்தேகம் அடைந்த கல்யாண்சக்கரவர்த்தி அந்த நபரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் அந்த நபர் வேகமாக சென்றார்.
உடனடியாக கல்யாண் சக்கரவர்த்தி அங்கு இருந்த–வர்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரி த்ததில் அவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்கிற சேகர் என தெரியவந்தது. அவர் செல்போன் திருடி–யதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சேகரை மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). அதேப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். நேற்று புதுப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 500 ரூபாய் கொடுத்து விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் பாபுவிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தனது தம்பி அருண்குமாரிடம் கொடுத்து விடவும் என பாபுவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த அருண்குமார் அவருடைய அண்ணன் விஜயகுமார் 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாகவும் மீதி 400 ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
இதற்கு விஜயக்குமார் 100 ரூபாய் வாங்கிச்சென்று விட்டதாகவும் மீதி 300 ரூபாய்தான் தர வேண்டும் என பாபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் அவரது நண்பர் நேதாஜி ஆகிய இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், நேதாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.