என் மலர்
நீங்கள் தேடியது "Koyambedu bus stand"
- இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர்.
- பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
சென்னை:
கோயம்பேடு பஸ்நிலையம் ஆசியாவில் மிகப்பெரிய பஸ்நிலையமாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மற்றும் சென்னை நகர் மற்றும் புறகர் பகுதிகளுக்கு செல்லும் மாநகர பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தினமும் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். எப்போதும் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும்.
சமீபகாலமாக கோயம்பேடு பஸ்நிலையத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
மேலும் ஆண்களிடம் பாலியல் சில்மிஷங்களும் அதிகரித்து உள்ளன. பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் ஆண்களி டம் ஒரு கும்பல் சில்மிஷத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர்.
தனிமையில் நிற்கும் பயணிகள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து அழகான பெண்கள் இருப்பதாக கூறி விபசாரத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்து வருகின்றனர். சபலத்தால் சிலர் செல்லும் போது அங்கு அவர்களை மிரட்டி நகை-பணத்தை பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் பலர் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல அசிங்கப்பட்டும், அச்சப் பட்டும் மூடிமறைத்து விடுகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி ரவுடி கும்பல் கோயம்பேடு பஸ்நிலையத்தை தங்களது கூடாரமாக மாற்றத் தொடங்கி உள்ளனர். அவர்களது அட்டகாசம் எல்லை மீறி நடந்துவருகிறது.
இதேபோல் கோயம்பேடு பஸ்நிலையத்தில் குடி போதையில் இரவு முழுவதும் தூங்கும் வீடாக போதை ஆசாமிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகள் அமரும் இருக்கையில் ஹாயாக படுத்து தூங்கும் காட்சி தினந்தோறும் அரங்கேறி வருகிறது. போதை கும்பல் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியும் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதும் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
ரவுடிகள் அட்டகாசம் மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாதது கோயம்பேடு பஸ்நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
பஸ்நிலையம் முழுவதும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்கள், பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் ஆகியவை சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும் போலீசார் சரிவர பஸ்நிலையத்துக்கு ரோந்து வருவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
கடந்த 2 நாட்களுக்குமுன்பு கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுபற்றி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் பஸ்நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீசார் அங்கு இல்லை என்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா கூறும்போது, பஸ்கள் நிறுத்தப்படும் தடுப்பு சுவர் மற்றும் அங்குள்ள ஓரங்களில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. பெண் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகும்பலை கட்டுப்படுத்த போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட சி.எம்.டி.ஏ.வால் போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு பின்னர் பஸ்நிலையத்துக்கு நுழையும் இடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பயணிகள் தேவையில்லாமல் பஸ் நிலையத்துகள் நுழைவதைக் கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமற்று காணப்படும் பஸ்நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் பஸ்நிலையம் முழுவதையும் அவ்வப்போது சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடிகள் அட்டகாசம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுத்தம் செய்வதில்லை. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பஸ்நிலையத்தில் இரவு நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பயணிகள் இல்லாமல் தங்கி உள்ளனர். அவர்களுடன் சமூக விரோதிகளும் புகுந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பஸ்நிலையத்தில் தேவையில்லாமல் வருபவர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி சோதனை நடத்தி பஸ்நிலையத்தில் வீடு போல் தங்கி இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்றனர்.
- கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் குழப்பம் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- அடுத்து புறப்படும் பஸ் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.
சென்னை:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 1 முதல் 6 வரை நடைமேடைகள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.
நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் முழுவதும் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக நடைமேடை (பிளாட்பாரம்) அமைக்கப்பட்டு உள்ளன. பஸ் டெப்போவில் நடைமேடை 7, 8, 9 என அமைக்கப்பட்டு அங்கிருந்து காரைக்குடி, ராமேஸ்வரம், கோவை, ஊட்டி, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் குழப்பம் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடுத்து புறப்படும் பஸ் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.
தற்காலிக நடைமேடை அமைக்கப்பட்டதால் நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்வதை காண முடிந்தது.
- மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.
- 100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
சென்னை:
சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும். சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள பகுதிகளுக்கு 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.
அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கீழ்கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பின் சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு செல்லும் அரசு பேருந்துகள் வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், டோல்பிளாசா, கார்த்திகேயன் நகர், எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ் சாலை அருகில் நிறுத்தப்படும். மேலும் அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகில் உள்ள இடம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மார்க்கெட், இ-ரோட்டில் உள்ள நிறுத்தத்தில் இருந்து, பி-ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை, (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.
மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும்.
100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் இ.வி.ஆர். சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-வது அவென்யூ, 2-வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள தனியார் வாகனங்கள் இ.வி.ஆர். சாலையில் மதுரவாயல் நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-வது மெயின் ரோடு, 2-வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோல் வடபழனி நோக்கி செல்லும் தனியார் வாகனங்கள் என்.எஸ்.கே நகர் சந்திப்பு ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பண்டிகை காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் ஈ.சி.ஆர், மற்றும் ஓ.எம்.ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக என்.எச். 45 செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாநகர பஸ்களும், வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கோயம்பேடு பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (சி.எம்.டி.ஏ.) நிர்வகித்து வருகிறது.
தனியார் ஆம்னி பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள இடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அலுவலகங்களும் அங்கு செயல்பட்டு வருகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய அடுக்குமாடி நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சில பஸ்கள் கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் நெருக்கடி குறைந்துள்ளது.
இதற்கிடையே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ்களை இயக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு போக்குவரத்து கழகத்துக்கு சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றி தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் ஜவகர்லால் நேரு சாலை- காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் 360 பஸ்கள் மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. ஆனால் 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு நெரிசலை குறைக்க தனியார் பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறும் போது, கோயம்பேட்டில் இருந்து நீண்ட நேரம் செல்லும் பஸ்கள் மாதவரம் மற்றும் கே.கே.நகர் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 இடங்கள் காலியாக உள்ளன.
இதனால் தனியார் பஸ்களுக்கு கோயம்பேட்டில் இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. காலி இடங்கள் ஏலம் விடப்படுகிறதா அல்லது ஆம்னி பஸ்கள் இயக்க கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதா என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார். #Koyambedubusstand
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் நேற்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே வாக்குபதிவையொட்டி சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை முதல் குவிய தொடங்கினர். மேலும் நேற்று இரவு 7 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சரியான முறையில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் மக்கள் செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் சற்று நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அங்கு இருந்த பொது மக்கள் ஓட்டு போட சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியவிலலை எனவும், இரவு 7 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை என காவல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#Loksabhaelections2019 #TNBuses #SpecialBuses #KoyambeduBusStand
போரூர்:
சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக் கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
கோயம்பேடு 100அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்
கூட்ட நெரிசலை பயன் படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.
பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.
மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செங்கல்பட்டு விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நேற்று இரவு 10மணி முதல் சரியாக இயங்காததால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.
இதுகுறித்து டெப்போவில் இருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நள்ளிரவு 12மணி அளவில் திடீரென்று பிளாட்பாரம் 1-ல் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வழியில்லாமல் வரிசையாக காத்துநின்றன.
தகவலறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அவர் வெளியூர் பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #koyambedubusstand
கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் ஆனந்த பிரகாசம். இவரது குடும்பத்தினர் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார்கள்.
பணி முடிந்து ஆனந்த பிரகாசம் சென்னை திரும்பி வருவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் அரசு பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அங்குள்ள பொது கழிவறைக்கு சென்றார். அங்கு திடீரென ஆனந்த பிரகாசம் மயங்கி விழுந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்த பிரகாசத்தை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஆனந்த பிரகாசம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அசாருதீன். இவர் புதிய கார் வாங்குவதற்காக சென்னைக்கு வந்தார். கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர் ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்துடன் ஆட்டோவில் ரோகிணி தியேட்டர்எதிரே உள்ள கார் ஷோரூமுக்கு சென்றார்.
ஆட்டோவில்இருந்து இறங்கி பார்த்த போது பணப் பையை காணவில்லை. இதுபற்றி புகார் கொடுப்பதற்காக முகமது அசாருதீன் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு ஏற்கனவே பணப்பையை உரியவரிடம் ஒப்பதற்காக அவர் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் பார்த்தீபன் என்பவர் இருந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி ரூ. 3 லட்சதத்து 80 ஆயிரத்தை முகமது அசாருதீனிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர் பார்த்தீபனை போலீசார் பாராட்டினர்.
போரூர்:
ஈரோட்டைச் சேர்ந்தவர் கமலா. இவர் மதுரவாயலில் உள்ள மகள் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மாலை அவர் மீண்டும் ஈரோடு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் அமர்ந்தார். அப்போது ரூ.80 ஆயிரம் பணத்துடன் கைப்பையை வைத்திருந்தார்.
பஸ் புறப்பட தயாரான போது கைப்பையை காணாமல் கமலா அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் ரூ.80 ஆயிரம் பணத்துடன் பையை எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது.
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2500 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் கோயம்பேடு 100 அடி சாலை, மதுரவாயல் சாலை எப்போதும் நெரிசலுடன் காணப்படுகிறது.
பொதுமக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்வதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. பண்டிகை காலங்களில் வாகன பெருக்கத்தால் மேலும் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.
கோயம்பேடு பஸ் நிலைய பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து துறையும் போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மார்க்கம் செல்லும் அனைத்து பஸ்களும் மாதவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறநகர் பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தீபாவளி பண்டிகை காலத்தில் இருந்து 400 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சற்று நெரிசல் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்க 167 விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்களும் புதுச்சேரி போக்குவரத்து கழக 20 பஸ்களும் என மொத்தம் 187 அரசு பஸ்கள் கே.கே.நகரில் இருந்து கடந்த 2 வாரமாக இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு அதிகம் ஏற்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே இதனை வரவேற்கவில்லை. பெரும்பாலான பயணிகள் நெரிசல் இல்லாமல் விரைவாக செல்வதற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டது நல்லது என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் கே.கே. நகர் பஸ் நிலையத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பஸ் வசதி அதிகம் இருப்பதால் பயணிகள் எளிதாக சென்று பயணிக்க முடியும் என்றனர். #KKNagarBusdepot