search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்... கட்டணம் குறைப்பு எவ்வளவு?
    X

    கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்... கட்டணம் குறைப்பு எவ்வளவு?

    • முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
    • கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

    கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×