என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja smuggling"

    • சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த லலிதா என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகன் வினோத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

    சிறை விதிமுறைகளின்படி, கைதிக்கு கொடுப்பதற்காக அவர் கொண்டு வந்திருந்த பிஸ்கட், கடலைமிட்டாய், ஊறுகாய் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.

    ஏட்டு கண்ணன் தலைமையிலான சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையின்போது, பேரீச்சம்பழங்களில் சிலவற்றின் கொட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து சிறை அலுவலர் முனியாண்டி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கஞ்சாவை மறைத்து கொண்டு வந்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைது செய்யப்பட்ட லலிதாவின் மகன் வினோத், ஏற்கனவே கடையம் போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.
    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.

    சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பது குறித்து, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    அந்த ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியை சோதனை செய்த போது அங்குள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்கு பை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் 6.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதனை யார் கொண்டு வந்தது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக ஈரோட்டில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதேபோன்று, ஈரோடு குயவன்திட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அந்த நபரை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மரப்பாலத்தைச் சேர்ந்த முகேஷ் ( 23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்கும் சம்பவம் அதிகரித்து வருவது போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    • யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரெயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரெயில்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயிலில் இன்று காலை போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.

    இதையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • பச்சை நிறத்தில் 20 பாக்கெட்டுகளில் மர்ம இலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • பணத்துக்காக ஆசைப்பட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மும்பை:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த கவால்ஜித் சிங் (வயது31) என்ற பயணியின் டிராலி பையில் சோதனை நடத்திய போது, பச்சை நிறத்தில் 20 பாக்கெட்டுகளில் மர்ம இலை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அது வீரியம் மிக்க கஞ்சா என்பது தெரியவந்தது.

    மேலும் அதன் மதிப்பு ரூ.9 கோடியே 53 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் போதை பொருளை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.

    விசாரணையின் போது அவர் கமிஷன் பணத்துக்காக ஆசைப்பட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.
    • உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.

    மதுரை:

    மதுரைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியாண்டி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மதுரை ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு இன்று அதிகாலை வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது அதில் 43 கிலோ கஞ்சா, குட்கா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் ஆகியவை கடத்திச் செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓடைத்தெரு, வள்ளுவர் நகரை சேர்ந்த காதர் பாட்ஷா (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தேவகோட்டை நகரில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கத்தில் உள்ளது.

    இதனை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் மற்றும் போலீசார் வாகன சோதனையை ஈடுபட்டனர்.

    அப்போது பழைய சருகணி ரோடு இம்ரான் நகரை சேர்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (வயது 20), பழைய சருகணி ரோடு சேக் அப்துல்லா மகன் முகமது யூசுப் (23) ஆகிய இருவரும் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்தார்கள்? என்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது.
    • கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி பஸ் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் திருத்தணியை அடுத்த சிவாடா காலனியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், தாழவேடு காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரிந்தது.

    கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • புளியங்குடி ஊருக்கு மேற்கே தம்பிரான்குளம் பகுதியில் 10 பேர் கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக பொட்டலம் போட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேர் தப்பி ஓடி விட்ட நிலையில் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புளியங்குடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புளியங்குடி ஊருக்கு மேற்கே தம்பிரான்குளம் பகுதியில் 10 பேர் கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக பொட்டலம் போட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம், காவலர்கள் முகமது கனி, சக்தி, முருகேசன், பால்ராஜ், தர்மராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 10 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அப்போது அதில் 4 பேர் தப்பி ஓடி விட்ட நிலையில் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாசு தேவநல்லூர் உள்ளார் பகுதியை சேர்ந்த காசிதுரை(வயது 22), புளியங்குடி அருகே சுண்டங்காட்டை சேர்ந்த மருது பாண்டி(24), கிருபாகரன்(28), விக்னேஷ்(20), ராஜேஷ்(22), திருப்பதி(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 2 அரிவாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மருது பாண்டியின் சகோதரர் இளங்கோவன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சிப்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தென் மாவட்டங்களில் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது சிப்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்த மாரிகணேஷ் ஞானராஜ் (வயது 38), குமரநகரை சேர்ந்த இசக்கிராஜா (29) என்பது தெரியவந்தது.

    இவர்கள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கார் மற்றும் அவர்களிடமிருந்த 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரையூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அயோத்திபட்டி விலக்கு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நபர்களை பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அயோத்திபட்டி விலக்கில் சென்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த ஆட்டோவில் 8 கிலோ கஞ்சா மறைத்து வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்ததாக பொம்மனம்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் வீரணன்(வயது31), சகாதேவன் மகன் கார்த்திக்(29), அல்லிகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் ஜனகராஜ்(27), மூக்கன் மகன் ஜெயராம்(29), மேக்கிழார்பட்டி ராஜாங்கம் மகன் ஈஸ்வரன்(28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரொக்கப்ப ணம் ரூ.95ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதான கார்த்திக் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் கும்பலை ேசர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேரையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • தப்பி ஓடிய கூட்டாளி காமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரெயில் தண்டையார்பேட்டை பகுதியில் மெதுவாக சென்றபோது 2 வாலிபர்கள் திடீரென குதித்து பெரிய பையுடன் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட மற்றொரு வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 22 கிலோ கஞ்சா இருந்தது.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிவரசன் என்பதும் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கூட்டாளி காமேஷ் என்பவரை தேடிவருகிறார்கள்.

    ×