என் மலர்
நீங்கள் தேடியது "Teenagers arrested"
- மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை
மதுரை வண்டியூர் சி.எஸ். ஆர். தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் ரிங் ரோட்டில் உள்ள பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த யாகப்பா நகர் வெற்றிவேல் மகன் அஜித்குமார் (26) அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.100-ஐ வழிப்பறி செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோட்டையை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவர் நரிமேடு அவ்வையார்தெரு ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 2 வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ வழிப்பறி செய்தனர்.
இதுகுறித்து ஞான சேகரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பி.பி. குளம் நேதாஜிரோடு மாணிக்கம் மகன் முருகன் என்ற டால்பின் (29), திருமங்கலம் ஆனந்த் நகர் குமார் மகன் கவியரசன் என்ற பொம்மை கையன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
- அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.
- அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
கடலூர்:
விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும். அதுபோல நேற்று இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிவிடுகின்றனர். இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.
- சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீ ஸ்இன்ஸ்பெக்டர்(பொ) நந்தகுமார், சப் இன்ஸ்பெ க்டர் சரண்யாதலைமையில்போலீசார்நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழமங்கலம் சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்தனர்.
இது குறித்து ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் (20), தாழம்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (21), தூக்கணாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (19), கோகுல்ராஜ் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 5 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சா பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்
அரக்கோணம் இரட்டை குளம் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசார் சந்தேகத் தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த பாராஞ்சி பகுதியை சார்ந்த சுதன் (வயது 22) மற்றும் ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை பகுதியை சார்ந்த சுரா நாகேஷ் (21) என்பது தெரியவந்தது. இருவரும் அரக்கோணத்தை அடுத்த உளியம் பாக்கம் பகுதியை சேர்ந்த லாசர் (25).
என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சதன் மற்றும் ராகேஷை போலீசார் கைது செய்தனர்.
நேற்று காலையும் தாலுகா போலீசார் சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இளைஞரை போலீசார் விசாரித்த போது பெருமாள் ராஜபேட்டை பகுதியை சார்ந்த குணசேகர் ( 24 ). என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர்.
- படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்படுத்தினர்
ஜோலார்பேட்டை, ஜூலை.2-
நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த 14 வயதுஉடைய சிறுமி அதே பகுதியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமியின் பாட்டி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் என்னுடைய பேத்தி கடந்த சில தினங்களாக பள்ளிக்கு வீட்டில் இருந்து செல்லும் போதும் திரும்பி வரும் போதும் அவ்வழியாக 2 வாலிபர்கள் அந்த மாணவியை காதலக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். பின்னர் ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர்.
இதனால் என் பேத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர். புகாரிப் பேரில் நட்டறம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பேட்டை சேர்ந்தவர்கள் சின்னராசு (வயது 22) மற்றும் கந்தவேல் (வயது 19) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- வீடுகளில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 27). இவருக்கும் புதுவையை சேர்ந்த காத்த வராயன் (29) என்பவருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலைவாங்கி கொடுப்பது தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக இவர்கள் 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர். எனவே எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடை–பெறலாம் என ஆரோ–வில் போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஆரோவில் போலீசார் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை அரிடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர். இதேபோல காத்தவராயன் வீட்டில் நடந்த சோதனையிலும் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது.
இதனைத்தொடர்ந்து காத்தவராயனை போலீசார் கைது செய்தனர். போலீசில் சிக்கிய 2 பேரும் எதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்? எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.