அம்பானி வீட்டு திருமணத்தில் அத்து மீறி நுழைந்த வாலிபர்கள் கைது

தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அம்பானி வீட்டு திருமணத்தில் அத்து மீறி நுழைந்த வாலிபர்கள் கைது
Published on

திருப்பதி:

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

திருமணத்தில் கலந்து கொள்ள தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (வயது 26) மற்றும் முகமது ரஃபி ஷேக் (28) ஆகியோர் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

சந்தேகத்திற்கு இடமாக இருவரும் சுற்றி திரிந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து வெளியே அனுப்பினர்.

வெளியே சென்ற இருவரும் மீண்டும் யாருக்கும் தெரியாமல் மண்டபத்திற்குள் நுழைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் 2 வாலிபர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com