செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

6 பவுன் நகைகள் பறிமுதல்போலீசார் விசாரணை
கைது செய்யப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு மர்ம கும்பல் செயின் பறிப்பு, வழிப்பறி செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெண் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள் மீது அரக்கோணம் டவுன் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் புழல் சிறையில் இருந்து 2 வாலிபர்களை அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் அரக்கோணத்தில் நடைபெற்ற செயின் பறிப்பில் முக்கியமான குற்றவாளிகள் என தெரியவந்தது.

இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் (வயது 31), பிரகாஷ் (30) என்பதும் இவர்கள் அரக்கோணம் பகுதிக்கு பைக்கில் வந்து தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, வழிப்பறி உள்ளிட்டவற்றை அரங்கேற்றியுள்ளனர்.

அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியை சேர்ந்த விமலா, நேதாஜி நகரை சேர்ந்த வச்சலா, மங்கம்மா பேட்டை பகுதியை சேர்ந்த பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.எ

X

Maalai Malar
www.maalaimalar.com