என் மலர்

  நீங்கள் தேடியது "Radhika"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
  • இவ்விழாவில் நடிகை ராதிகா இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறினார்.

  ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், ஷெரோ ஹோம் புட் நிறுவனர் ஜெயஸ்ரீ, திலக் வெங்கடசாமி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் இணைந்து வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை படைத்த திருமதி நித்யாவிற்கு குயின் விருதை வழங்கினர்

  .

  ராதிகா

  ராதிகா

   

  இந்த விழாவில் வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை புரிந்த 50க்கும் மேற்பட்ட பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா பேசியதாகவது, நானும் சுகாசினியும் 42 ஆண்டுகள் தோழிகளாக இருக்கிறோம். சுகாசினி மிகவும் பொறுமைசாலி, ஆனால் தான் பொறுமையாக இருக்க மாட்டேன்.

  ராதிகா

  ராதிகா

   

  திறமையான பெண்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தன்னை அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற பிரபலங்களுக்கு பாராட்டுக்கள் விருதுகள் கிடைப்பது பெரிதல்ல. வீட்டிலேயே உணவு தயாரிக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்குவது உண்மையில் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பிரபலங்களாக உருவாக முடியாது இருந்தாலும் அனைவரும் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ராணியாக இருப்பது மகிழ்ச்சி என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ராதிகா தயாரிக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமியும் சிம்புவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ArvindSwamy #STR #Simbu #Radhika
  அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் பயோபிக் படங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க சில இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

  ஜெயலலிதா வாழ்க்கை படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. ராதிகா சரத்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்குகிறார்.  இவர் ஏற்கனவே ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு அரவிந்த்சாமியிடமும் எம்.ஆர்.ராதாவாக நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வருகிறது.

  எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் மோதல் ஏற்பட்டதும் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள். இந்த சம்பவங்கள் படத்தில் முக்கிய காட்சிகளாக இடம்பெறும் என்று தெரிகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அதிதி ராவ் ஹிடாரி பாடல் ஒன்றை பாடுகிறார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
  ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்த ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

  வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


  ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் `ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஜி.வி. அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Jail #GVPrakashKumar
  ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

  ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

  விறுவிறுப்பாக நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அருமையான கதையை கொடுத்த இயக்குநர் வசந்த பாலனுக்கு நன்றி. படத்தை திரையில் பார்க்க ஆவோலடு இருக்கிறேன்.

  ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
   

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #Jail #GVPrakashKumar
  `வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என யதார்த்தமான படங்களை கொடுத்தவர் வசந்த பாலன். இவரது `வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.

  இந்த நிலையில், வசந்த பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

  இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, தான் சினிமா துறைக்கு வந்த புதிதில் பணத்திற்காக மோசமான படங்களில் நடித்ததாக கூறியிருக்கிறார். #RadikaApte
  ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

  இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-

  “சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது. பட வாய்ப்புக்கு அவர்கள் போராடும் நிலை இருக்கிறது. பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நிலைக்க முடியும். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.”

  இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் நிலையில், இந்த படம் இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று ஜி.வி. கூறியிருக்கிறார். #GV17 #GVPrakashKumar
  `வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என எதார்த்தமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமாகி இருக்கும் வசந்த பாலன் அடுத்தாக ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

  இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,  `ஜி.வி.17 படப்பிடிப்பு ஆரம்பம்... சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறேன். இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்' என்று கூறியிருக்கிறார். 

  ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். ஜி.வி. நடிப்பில் `செம' படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. #GV17
   
  ×