என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் கார்த்திக்"

    ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய சூரியபிரதாப் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் புத்தாண்டு தினமான நாளை காலை 11 மணிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

    படப்பிடிப்பு நிறைவடைந்து, கவுதம் கார்த்திக் டப்பிங் பணியை முடித்துள்ளார்.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய சூரியபிரதாப் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் படத்தின் புதிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    • இப்படத்தை அறிமுக இயக்குநரான சூரியபிரதாப் இயக்குகிறார்.
    • சூரியபிரதாப் நாளைய இயக்குநர் சீசன் 1-ல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநரான சூரியபிரதாப் இயக்குகிறார். இவர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரியபிரதாப் நாளைய இயக்குநர் சீசன் 1-ல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் கவுதம் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை வெர்சஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. பாடத்தின் பிற தகவல் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் ஒளிப்பதிவு - அர்ஜுன் ராஜா, படத்தொகுப்பு - ஜான் ஆப்ரஹம், இசை- விதுஷனன் மேற்கொள்கின்றனர்.

    • நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வருவதாக தகவல் பரவி வந்தன.
    • தற்போது கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்திலும் நடித்து வருகிறார்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    கவுதம் கார்த்திக் 'தேவராட்டம்' படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில், தங்களின் காதலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மேலும், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • நடிகர் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதல் செய்து வருவதாக செய்திகள் பரவி வந்தன.
    • சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர்.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்திலும் நடித்து வருகிறார்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இதனிடையே கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்ததாக செய்தி பரவி வந்ததையடுத்து சமீபத்தில் இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    அதன்படி வருகிற நவம்பர் 28- ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நடக்கும் திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதி செய்தனர்.
    • இவர்களுக்கு வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக்

    இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கவுதம் கார்த்திக் பேசியதாவது, "வருகிற நவம்பர் 28-ஆம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை.


    மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக்

    நான்தான் முதலில் மஞ்சிமாவிடம் புரோபோஸ் செய்தேன். அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக்கொண்டு அதன்பின் தான் எனது காதலை ஏற்றுக்கொண்டார். அந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இப்போது எங்கள் காதல் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளது.


    மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக்

    மஞ்சிமா அழகானவர் மட்டுமல்ல, வலிமையான பெண்ணும்கூட. நான் எப்போது பலவீனமாக இருந்தாலும், என்னை அதிலிருந்து தூக்கிவிடுவது அவர்தான். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்தே நாங்கள் காதலித்தோம்" என்று பேசினார்.

    • நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர்.
    • இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    கவுதம் கார்த்திக்  - மஞ்சிமா மோகன்

    இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கவுதம் கார்த்திக் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை என்று திருமண தேதியை உறுதிப்படுத்தினார்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இந்நிலையில், கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
    • இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இதையடுத்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.



    • அறிமுக இயக்குனர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கிரிமினல்'.
    • இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


    கிரிமினல் படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. 'கிரிமினல்'படம் குறித்து பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் பி.ஆர். மீனாக்ஷி சுந்தரம் பேசும்போது, "எங்களுடைய புதிய புராஜெக்ட்டான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையளர்களுத் தெரிவார்".

    பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறியதாவது, "கிரிமினல்' படத்தின் கதையும், தக்ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும். அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குனர் சொல்வது போல இருந்தது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். 

    • இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’.
    • இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


    கிரிமினல் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' திரைப்படத்தில் 'அவன் இவன்', 'தெகிடி' போன்ற படங்களில் நடித்த ஜனனி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’.
    • இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

     

    கிரிமினல்

    கிரிமினல்

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்பு 'கிரிமினல்' திரைப்படத்தில் 'அவன் இவன்', 'தெகிடி' போன்ற படங்களில் நடித்த ஜனனி இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர் அறிவிப்புகளால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


    • திரைப்பிரபலங்களான கவுதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் தம்பதியினருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
    • இவர்கள் இருவரும் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.

    நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.


    கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

    இந்த நிலையில் காதலர் தினமான இன்று இவர்கள் இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக இருவரும் மலை மீது சென்றனர். இவர்களை பார்த்ததும் பக்தர்கள் பலர் புகைப்படம் எடுக்க திரண்டதால் விரைவாக சாமி தரிசனம் செய்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

    சமீபத்தில் நடிகை அமலாபால், சமந்தா மற்றும் பலர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×