search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Gautham Karthik"

  • படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின.
  • கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

  நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணியில் பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் X. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

  ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

   

  இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இடையில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

   

   

  இந்த நிலையில்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' .
  • இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது.

  பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.


  இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.


  தக் லைஃப் போஸ்டர்

  இந்நிலையில், 'தக் லைஃப்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


  • ஹரிஷ் கல்யாண் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
  • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


  இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  இந்நிலையில், 'பார்க்கிங்' படம் பார்த்துள்ள நடிகர் கவுதம் கார்த்திக் படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று 'பார்க்கிங்' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையாக நான் மிகவும் படத்தை ரசித்தேன். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


  • தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'.
  • இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

  அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


  கிரிமினல் போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • இயக்குனர் மனு ஆனந்த்-இன் முந்தைய படமான எஃப்.ஐ.ஆர். நல்ல வரவேற்பை பெற்றது.
  • மிஸ்டர் எக்ஸ் படத்தில் கவுதம் கார்திக், மஞ்சிமா மோகன், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

  ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் இன்று துவங்கியதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய, இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுடன் கவுதம் கார்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

   

  பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் மிஸ்டர் எக்ஸ் படமும் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. திபு நினன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வின்சென்ட், கலை இயக்கம் ராஜீவன், படத்தொகுப்பை பிரசன்னா மேற்கொள்கின்றனர்.

  ஆர்யா மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சி இன்று படமாக்கப்பட்டது. வரும் வாரங்களில் இந்த படம் தொடர்பான இதர அறிவிப்புகள் வெளியாகலாம். மனு ஆனந்த் கடைசியாக இயக்கிய எஃப்.ஐ.ஆர். படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

  • நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ்.
  • இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.

  பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சரத்குமார் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  • நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ்.
  • இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.


  மிஸ்டர் எக்ஸ் படக்குழு

  பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.  • நடிகர் கவுதம் கார்த்திக் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிரிமினல்’.
  • இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

  அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


  சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.


  கிரிமினல் படக்குழு

  இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


  • இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
  • இப்படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரேவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.


  1947 ஆகஸ்ட் 16 வெற்றி விழா

  இப்படம் கடந்த 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், '1947- ஆகஸ்ட் 16' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


  • ’1947 ஆகஸ்ட் 16’ படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.
  • இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

  1947 ஆகஸ்ட் 16

  இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இந்த படத்தில் கலையரசன், கடைக்காரன் என்ற கதாபாத்திரத்திலும் நீலிமா ராணி சின்ன வயது ஹீரோவின் அம்மாவாகவும் டேவிட், கரிகாலன் என்ற கதாபாத்திரத்திலும் போஸ் வெங்கட், பசுபதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தனர்.

  1947 ஆகஸ்ட் 16 போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, '1947- ஆகஸ்ட் 16' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


  • இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
  • இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

  1947- ஆகஸ்ட் 16 போஸ்டர்

  இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், '1947- ஆகஸ்ட் 16' படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் கலையரசன், கடைக்காரன் என்ற கதாபாத்திரத்திலும் நீலிமா ராணி சின்ன வயது ஹீரோவின் அம்மாவாகவும் டேவிட், கரிகாலன் என்ற கதாபாத்திரத்திலும் போஸ் வெங்கட், பசுபதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

  1947- ஆகஸ்ட் 16 போஸ்டர்

  இப்படம் உலக அளவில் ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


  • கௌதம் கார்த்திக் நடித்துள்ள '1947- ஆகஸ்ட் 16' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
  • இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

  தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவருடைய 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' சார்பில் தற்போது கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16' படத்தை தயாரித்துள்ளார். 


  1947 ஆகஸ்ட் 16

  1947 ஆகஸ்ட் 16

  இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். 


  சிவகார்த்திகேயன்  - ஏ.ஆர்.முருகதாஸ்

  சிவகார்த்திகேயன்  - ஏ.ஆர்.முருகதாஸ்

  இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அவருடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு கார்த்திக் சார் ரொம்ப பிடிக்கும். கார்த்திக் சார் ரொம்ப ஸ்வீட். கவுதம் கார்த்திக் மீட் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு, கார்த்திக் சாரை பார்த்தேன். ரொம்ப அழகான நடிகர்.

  அதை தாண்டி சார் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம், எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது. எல்லாரிடமும் யாருடைய சாயலாவது பார்க்க முடியும். என்னை எடுத்துக் கொண்டால் நான் பாதி ரஜினி சாருடைய நடிப்பை தான் வெளிப்படுத்துவேன் என்றார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

  சிவகார்த்திகேயன், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ×