காதலர் தினம் ஸ்பெஷல்.. பழனியில் சாமி தரிசனம் செய்த கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

திரைப்பிரபலங்களான கவுதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் தம்பதியினருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
காதலர் தினம் ஸ்பெஷல்.. பழனியில் சாமி தரிசனம் செய்த கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
Published on

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

இந்த நிலையில் காதலர் தினமான இன்று இவர்கள் இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக இருவரும் மலை மீது சென்றனர். இவர்களை பார்த்ததும் பக்தர்கள் பலர் புகைப்படம் எடுக்க திரண்டதால் விரைவாக சாமி தரிசனம் செய்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

சமீபத்தில் நடிகை அமலாபால், சமந்தா மற்றும் பலர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com