திருமணத்திற்கு தயாரான கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்?

நடிகர் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதல் செய்து வருவதாக செய்திகள் பரவி வந்தன. சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர்.
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
Published on: 

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்திலும் நடித்து வருகிறார்.

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

இதனிடையே கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்ததாக செய்தி பரவி வந்ததையடுத்து சமீபத்தில் இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

அதன்படி வருகிற நவம்பர் 28- ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நடக்கும் திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com