என் மலர்

  நீங்கள் தேடியது "Raghava Lawrence"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியது.

  பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


   ருத்ரன் ஃபர்ஸ்ட் லுக்

  தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் ரூ. ஒரு கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ருத்ரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளை நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேரில் சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார்.
  த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

  இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

  ராகவா லாரன்ஸ்

  இதையறிந்த ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த நிலையில் பார்வதி அம்மாளை நேரில் சென்று ராகவா லாரன்ஸ் பார்த்துள்ளார். அவரைப் பார்த்ததும் நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கின்றீர்கள் என்றும், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இல்லை, ஆனால் உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

  மேலும், எனக்கு அம்மா மற்றும் கடவுள் மீது தான் மிகுந்த நம்பிக்கை உள்ளது. சூர்யா அவர்களின் முயற்சியினால் தான் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையால் ராசாக்கண்ணு உயிரிழந்த நிலையில், வறுமையில் உள்ள அவரது மனைவியான பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.
  த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

  இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

  ராகவா லாரன்ஸ்

  இந்நிலையில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

  ''செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.

  28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய 'ஜெய் பீம்' படக்குழுவினருக்கும், 'ஜெய்பீம்' படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்''.

  இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கி வந்த ராகவா லாரன்ஸ், தற்போது அந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
  லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

  தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ (Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் உருவாகி வருகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாருகும், சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்கள். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லட்சுமி பாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது. மேலும் படத்தை 2020-ல் ஜூன் 5ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இப்படத்தில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு படைப்பாளிக்கு பணம், புகழை விட தன்மானம் தான் முக்கியம் என்றும், நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலேயே வெளிவந்துவிட்டதாகவும், அந்த போஸ்டரின் டிசைன் தனக்கு திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படைப்பாளியாக தான் இந்த விஷயத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் பாதிக்கப்பட்டு கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வரும் செல்லகுஞ்சி பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
  கஜா புயலால் பலர் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது போலவே அந்தப்பணிகளைச் சரியாகச் செய்தும் வருகிறார். முதல் வீடு சமூக சேவகர் ஆலங்குடி கணேஷன் என்பவர்க்கு வீடு கட்டிக் கொடுத்து சென்றவாரம் கிரகப்பிரவேஷம் நடைபெற்றது. 

  தற்போது  வீடு இழந்து பெரும் துயரை கண்ட தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும் செல்லகுஞ்சி  பாட்டிக்கும் வீடு கட்டிக் கொடுத்து பாட்டிக்கு தண்ணீர் கொடுத்த சோகத்தை ஆனந்தக் கண்ணீரால் ஆற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.  அன்று பாட்டி வீடு இழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் அனுதாபமும், அக்கறையும் லாரன்ஸ் மூலமாக இன்று  நிறைவேறியுள்ளது. இன்னும் இந்த மக்கள் பணிகள் தொடரும் என்று கூறுகிறார் ராகவா லாரன்ஸ்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் - கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பான லட்சுமிபாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
  லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. லாரன்சுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை வேடத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்கள். காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைதொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

  தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.


  படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது.

  படம் வருகிற ஜூன் 5 2020-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறார்.
  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). சமூக சேவகரான இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார். பிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்கு தனது காரில் சென்று விடுவார். எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் அழைத்து செல்வார்.

  இதன் மூலம் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கும், விபத்தில் சிக்கிய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். இது மட்டுமின்றி ஆதரவற்று மரணமடைபவர்களின் உடல்களை மீட்டு அவரே அடக்கம் செய்து வருகிறார்.

  இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை மீட்டு அடக்கம் செய்துள்ளார். அவரின் சமூக சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளன.  இந்தநிலையில் ஆலங்குடியில் மிகச்சிறிய வீட்டில் வசித்து வந்த கணேசனின் வீடு, கடந்த ஆண்டு தமிழகத்தில் வீசிய கஜா புயலில் பலத்த சேதமடைந்தது. வீட்டை இழந்த அவர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆலங்குடிக்கு சென்றிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சமூக சேவகர் கணேசனின் சேவையை அறிந்தும், அவர் வீடின்றி தவிப்பதையும் அறிந்து உடனே அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

  அதன்படி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்று கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வீடு கட்டும் பணி முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து, அதனை கணேசனிடம் ஒப்படைத்தார். தனக்கு வீடு கட்டி கொடுத்து உதவிய ராகவா லாரன்சுக்கு கணேசன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய் என்ற அமைப்பை துவங்கியிருக்கும் ராகவா லாரன்ஸ், அதற்கான விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார்.
  நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கியுள்ளார்.

  தங்கள் பெற்றோர்களை யாரும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.   அன்னையர் தினத்தை முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இவ்விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும் அடுத்த படத்தில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியிருக்கிறார் லாரன்ஸ்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தன்று சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறார். #RaghavaLawrence
  நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கவுள்ளார்.

  இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார் ராகவா லாரன்ஸ். அங்கு ஒரு மூதாட்டி இவரைப் பார்த்ததும் என் மகன் வந்துவிட்டான் என்று ஓடி வந்து கட்டி பிடித்திருக்கிறார். இதைப் பார்த்ததும் நம்மை பார்த்த மகிழ்ச்சியில் இப்படி செய்கிறார் என்று நினைத்திருக்கிறார்.  அடுத்து வேறொருவர் வந்திருக்கிறார். அவரைப் பார்த்தும் அந்த மூதாட்டியும் அதேபோல் கட்டிபிடித்திருக்கிறார். இதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர், இவர்களை இங்கு விட்டுச்சென்ற பிள்ளைகள் அவர்களைப் பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் வந்துவிட்டான் என்று கட்டி பிடித்து தற்காலிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறார் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ராகவா லாரன்ஸ் அவர்களின் மனதிற்குள் எவ்வளவு வலி இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வார்கள். இந்த சம்பவத்தின் பாதிப்பே இந்த அமைப்பு உருவாகிட காரணமாக இருந்தது. இனிமேல் இதுபோல் யாரும் தங்கள் பெற்றோர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

  இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது. என்பதற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்னும் சில நாட்களில் அப்பாடலுக்கு அவரே நடனம் அமைத்து வீடியோவாக வெளியிடவுள்ளார். இப்பாடல் வருகிற மே 12ஆம் தேதி அன்னையர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #Lawrence #RaghavaLawrence
  காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்.

  என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடை பிடியுங்கள்.   நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence
  ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் வெற்றி பெற ரசிகர் ஒருவர் கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

  இந்த வீடியோவை பார்த்த பலரும், ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டு வந்தனர்.

  இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,


  ரசிகர் ஒருவர் இதுபோன்று கிரேன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். எனது ரசிகர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த உங்களது வாழ்க்கையை பணயம் வைக்கும் இது போன்ற செயல்கள் தேவையில்லை. உங்களுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது. இதுபோன்று செய்வதற்கு முன்பாக அவர்களை பற்றி சிந்தியுங்கள்.

  ஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், தேவையான குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். 

  எனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களை மறுபடி செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம். இவ்வாறு கூறியிருக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print