என் மலர்

  நீங்கள் தேடியது "Vetri Maaran"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி -2 படத்தில் நடித்து வருகிறார்.
  • இவரின் ‘அதிகாரம்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பண்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.


  அதிகாரம்

  இதனிடையே இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் 'அதிகாரம்' திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு இயக்குனர் வெற்றி மாறான் கதை, திரைக்கதை, எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.


  அதிகாரம் படக்குழு

  இதைத்தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாததால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'அதிகாரம்' திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் படப்பிடிப்பு குறித்த திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகிறது என்று படக்குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் வடசென்னை பிரபலம் இணைந்திருக்கிறார். #Asuran #Dhanush #VetriMaaran
  `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

  மேலும் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் ‘அசுரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். #Asuran #Dhanush #VetriMaaran
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Asuran #Dhanush #VetriMaaran
  `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

  தற்போது இவரின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் பாலாஜி சக்திவேல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாலாஜி சக்திவேலுடன் நடிகர் பசுபதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் நிற்கிறார்கள்.  தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தை குடியரசு தினத்தில் தொடங்க இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். #Dhanush #Asuran
  தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

  இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது ஏற்கனவே செய்திகள் வெளியானது. `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி தொடங்க இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். #Dhanush #Asuran
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அசுரன்’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். #Asuran #Dhanush
  தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

  இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

  தற்போது இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி இணைய இருப்பதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இப்பவே அதிகரிக்க ஆரம்பமாகிவிட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடசென்னை படத்தின் 2ம் பாகத்தை எடுக்க வேண்டாம் என்று இயக்குனர் வெற்றிமாறனுக்கு ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். #VadaChennai #VetriMaaran
  தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அமீர், சமுத்திரகனி, கிஷோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'வடசென்னை'. இதன் அடுத்த பாகத்தை அடுத்த ஆண்டு எடுத்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம் சார்பில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

  இதில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்தார். அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், “வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள். ’வடசென்னை’ என்று சொன்னாலே ஏளனமாகவும் பயமாகவும் பார்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது உங்களின் ’வடசென்னை’ப் படத்தால் அது மீண்டும் வந்துவிட்டது.

  இரவு நேரத்தில், ’வடசென்னை’ பகுதிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள். எனவே தயவுசெய்து ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள். போதும். ’வடசென்னை’ முதல் பாகத்திலேயே ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப்படுத்திவிட்டீர்கள்.  தயவு செய்து கெஞ்சிக் கேட்கிறோம், ’வடசென்னை 2’ எடுக்கவே எடுக்காதீர்கள்” என்று மிகவும் கோபமாக பேசத் தொடங்கினார். அவருடைய பேச்சுக்கு இடையே பலர் தடுத்தும், தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன், “உங்களின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய விளக்கத்தையும் கேளுங்கள். அடுத்தவர் பேசவும் அனுமதி கொடுங்கள். இப்போது, ’வடசென்னை 2’ எடுக்கமாட்டேன் என்று சொன்னால், சந்தோ‌ஷமாகி விடுவீர்களா? இங்கு யாராவது ’வடசென்னை’ நல்லாயிருக்கு என்று சொன்னார்களா? எல்லோரும் அவரவர் கருத்துக்களை வைக்கிறார்கள். அதுபற்றி விளக்குகிறேன். அவ்வளவுதான்” என்று அமைதியுடன் பதிலளித்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வட சென்னை’ படத்தில் சர்ச்சை காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கி விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #VadaChennai
  வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடித்த வட சென்னை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று மீனவர் நல சங்கத்தினர் வற்புறுத்தினர்.

  சர்ச்சை காட்சிகளையும், வசனங்களையும் நீக்காவிட்டால் வருகிற 29-ந் தேதி சாஸ்திரி பவன் எதிரில் போராட்டம் நடத்துவோம் என்று தணிக்கை குழு அதிகாரிக்கு திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து சர்ச்சை காட்சிகளை நீக்கி விடுவோம் என்று படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

  அவர் கூறும்போது, “வடசென்னை படம் எந்த ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ பற்றியது அல்ல. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தில் கடலுக்குள் அமீரும், ஆண்ட்ரியாவும் நடித்த முதல் இரவு காட்சியையும், சில வசன காட்சிகளையும் நீக்க முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.  இதைத் தொடர்ந்து வட சென்னை படத்தை தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்து முதல் இரவு காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர் ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு காட்சிகளை இணைத்துள்ளனர்.

  அதுபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சர்ச்சை வசனங்களும் நீக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வழக்கு எண் 18/9, திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் தயாரிக்கும் படத்தில் மனீஷா யாதவ் நடிக்க இருக்கிறார். #ManishaYadav
  கிராமப்புற வேடங்களுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே உள்ளனர். அவர்களில் மனீஷா யாதவுக்கு முக்கிய இடம் உள்ளது. வழக்கு எண் 18/9 மூலம் அறிமுகமானவர் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டினார். 

  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இரு படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ‘திருநாள்’ படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். துப்பறியும் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக மனீஷா நடிக்கிறார்.   இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதுதவிர அறிமுக இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் ‘சண்டா முனி’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹாரர் காமெடியில் தயாராகும் இந்தப் படத்தில் நட்ராஜ், யோகி பாபு ஆகியோருடன் மனீஷா நடிக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பெயர் பெற்ற தனுஷ், தற்போது இசைக் கலைஞராக மாறியிருக்கிறார். #Dhanush #VadaChennai
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவதாக நடித்துள்ள படம் வட சென்னை. அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

  சமீபத்தில் வெளியான வடசென்னை டீசர் பெரிதும் பேசப்பட்டதாலும் மூன்றாவது முறையாக வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் டுவிட் மூலம் தனுஷ் இப்படத்தில் நடித்ததோடு மட்டும் அல்லாமல் இசையிலும் பணிபுரிந்திருப்பதாக தெரிகிறது.   அந்த டுவிட்டில் ‘வடசென்னை தொடர்பாக அப்டேட் கொடுங்கள் என நிறைய மெசேஜ்கள் வந்துகொண்டே இருக்கிறது. மிகச் சிறப்பான, பயனுள்ள பல வி‌ஷயங்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தை உருவாக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் பாடல் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். இசைக்கலைஞர் தனுஷின் பங்கும் இதில் சேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் டீசரை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அதை பாராட்டி ட்விட் செய்திருக்கிறார். #Dhanush #VadaChennai
  ‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

  இந்நிலையில் முதல் பாகத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று டிரெண்டிங்கானது. தற்போது இந்த டீசரை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ‘என்னுடைய நண்பர் பன்முகம் கொண்ட நடிகர் தனுஷின் ‘வடசென்னை’ டீசர் பார்த்தேன். மிகவும் படபடப்பாகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

  சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.  தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காலா படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிக்காக பிரபல இயக்குனர்கள் இரண்டு பேர் படம் இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். #Kaala #Rajinikanth
  ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. காலா பட வெளியீட்டுக்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கும் சென்றுவிட்டார் ரஜினி.

  அரசியலில் வேகம் எடுத்த ரஜினி அதை அப்படியே விட்டுவிட்டு படப்பிடிப்புக்கு சென்றது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அடுத்து இன்னும் 2 படங்களில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

  இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரிடமும் கதை கேட்டு காத்திருக்க சொல்லி இருக்கிறார் ரஜினி. வெற்றிமாறன் கூறிய கதை வடசென்னையை மையப்படுத்திய ஒரு கல்ட் கதை.  முருகதாஸ் கூறியது அரசியல் கதை. முதலில் முருகதாஸ் இயக்கத்திலும் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்திலும் நடிக்க திட்டமிட்டு உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் திரும்பும் ரஜினி சில நாட்கள் கட்சி பணிகளை கவனித்துவிட்டு பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தன்னுடைய பிறந்த நாளுக்கு வடசென்னை மூலம் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார். #Dhanush #VadaChennai
  ‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

  இந்நிலையில் முதல் பாகத்தின் டிரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் தனுஷின் பிறந்தநாள். இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

  சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.


  தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைக்கா புரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. 

  தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு ‘வட சென்னை’ மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.