என் மலர்
OTT

வெற்றி மாறன் தயாரிப்பில் வெளியான Bad Girl படத்தின் ஓடிடி அப்டேட்
- இத்திரைப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl என்ற திரைப்படத்தை தயாரித்தனர்.
இத்திரைப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.
செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில், Bad Girl திரைப்படம் வரும் நவம்பர் 4 தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






