என் மலர்
நீங்கள் தேடியது "வெற்றி மாறன்"
இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து "அரசன்" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
- இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
லக்ஷமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமான "சைலப்பன் சைக்கிள் மார்ட்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார்.
தினசரி வாழ்க்கையில் எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாக திரையில் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, கிராமத்தின் முகம், அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு தென் தமிழகத்தில் உள்ள கிராமத்தில் வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களது வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்து, குடும்பத்துடன் அனைவரும் ரசித்து மகிழும் வகையில் குடும்ப சித்திரமாக இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுகா.
இந்தப் படத்தில் இசக்கி கார்வண்ணன், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தான லட்சுமி மற்றும் மீனாட்சி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இத்திரைப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl என்ற திரைப்படத்தை தயாரித்தனர்.
இத்திரைப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.
செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில், Bad Girl திரைப்படம் வரும் நவம்பர் 4 தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.
இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
கதைக்களம்
பள்ளியில் படித்து வரும் நாயகி அஞ்சலி சிவராமனுக்கு படிப்பு சரியாக வரவில்லை. தன் பள்ளியில் படிக்கும் ஹிருது ஹாரூனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அஞ்சலியின் தாய் சாந்தி பிரியாவுக்கு தெரியவருகிறது. பிறகு பள்ளிக்கே தெரிந்து காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருவரும் பிரிகிறார்கள்.
அஞ்சலியை வேறொரு பள்ளியில் சேர்க்கிறார்கள். அதன்பிறகு நான் என் விருப்பம்படி வாழப்போகிறேன் என்று சொல்லி விடுதியில் தங்கி படிக்க ஆரம்பிக்கிறாள். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சீனியர் ஒருவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அஞ்சலியை ஏமாற்றி விடுகிறார். அதன் பிறகு வேலைக்கு செல்லும் போது டிஜே உடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென்று இருவரும் பிரிகிறார்கள்.
இறுதியில் நாயகி அஞ்சலியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். பள்ளி, கல்லூரி, வேலை என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், கோபம், சோகம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஹிருது ஹாரூன், டிஜே ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்ணின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வர்ஷா. ஒரு பெண்ணுக்கு காதல், மோதல், பிரிவு, வலி இதெல்லாம் வரும், போகும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு நகந்துக்கொண்டே இருக்க வேண்டும், நமக்காக காலம் நிற்காது என்பதே சொல்லி இருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் பார்க்கும் போது, பெண்ணின் ஆட்டோகிராப் வெர்ஷன் போல் இருக்கிறது. இந்த கதை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும். அனைத்து தர ரசிகர்களும் பிடிப்பதில் சந்தேகமே.
இசை
அமித் திரிவேதி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.
ஒளிப்பதிவு
ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, இளவரசர் ஆண்டர்சன் ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி அமைந்துள்ளது.
தயாரிப்பு
கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்: 2/5
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார்.
மேலும் அந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது " நான் 17-வயது இருக்கும் போது 3 காம புத்தகங்களை வாங்கி அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து படித்தேன். என் அம்மா மார்க்கெட் சென்று வந்த பிறகு நான் காம புத்தகங்கள் படிப்பது என் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது அதை அவள் எடுத்து மேஜையின் மீது வைத்தாள். அப்பொழுது என் தாயை கடவுளாக பார்த்தேன். இதுவே அந்த 17 வயது சிறுவன் ஒரு பெண்ணாக இருந்தால் ஒரு தாய் அவளை அப்படி வளர்க்க மாட்டாள், நாம் பெண்ணிற்கு அந்த சுதந்திரத்தை கொடுக்கவில்லை." என கூறினார்.
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார் அதில் அவர் கூறியதாவது " தயாரிப்பாளரில் வேலை மிகவும் கடினமானது, இயக்குநரின் வேலை அதை ஒப்பிடும் போதுஜ் ஜாலியாக இருக்கிறது. தயாரிப்பாளரின் பொறுப்பு மிகப்பெரியது. இதனால் நான் தயாரிக்கும் கடைசி திரைப்படமாக Bad Girl இருக்கும். அத்துடன் கிராஸ் ரூட் நிறுவனத்தில் கடையை மூடுகிறோம்" என கூறினார்.
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
வெற்றி மாறனின் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் "Bad Girl" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை இன்று கமலா திரையரங்கிள் 1000 நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது. அப்போது படத்தை இளைஞர்கள் மிகவும் ரசித்து பார்த்தனர். படம் முடித்துவிட்டு வெற்றிமாறனிடம் அடுத்த படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு வெற்றி அடுத்து சிம்புவின் படம் இயக்குகிறேன் அதற்கான அப்டேட் இன்னும் 10 நாட்களில் வரும் அதை தொடர்ந்து வட சென்னை2 இயக்குவேன் என கூறினார்.
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டது.
- ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய படம், வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் 'கேங்ஸ்டர்' கதை என்றும், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் கைவிடப்பட்டுள்ளதோ? என்ற கேள்வி எழுந்தது.
சம்பள விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிம்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
தற்பொழுது இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "தொடங்கியது! மற்றவர்களின் அலறலைத் தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில்." என பதிவிட்டுள்ளார். இது சிம்பு ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
- தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.
- இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
- இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்
பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான `நான் தனி பிழை' வரும் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.






