என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vetrimaaran"

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • படத்தின சிம்புவின் கதாப்பாத்திரம் பலரால் பாராட்டை பெற்று வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின சிம்புவின் கதாப்பாத்திரம் பலரால் பாராட்டை பெற்று வருகிறது.

     

    சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வாடிவாசல் மற்றும் வட சென்னை 2 ஆகிய திரைப்படங்களை இயக்க வுள்ளார். இந்த கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • இந்த படம் திரையரங்கில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் வெளியானது.
    • மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக வெளியாக உள்ளது.

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

    இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கினார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். திரைப்படத்தின் இரண்டு பாகமும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் உள்ளது.

    இந்நிலையில் இந்த படம் திரையரங்கில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் வெளியான நிலையில், மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    • விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார்.

    விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான பூஜை விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது.

    இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார். இவர் வெற்றி மாறனின் துணை இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார் . இப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையாக இப்படம் உருவாகவுள்ளது.

    படத்தில் விக்ரம் பிரபு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வரும் வாரங்களில் தொடங்க இருக்கிறது.

    படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொளண்டார்.பிலோமின்ராஜ் படத்தொகுப்பை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல்.
    • படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

    திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தானு கூறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் வெற்றி மாறன் வாடிவாசல் திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பை பற்றி பேசியுள்ளார் அதில் அவர் " என்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் நான் தான் இயக்குகிறேன். படத்தின் மீதுள்ள மக்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நான் பொறுப்பேற்க முடியாது. நான் எடுக்கும் திரைப்படங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். நான் என் படத்தை 100 சதவீதம் கமிட்மண்ட்டோடு தான் இயக்குகிறேன். என்னால் அதை மட்டும் தான் தரமுடியும் " என கூறியுள்ளார்.

    வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், படத்தில் பயன்படுத்துவதற்காக மாடு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • தெலுங்கு நடிகரான சுகாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் சூரி ஒரு மீனவனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

    சூரி இப்படத்தில் முத்துகாளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    தெலுங்கு நடிகரான சுகாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இவர் இப்படத்தில் புலி கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார். படக்குழு தற்பொழுது தெலுங்கு மொழி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு மொழியில் சுகாஸ் கதாநாயகனாகவும், சூரி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்
    • இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.

    மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் சூரி ஒரு மீனவனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

    சூரி இப்படத்தில் முத்துகாளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    தெலுங்கு நடிகரான சுகாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இவர் இப்படத்தில் புலி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாளை காலை 11.07 மணிக்கு படத்தின் தெலுங்கு மொழியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சுகாஸின் கதாப்பாத்திர போஸ்டரை வெளியிடவுள்ளனர்.

    • தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள்.
    • ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார்.

    மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது:

    தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள். அந்த தலைவர்களை நமக்கு தெரியவே இல்லை. அது மாதிரி நமக்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கேயே இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார். அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார். அடுத்த தலைமுறையும் ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நின்று கேள்வி கேட்க போகிறார்கள்.

    விடுதலைக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது ஒரு மார்க்சிஸ்ட் மாணவனாகவும் இருக்கிறேன்.

    எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சிய கட்டமைப்பு மேல் கட்டமைக்கப்படவில்லை என்றால் ஏதோ கட்டத்தில் மக்களுக்கு எதிர்நிலையில் போய் நின்று விடும் என்பது என்னுடைய புரிதலாக உள்ளது.

    இதெல்லாம் 4 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட விஷயம் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹரிஷ் கல்யாண் தற்போது `டீசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் வைபாகவும் குத்து பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை ரோகேஷ் மற்றும் ஜிகேபி எழுதியுள்ளனர்.

    இந்த நிலையில் டீசல் படத்தை இயக்குனர் வெற்றி மாறன் சமீபத்தில் பார்த்து படக்குழுவை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்படமும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
    • வெற்றிமாறன், விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.

    தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.




    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது விஜய்யுடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய், அசூரன் பட வசனத்தை பேசியது எனக்கு சந்தோஷம். விஜய்யுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். தற்போது விஜய் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார், நானும் விடுதலை-2 மற்றும் வாடிவாசல் படங்களில் பிசியாக இருக்கிறேன். இப்படங்களின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விஜய்யுடன் விரைவில் இணைவேன் என்றார்.

    • ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி வி பிரகாஷ், இவானா, இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். கள்வன் படத்தின் டிரெயிலர் 11.30 மணி அளவில் வெளியானது.

    படத்தின் டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஊரினுள் யானை நழைந்ததாக தகவல் வருகிறது அதனால் யாரும் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கின்றனர். அக்காட்டுப் பகுதியில் காவல் நிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

    அப்பொழுது கதாநாயகனான ஜி வி பிரகாஷ் மற்றும் அவன் கூட்டாளியான தீனா காட்டு பகுதிக்குள் காவலுக்காக செல்கின்றனர் அதற்கடுத்து அவர்களுக்கு என்ன ஆனது, காட்டில் இருந்து அவர்கள் எப்படி யானையிடம் இருந்து மீண்டு வந்தனர் என்பதே மீதிக்கதை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யூ ட்யூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.
    • இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.

    டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டிரெயிலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. படத்தின் டிரெயிலருக்கு மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.

    இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியானபோதே  மிக ஹிட்டாகியது. தற்பொழுது இப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டதால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×