என் மலர்

  நீங்கள் தேடியது "Andrea"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
  • இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

  மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

  இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.


  ஆண்ட்ரியா

  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

  இப்படத்தின் இரண்டாவது பாடல் "நெஞ்சை கேளு" சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


  ஆண்ட்ரியா

  இதைத்தொடர்ந்து படக்குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் பெற மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
  • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.


  பிசாசு 2

  இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.


  பிசாசு 2

  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் பிரியங்கா குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

  இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் வட்டம்.
  • இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.

  நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

  வட்டம்

  வட்டம்

  வட்டம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது, ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள் என்றார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி யார் என்பதை மாளிகை பட விழாவில் கூறியிருக்கிறார். #Maaligai #VijayAntony
  ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாளிகை’. "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

  இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அதன்பின் பேசிய அவர், ‘நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது.   இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாளிகை பட விழாவி பேசிய ஆண்ட்ரியா, அவர்களுக்கு தெரிந்தது, ஏன் இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார். #Andrea
  ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாளிகை’. "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

  இதில் ஆண்ட்ரியா பேசும்போது, ‘இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை.   நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்திருக்கிறார்கள். #Andrea
  ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.

  இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார்.  தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் பட்டன் போடாத டாப்ஸ் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி வேடத்தை அவருக்கு இயக்குனர்கள் யாராவது தாருங்களேன் என்று சில ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அந்த கவர்ச்சி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கு இணையான சம்பளம் கிடைக்காது என்று கூறியுள்ளார். #Andrea
  ஆண்ட்ரியா அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘சினிமாவில் சம்பளத்தில் வித்தியாசங்கள் இருக்கு. `தரமணி’ ரிலீசுக்கு முன்பே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எனக்கு நிறைய வந்தது. அந்த கதைகள்ல நான்தான் ஹீரோ.

  ஆனா, சம்பளம் பற்றிப் பேசினால், ‘ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட். அதனால சம்பளம் அவ்ளோ கொடுக்க முடியாது’ன்னு சொல்வாங்க. இங்கே ஒரு பெண்ணா எவ்வளவு உழைத்தாலும் ஆணுக்கு இணையான சம்பளம் கிடைக்காது.   இது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை தருகிற துறை இல்லை. ஆனால், இப்போது கொஞ்சம் மாறிட்டு வருது. அந்த மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது’ என்று கூறியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வட சென்னை’ படத்தில் சர்ச்சை காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கி விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #VadaChennai
  வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடித்த வட சென்னை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று மீனவர் நல சங்கத்தினர் வற்புறுத்தினர்.

  சர்ச்சை காட்சிகளையும், வசனங்களையும் நீக்காவிட்டால் வருகிற 29-ந் தேதி சாஸ்திரி பவன் எதிரில் போராட்டம் நடத்துவோம் என்று தணிக்கை குழு அதிகாரிக்கு திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து சர்ச்சை காட்சிகளை நீக்கி விடுவோம் என்று படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

  அவர் கூறும்போது, “வடசென்னை படம் எந்த ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ பற்றியது அல்ல. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தில் கடலுக்குள் அமீரும், ஆண்ட்ரியாவும் நடித்த முதல் இரவு காட்சியையும், சில வசன காட்சிகளையும் நீக்க முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.  இதைத் தொடர்ந்து வட சென்னை படத்தை தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்து முதல் இரவு காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர் ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு காட்சிகளை இணைத்துள்ளனர்.

  அதுபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சர்ச்சை வசனங்களும் நீக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா, மீடூ குறித்த கேள்விக்கு கடின உழைப்பு மீது மட்டுமே நம்பிக்கை என்று கூறியிருக்கிறார். #VadaChennai #MeToo
  வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பேசும் ஆண்ட்ரியா சமீபத்திய பரபரப்பான மீடூ இயக்கம் பற்றியும் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். ‘மீ டூ’ இயக்கத்தை வரவேற்கிறேன்.

  தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல.

  வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.  நல்ல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். படுக்கைக்கு செல்லாமல் தான் இத்தனை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்திறேன். கடின உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பவள் நான்’ என்று கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ள படம் வடசென்னை. இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது.

  வடசென்னை ரிலீசை ஒட்டி தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிம்பு அதில் கூறியிருப்பதாவது,  அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush #STR

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முன்னோட்டம். #VadaChennai #Dhanush
  தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

  வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இசை - சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு - ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு - வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை இயக்குனர் - ஜாக்கி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் - ராபர்ட், ஆடை வடிவமைப்பு - அமிர்தா ராம், தயாரிப்பு - தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் - வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன்.  படம் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் அமீர் பேசும் போது,

  வடசென்னை படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நிறைய கதைகளில் நடிக்க அழைக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது. தனுஷின் திறமையை பார்க்கும் போது தான், ஏன் ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக 3 படங்கள் இயக்குகிறார் என்பது தெரிகிறது. நிச்சயமாக வெற்றிமாறன் என்ற இயக்குநர் வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது. 

  மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #VadaChennai #Dhanush 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print