ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகி மற்றும் நடிகையும் ஆவார்.
இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக தான் அறிமுகமானார்.
அதன் பின் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்
தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவருடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.